»   »  பிரியாவின் திருத்தம்!

பிரியாவின் திருத்தம்!

Subscribe to Oneindia Tamil

இரண்டு நாயகிகளுடன் திருத்தம் மூலம் மீண்டும் அமர்க்களப்படுத்த வருகிறார்தூத்துக்குடி நாயகன் ஹரிகுமார்.

தூத்துக்குடிப் படத்தை தயாரித்து ஹீரேவாக நடித்தவர்தான் ஹரிக்குமார். டான்ஸ்மாஸ்டரான ஹரிக்குமார், அடுத்த படத்திற்கு அமர்க்களமாக தயாராகி விட்டார்.

திருத்தம் என்று பெயரிடப்பட்டுள்ள அப்படத்தை பொன்ராமன் என்கிறவர்இயக்கவுள்ளார். இவர், எஸ்.ஏ.சந்திரசேகரனிடம் அசோசியேட்டாக இருந்தவர்.திருத்தம் மூலம் தமிழ் திரையுலகின் புதிய இயக்குநராக அவதாரம் எடுக்கிறார்.

ஹரிக்குமாருக்கு இதில் இரண்டு ஜோடிகள். ஒருவர் பிரியா. புலன் விசாரணை -2படத்தின் நாயகிகளில் ஒருவர். படு பிரமாதமாக இருக்கிறார் பிரியா. இன்னொருவர்வெயில் நாயகிகளில் ஒருவரான பிரியங்கா.

இருவருக்கும் இப்படத்தில் சம வேடங்களாம். இருவருமே படு கிளாமர் சுந்தரிகள்என்பதால் மட்டும் இந்த வாய்ப்பு இல்லையாம், நன்கு நடிப்பவர்கள் என்பதால்நடிப்புக்கு நிறைய காட்சிகளை வைக்கப் போகிறாராம் பொன்ராமன்.

பிரியாவும், பிரியங்காவும் தமிழ் சினிமாவின் லேட்டஸ்ட் ஹாட் கேக்ஸ்.ஆட்டத்திலும், நடிப்பிலும் அமர்க்களப்படுத்துகிறார்கள். அத்தோடு படு அழகாகவும்இருக்கிறார்கள். பிரியங்காவை விட பிரியாதான் இப்போது அதிகம் விரும்பும்நாயகியாக மாறியிருக்கிறார்.

முதல் படமான புலன் விசாரணை-2 இன்னும் முடியாத நிலையில், அதற்குள்பிரியாவைத் தேடி நிறைய பட வாய்ப்புகளாம். இதில் சிலவற்றை ஒப்புக் கொண்டுகால்ஷீட் கொடுக்க ஆரம்பித்து விட்டார் பிரியா.

இந்த ஆண்டின் இறுதிக்குள் பிரியா, முன்னணிக்கு வருவார் என்று அவரதுதிறமைகளைப் புரிந்து கொண்டுள்ள திரையுலக கணக்காளர்கள் கையில் அடித்துசத்தியம் செய்கிறார்கள்.

இதே கருத்தில்தான் உள்ளார் பொன் ராமனும். அதேபோல பிரியங்காவும் பொளந்துகட்டுவார் பாருங்கள் என்கிறார் அவர்.

திருத்தம் படத்தையும் ஹரிக்குமாரே இயக்குவார். தூத்துக்குடி படத்தின் பாதிக்கு மேல்இயக்குநர் சஞ்சய் ராமுக்கும் அவருக்கும் இடையே ஏழரையாகிப் போய் பாதிப்படத்திற்கு மேல் ஹரிக்குமாரே இயக்கினார் என்றார்கள். ஆனால் முழுப் படத்தையும்நான் தான் இயக்கினேன் என்றார் ஹரிக்குமார்.

திருத்தம் படத்திலும் பொன்ராமனை முழுமையாக இயக்க விடுவாரா அல்லதுராவனணாக மாறி ராமனை விரட்டி விடுவாரா என்று பெட் கட்டிக்கொண்டிருக்கிறார்கள் கோலிவுட்டார்.

அடித்தல், திருத்தல் ஏதும் இல்லாமல் படம் வந்தா சரி!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil