ஷூட்டிங்-பிரசன்னா காது கிழிந்தது!
சாது மிரண்டா படத்தின் ஷூட்டிங்கின்போது கெமிக்கல் தடவிய மேக்கப்பைக் கலைத்தபோது நடிகர் பிரசன்னாவின் காது கிழிந்து போனது.
நடிகர் பிரசன்னா, காய்வா மாதவன் நடித்து வரும் புதுப் படம் சாது மிரண்டா. மலையாள இயக்குநர் சித்திக் இயக்கி வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் சென்னை மோகன் ஸ்டுடியோவில் நடந்தது.படத்தில் ஒரு காட்சியில் பிரசன்னாவின் காதுகளை வித்தியாசப்படுத்திக் காட்ட திட்டமிட்டார் சித்திக். இதையடுத்து அவரது காதுகளுக்கு சிறப்பு மேக்கப் போடப்பட்டது.
அலுமினியக் கூழ் உள்ளிட்ட சில கெமிக்கல்களை கலந்து காதுக்கு மேக்கப் போட்டனர். வேதிப் பொருள் என்பதால் பிரசன்னாவின் காதுகள் அரிப்பெடுத்துள்ளன.
அதைப் பொருட்படுத்திக் கொண்டு அவர் நடித்துள்ளார். காட்சி முடிந்து கெமிக்கல் மேக்கப்பைக் கலைத்துள்ளனர். அப்போது ஒரு காது கெமிக்கலின் சூடு தாங்க முடியாமல் கிழிந்து விட்டது. ரத்தமும் கொட்டியது.
வலியால் துடித்த பிரசன்னாவை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர். காதுக்கு வேறு எந்த ஆபத்தும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பண்பட்ட நடிப்புக்காக இப்படியெல்லாம் புண்படுத்திக் கொண்டா நடிப்பது?


Click it and Unblock the Notifications











