பொன்னியின் செல்வன் படத்தில் ஐஸ்வர்யா ராய்யின் கெட்டப் இதுதான்.. லீக்கானது ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ!

சென்னை: பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு தள போட்டோஸ் இணையத்தில் கசிந்து வைரலாகி வருகிறது.

மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட் செலவில் உருவாகி வரும் படம் பொன்னியின் செல்வன்.

இந்தப் படத்தை மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரடெக்ஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்து வருகிறது.

பொன்னியின் செல்வன் நடிகர்கள்

பொன்னியின் செல்வன் நடிகர்கள்

பொன்னியின் செல்வன் படத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், பார்த்திபன், விக்ரம் பிரபு, லால், அஸ்வின், ரியாஸ் கான், பிரபு, ஜெயராம், கிஷோர், ரஹ்மான், நிழல்கள் ரவி, உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். பொன்னியின் செல்வன் படத்தில் கலை இயக்குநராக தோட்டா தரணி பணியாற்றுகிறார்.

புதுச்சேரியில் இரண்டாவது ஷெட்யூல்

புதுச்சேரியில் இரண்டாவது ஷெட்யூல்

இப்படத்தின் முதல் படப்பிடிப்பு ஷெட்யூல் தாய்லாந்தில் நடைபெற்றது. கடந்த ஆண்டு முதல் ஷெட்யூல் நிறைவடைந்தது. அதனை தொடர்ந்து சென்னையில் இரண்டாவது ஷெட்யூலை நடத்த திட்டமிட்டனர். ஆனால் புதுச்சேரியில் இரண்டாவது ஷெட்யூல் படப்பிடிப்பை தொடங்கினர்.

ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டி

ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டி

அங்கு 6 நாட்கள் படப்பிடிப்பு முடிந்த நிலையில் அடுத்த ஷெட்யூலுக்காக படக்குழு ஹைத்ராபாத் சென்றது. ஹைத்ராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் படக்குழு படப்பிடிப்பை நடத்தியது. அங்கு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் படப்பிடிப்பு நிறைவு பெற்றது.

குதிரையில் சென்ற போது விபத்து

குதிரையில் சென்ற போது விபத்து

அப்போது நடிகர் கார்த்திக்கு காயம் ஏற்பட்டதாகவும் தகவல் வெளியானது. குதிரையில் சென்ற போது தூக்கி வீசப்பட்டார் நடிகர் கார்த்தி. இதில் லேசான காயங்களுடன் தப்பினார் கார்த்தி. அதனை தொடர்ந்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா அச்சுறுத்தல், லாக்டவுன் உள்ளிட்ட காரணங்களால் 90 நாட்களுக்கும் மேலாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

வட இந்திய மாநில கோட்டைகள்

வட இந்திய மாநில கோட்டைகள்

அதன்பிறகு இலங்கையில் படப்பிடிப்பை தொடங்க முடிவு செய்தார் மணிரத்னம். ஆனால் பெருந்தொற்று காலம் என்பதால், வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடத்துவது படக்குழுவுக்கு பெரும் சவாலாக இருந்தது. இதனை தொடர்ந்து இந்தியாவிலேயே ஹைத்ராபாத், ஜெய்சல்மார், ஜெய்பூர், மத்தியப்பிரதேசம் என லொகேஷன்களில் படப்பிடிப்பை நடத்த படக்குழு முடிவு செய்தது.

கடந்த மாதம் புதுச்சேரியில் படப்பிடிப்பு

கடந்த மாதம் புதுச்சேரியில் படப்பிடிப்பு

ஜூன் மாதம் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. அப்போது படக்குழுவில் 19 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் புதுச்சேரியில் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது.

ஆதித்ய கரிகாலனாக விக்ரம்

ஆதித்ய கரிகாலனாக விக்ரம்

இந்தப் படத்தில் யார் யார் என்னென்ன கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்கள் என்பது குறித்த தகவல் அண்மையில் வெளியானது. அதன்படி சுந்தர சோழராக பிரகாஷ்ராஜ் நடிக்கிறார். ஆதித்ய கரிகாலனாக விக்ரம் நடிக்கிறார். அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவி நடிக்கிறார். மேலும் வந்தியத் தேவனாக கார்த்தி நடிக்கிறார்.

