அடுத்தடுத்து லீக்காகும் பொன்னியின் செல்வன் காட்சிகள்... உச்சகட்ட டென்ஷனில் மணிரத்னம்

சென்னை : மணிரத்னத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டு பாகங்களும் ஒரே சமயத்தில் படமாக்கப்பட்டு வருகிறது. தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு என பல்வேறு மொழிகளில் ரிலீஸ் செய்யப்பட உள்ள இந்த படத்தின் ஷுட்டிங் இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது.

இதுவரை எப்போதும் இல்லாத அளவிற்கு இந்திய சினிமாவின் தலை சிறந்த, புகழ்பெற்ற நடிகர், நடிகைகளான விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம் பிரபு, பிரபு, ஜெயராம், நிழல்கள் ரவி, ரஹ்மான், லால், சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

வெளிநாடுகளில் ஷுட்டிங்

வெளிநாடுகளில் ஷுட்டிங்

கொரோனா, லாக்டவுன் காலத்திலும் அனுமதி கிடைக்கும் போதெல்லாம் படத்தின் ஷுட்டிங்கை விறுவிறுப்பாக நடத்தப்பட்டது. தாய்லாந்து, இலங்கை, சென்னை, ஐதராபாத், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பொன்னியின் செல்வன் ஷுட்டிங் நடத்தப்பட்டது.

ஷுட்டிங்கை முடிக்கும் நடிகர்கள்

ஷுட்டிங்கை முடிக்கும் நடிகர்கள்

தற்போது முக்கிய நட்சத்திரங்கள் நடிக்கும் படப்பிடிப்பு மத்திய பிரதேசத்தின் பல பகுதிகளில் நடத்தப்பட்டு வருகிறது. ஜெயம் ரவி, விக்ரம் என அடுத்தடுத்து ஒவ்வொரு நடிகராக படத்தில் தங்களின் போர்ஷனை முடித்து விட்டு, அடுத்த படங்களுக்கான வேலைகளில் இறங்கி வருகின்றனர்.

வெளியாகும் ஃபோட்டோக்கள்

வெளியாகும் ஃபோட்டோக்கள்

இன்னும் 10 முதல் 20 சதவீதம் படப்பிடிப்புக்கள் மட்டுமே மீதமிருப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் பொன்னியின் செல்வன் ஷுட்டிங் ஸ்பாட் ஃபோட்டோக்கள் அடுத்தடுத்து வெளியாகி வருவது படக்குழுவினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதை தடுக்க முடியாமலும் படக்குழுவினர் திணறி வருகின்றனர்.

லீக்கான ஐஸ்வர்யா ராய் ஃபோட்டோ

லீக்கான ஐஸ்வர்யா ராய் ஃபோட்டோ

சமீபத்தில் தான் ஐஸ்வர்யா ராய், ராணி கெட்அப்பில் இருக்கும் ஃபோட்டோ சோஷியல் மீடியாவில் வெளியானதால் அப்செட் ஆகி, செம டென்ஷன் ஆகி விட்டாரார் மணிரத்னம். இனி ஷுட்டிங் ஸ்பாட் ஃபோட்டோக்கள், வீடியோக்களை பகிர்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

கோயிலில் செருப்பணிந்த த்ரிஷா

கோயிலில் செருப்பணிந்த த்ரிஷா

ஷுட்டிங் ஸ்பாட்டில் ஃபோட்டோக்கள், வீடியோக்கள் எடுக்க ஏற்கனவே தடையும் விதிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் அடிக்கடி ஏதாவது ஒரு ஃபோட்டோக்கள் வெளியாகி வருகிறது. இந்தூர் ஷுட்டிங்கில் சிவலிங்கம், நந்திக்கு இடையே த்ரிஷா செருப்பு காலுடன் நடந்த ஃபோட்டோவும் வெளியாகி சர்ச்சையை கிளப்பி உள்ளது.

வீடியோவும் லீக்கானதா

வீடியோவும் லீக்கானதா

இந்நிலையில் தற்போது கார்த்தி, த்ரிஷா நடிக்கும் முக்கிய காட்சியின் வீடியோ இணையத்தில் லீக்காகி உள்ளது. இது மிக முக்கியமான பாடல் காட்சியின் ஒரு பாகமாம். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருவதால் மணிரத்னம் செம டென்ஷன் ஆகி விட்டாராம். அதிக பாதுகாப்புடன் இருந்தும் இது எப்படி நடந்தது என புரிமல் படக்குழுவினர் அதிர்ச்சியில் உள்ளனர்.

சட்ட நடவடிக்கை

சட்ட நடவடிக்கை

பொன்னியின் செல்வன் படம் தொடர்பான ஃபோட்டோக்கள், வீடியோக்கள் தொடர்ந்து லீக்காகி வருவதால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா ப்ரொடக்ஷன்ஸ் ஆரம்ப கட்ட பணிகளை துவக்கி விட்டனராம். பாதுகாப்பை மேலும் பலப்படுத்தவும் திட்டமிட்டுள்ளனராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X