குருவியில் பிரகாஷ்ராஜ் இல்லை!
| Click here for more images |
அமைச்சர் ஸ்டாலினின் மகன் உதயநிதி தயாரிக்க, தரணி இயக்க, விஜய், திரிஷா நடிக்க உருவாகும் பிரமாண்டப் படம் குருவி.
முதலில் படத்தின் நாயகி குறித்து பெரும் குழப்பம் நிலவியது. திரிஷா இல்லை என்று முதலில் கூறப்பட்டது. கடைசியில் எப்படியோ தனது வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டார் திரிஷா.
2 நாட்களுக்கு முன்பு பொள்ளாச்சியில் முதல் ஷெட்யூல் படப்பிடிப்பு தொடங்கியது. விஜய், விவேக், திரிஷா சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி வருகிறார்கள்.
இந்த நிலையில் படத்தில் முதலில் நடிப்பதாக இருந்த பிரகாஷ் ராஜ் இப்போது இல்லையாம். திரிஷாவின் அண்ணன் கேரக்டரில் இப்படத்தில் பிரகாஷ் ராஜ் நடிப்பதாக இருந்தது.
ஆனால் கால்ஷீட் ஒதுக்க முடியாததால் படத்தில் தற்போது பிரகாஷ் ராஜ் இல்லையாம். தமிழில் நான்கு படங்களிலும், தெலுங்கில் 2 படங்களிலும் நடித்து வருகிறார் பிரகாஷ் ராஜ். மேலும், மோசர் பெயர் நிறுவனத்துடன் இணைந்து நான்கு படங்களையும் தமிழில் தயாரித்து வருகிறார்.
இதன் காரணமாக குருவி படத்திற்கு கால்ஷீட் தர முடியாத நிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து பிரகாஷ் ராஜுக்குப் பதில் வேறு நடிகரை நடிக்க வைக்க தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி, சிவாஜி பட வில்லன் சுமனை அணுகினர். அவரும் நடிக்க ரெடியாக இருந்ததால் உடனே பொள்ளாச்சிக்குப் பறந்து வர உத்தரவிட்டனர். அவரும் ஹைதராபாத்திலிருந்து கோவைக்குப் பறந்து வந்து அங்கிருந்து பொள்ளாச்சிக்குக் கிளம்பிப் போய் யூனிட்டோடு சேர்ந்து கொண்டாராம்.


Click it and Unblock the Notifications