நந்தினி கதாப்பாத்திரத்தில் த்ரிஷா

நந்தினி கதாப்பாத்திரத்தில் த்ரிஷா

குந்தவை கதாப்பாத்திரத்தில் த்ரிஷா நடிப்பதாகவும்,
நந்தினி கதாப்பாத்திரத்தில் ஐஸ்வர்யா ராய் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. பெரிய பழுவேட்டரையர் கதாப்பாத்திரத்தில் சரத்குமாரும், சின்ன பழுவேட்டரையர் கதாப்பாத்திரத்தில் பார்த்திபனும் நடிக்கின்றனர். ஆனால் இந்த பட்டியலை படக்குழு வெளியிட வில்லை.

ஐஸ்வர்யா ராய்யுடன் வரு சந்திப்பு

ஐஸ்வர்யா ராய்யுடன் வரு சந்திப்பு

இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் ஐஸ்வர்யா ராய் நடிக்கும் காட்சிகள் கடந்த சில நாட்களாக படமாக்கப்பட்டு வருகிறது. புதுச்சேரியில் நடத்தப்பட்ட படப்பிடிப்பில் நடிகை ஐஸ்வர்யா ராய்யின் காட்சிகள் தான் படமாக்கப்பட்டது. அப்போது நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் மற்றும் அவரது சகோதரி பூஜா ஆகியோர் ஐஸ்வர்யா ராயை சந்தித்தனர்.

பிங்க் நிற சேலையில் அதிக அணிகலன்கள்

பிங்க் நிற சேலையில் அதிக அணிகலன்கள்

அந்த போட்டோக்கள் இணையத்தில் வைரலானது. இந்நிலையில் ஐஸ்வர்யா ராய் பிங்க் நிற சேலையில் படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த போட்டோவில் பட காட்சிக்காக நடிகை ஐஸ்வர்யா ராய் ஏராளமான அணிகலன்களை அணிந்துள்ளார். மேலும் அவரை சுற்றி அவருடைய உதவியாளர்கள் நிற்கின்றனர்.

படப்பிடிப்புக்கு தயாராக ஐஸ்வர்யா ராய்

படப்பிடிப்புக்கு தயாராக ஐஸ்வர்யா ராய்

மேலும் ஐஸ்வர்யா ராய் படப்பிடிப்புக்கு தயாராக நிற்கிறார். இந்த போட்டோ இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.
தற்போது பொன்னியின் செல்வன் படக்குழு மத்திய பிரதேச மாநிலம் ஓர்ச்சாவில் படப்பிடிப்பை நடத்தி வருகிறது. இந்த படப்பிடிப்பில் சமீபத்தில் சியான் விக்ரம் பங்கேற்றார். மேலும் ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோரும் இந்த ஷெட்யூலில் பங்கேற்றுள்ளனர்.

விக்ரம் குதிரையில் செல்லும் காட்சி

விக்ரம் குதிரையில் செல்லும் காட்சி

ஓர்ச்சா கோட்டையில் நடந்து வரும் படப்பிடிப்பில் ஐஸ்வர்யா ராய், த்ரிஷா நடிக்கும் காட்சிகள் கடந்த 3 நாட்களாக படமாக்கப்பட்டன. இதேபோல் கோட்டையின் முன்பக்க வாசலில் இருந்து நடிகர் விக்ரம் குதிரையில் செல்லும் காட்சிகளும் படமாக்கப்பட்டன.

கட்டியணைத்து வழியனுப்பிய அபிஷேக் பச்சன்

கட்டியணைத்து வழியனுப்பிய அபிஷேக் பச்சன்

நடிகை ஐஸ்வர்யா ராய் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக மும்பை கலினா விமான நிலையத்தில் இருந்து தனது மகளுடன் புறப்பட்டார். அப்போது விமான நிலையம் வந்த அபிஷேக் பச்சன் மனைவியையும் மகளையும் கட்டியணைத்து வழியனுப்பி வைத்தார்.

சோழ வம்சத்தின் வீழ்ச்சிக்கான சதி

சோழ வம்சத்தின் வீழ்ச்சிக்கான சதி

இதனிடையே குவாலியர் அரண்மனையில் நடைபெற்ற பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு வீடியோக்களும் வைரலாகி வருகிறது. பொன்னியின் செல்வன் படம் கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படுகிறது. சோழ வம்சத்தின் வீழ்ச்சியை சதி செய்யும் நந்தினியின் வாழ்க்கையை இப்படம் விவரிக்கிறது. சரத்குமார் நடிக்கும் பெரிய பழவேட்டராயரின் மனைவிதான் நந்தினி என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X