ரிலீசுக்கு தயாராகும் பிரபுதேவாவின் அடுத்தப்படம்... பொய்க்கால் குதிரை சூட்டிங் நிறைவு
சென்னை : நடிகர் பிரபுதேவாவின் பஹீரா படம் அடுத்த மாதம் 27ம் தேதி ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்ததாக அவர் சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் பொய்க்கால் குதிரை என்ற படத்தில் நடித்து வந்தார்.
இந்நிலையில் இந்தப் படத்தின் சூட்டிங் தற்போது நிறைவடைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

நடிகர் பிரபுதேவா
நடிகர் பிரபுதேவா தமிழில் மீண்டும் கவனம் செலுத்தி தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். காமெடி மட்டுமின்றி சீரியசான கதாபாத்திரங்களிலும் அவரை காண முடிகிறது. தற்போது பஹீரா என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்த மாதம் 27ம் தேதி மாநாடு படத்துடன் இணைந்து இந்தப் படம் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பஹீரா படம்
இந்தப் படத்தில் பெண்களை காதலித்து கொலை செய்யும் சீரியல் கில்லராக அவர் நடித்துள்ளார். படத்தின் டீசர் உள்ளிட்டவை வெளியிடப்பட்டு மிரட்டலான பிரபுதேவாவை காண முடிகிறது. வித்தியாசமான கெட்டப்புகளுடன் அவர் அதில் காணப்படுகிறார். இதுவரை ஏற்காத நெகட்டிவ் கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார்.

பொய்க்கால் குதிரை படம்
இந்நிலையில் அடுத்ததாக சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் பிரபுதேவா நடித்துவந்த பொய்க்கால் குதிரை படத்தின் சூட்டிங் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்தை மினி ஸ்டூடியோஸ் நிறுவனம் மற்றும் டார்க் ரூம் பிக்சர்ஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து தயாரித்துள்ளன.

சூட்டிங் நிறைவு
படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதை நடிகர் ஆர்யா தனது டவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். சென்னை உள்ளிட்ட இடங்களில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுவந்த நிலையில் தற்போது சூட்டிங் நிறைவடைந்துள்ளது. படத்தில் பிரபுதேவா ஒரு கால் இல்லாதவராக நடித்துள்ளார்.
Recommended Video

இமான் இசை
படத்தில் வரலட்சுமி சரத்குமார் மற்றும் ரைசா வில்சன் ஆகியோர் நாயகிகளாக நடித்து வருகின்றனர். பிரகாஷ் ராஜ், சமுத்திர கனியும் படத்தில் முக்கிய ரோல்களில் நடித்து வருகின்றனர். ஆக்ஷன் த்ரில்லராக உருவாகியுள்ள இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக பல்லூ மற்றும் இசையமைப்பாளராக இமான் ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர்.

ஒரு கால் இல்லாத பிரபுதேவா
அடுத்தடுத்து சிறப்பான படங்களில் நடித்துவரும் பிரபுதேவா, இந்தப் படத்தில் ஒரு கால் இல்லாதவராக வித்தியாசமான கேரக்டரில் நடித்துவருவது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் ஒரு கையில் ஆயுதத்துடனும் ஒரு கையில் ஒரு பெண் குழந்தையுடனும் காணப்படுவதும் எதிர்பார்ப்பை மேலும் எகிற வைத்துள்ளது.

விரைவில் டீசர்
இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடைந்துள்ள நிலையில் அடுத்ததாக இந்தப் படமும் ரிலீசுக்கு தயாராகும் என்று எதிர்பார்க்கலாம். அடுத்தடுத்து படத்தின் டீசர், ட்ரெயிலர் பாடல்கள் என வெளியிடப்படும் எனறும் படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











