விஷால் பட ஷூட்டிங்கிற்கு தடை விதித்த போலீஸ்: ரூ.12 லட்சம் நஷ்டம்
விழுப்புரம்: விஷாலின் அயோக்யா படப்பிடிப்பை நடத்த போலீசார் தடை விதித்த சம்பவம் நடந்துள்ளது.
வெங்கட் மோகன் இயக்கத்தில் விஷால், ராஷி கன்னா உள்ளிட்டோர் நடித்து வரும் படம் அயோக்யா. கையில் பீர் பாட்டிலுடன் விஷால் போஸ் கொடுத்த போஸ்டர் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது.
போலீஸ் அதிகாரியாக நடித்து வரும் விஷால் தன் கையில் இருந்த பீர் பாட்டிலுக்கு ஒரு பலே விளக்கம் அளித்தார். அயோக்யா படப்பிடிப்பு தற்போது விழுப்புரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நடந்து கொண்டிருக்கிறது.

கூனிமேடு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் படப்பிடிப்பு நடத்த அயோக்யா படக்குழு போலீசாரிடம் அனுமதி பெற்றது. இதையடுத்து விஷால் மற்றும் படக்குழு அந்த வீட்டிற்கு வந்தனர். அப்போது போலீசார் அங்கு வந்து படப்பிடிப்பை நடத்த தடை விதித்தனர்.
அந்த வீட்டிற்கு அருகே மசூதி உள்ளதால் படப்பிடிப்பை நடத்தக் கூடாது என்று போலீசார் கறாராக கூறிவிட்டனர். இதனால் வேறு வழியில்லாமல் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு படக்குழு கிளம்பிச் சென்றது. படப்பிடிப்பை ரத்து செய்ததால் படக்குழுவுக்கு ரூ. 12 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாம்.


Click it and Unblock the Notifications











