»   »  மின்சார ஷாக்: தப்பினார் பிரகாஷ் ராஜ்!

மின்சார ஷாக்: தப்பினார் பிரகாஷ் ராஜ்!

Subscribe to Oneindia Tamil

லீ படப்பிடிப்பின்போது மின்சார ஷாக் அடித்து நடிகர் பிரகாஷ் ராஜ் துடித்து போய் விட்டார். இயக்குநர் பிரபுசாலமனின் சமயோஜிதத்தால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

சத்யராஜ் தயாரிப்பில் அவரது மகன் சிபிராஜ் மாறுபட்ட வேடத்தில் நடிக்கும் படம் லீ. இதில் அவருக்குஜோடியாக நிலா நடித்துள்ளார். பிரபு சாலமன் படத்தை இயக்குகிறார்.

படத்தின் கதைப்படி கால்பந்து வீரராக நடிக்கிறார் சிபி. அவரது பயிற்சியாளராக நடிக்கிறார் பிரகாஷ் ராஜ்.வில்லனாக நடிக்கும் ஜாகிர், பிரகாஷ் ராஜைக் கொல்ல முயற்சிப்பதாக ஒரு காட்சி தாம்பரத்தில் உள்ளசேவாசதன் பள்ளிக்கூட மைதானத்தில் படமாக்கப்பட்டது.

பிரகாஷ் ராஜை சுட்டவுடன், அவரது உடலிலிருந்து ரத்தம் வருவதற்காக, மின்சார வயர்களை உடல் முழுவதும்சுற்றி அதில் சிவப்பு நிற மையை நிரப்பி வைத்திருந்தார்கள். இதை இயக்குவதற்காக ஒரு குழு ரிமோட்டுடன்காத்திருந்தது.

இயக்குநர் ரெடி என்றவுடன், வில்லன் துப்பாக்கியால் சுட்டார். அப்போது பிரகாஷ் ராஜ் உடலிலிருந்து சிவப்புமை வெளியே வருவதற்காக ரிமோட் கண்ட்ரோலுடன் காத்திருந்த குழுவினர் ரிமோட்டை ஆன் செய்தனர்.அப்போது பிரகாஷ் ராஜ் உடல் உதற அலறித் துடித்தார்.

இதனால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சுதாரித்துக் கொண்ட இயக்குநர் பிரபு சாலமன், ரிமோட்டைஇயக்கும் ஜெனரேட்டரை ஓடிப் போய் நிறுத்தினார். அப்புறம்தான் பிரகாஷ் ராஜ் உடல் உதறல் நின்றது.

பிரகாஷ் ராஜ் நின்றிருந்த இடத்தில் தண்ணீர் தேங்கியிருந்தது. அவரது உடலில் வயர் சுற்றப்பட்டிருந்ததால்,ஜெனரேட்டரை ஆன் செய்தவுடன், மின்சார ஷாக் ஏற்பட்டது. அதனால்தான் பிரகாஷ் ராஜ் அலறித்துடித்துள்ளார். நல்ல வேளையாக பிரபு சாலமன் ஜெனரேட்டரை நிறுத்தியதால் பெரிய அசம்பாவிதம் ஏற்படுவதுதவிர்க்கப்பட்டது.

இந்த சம்பவத்திற்குப் பிறகு சிறிது நேரம் பிரகாஷ் ராஜ் ஓய்வெடுத்தார். அதன் பின்னர் சில மாற்றங்களுடன்அந்தக் காட்சியை படமாக்கினர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil