»   »  மீண்டும் நெஞ்சம் மறப்பதில்லை!

மீண்டும் நெஞ்சம் மறப்பதில்லை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நெஞ்சம் மறப்பதில்லை. அப்பாக்கள் காலத்தில் வந்த இந்தப் படம் தமிழ் சினிமா வரலாற்றில் மறக்க முடியாத ஒரு காவியம்.

1963ம் ஆண்டு பழம்பெரும் இயக்குநர் ஸ்ரீதர் இயக்கத்தில், கல்யாண்குமார், தேவிகா, நம்பியார் ஆகியோரது பண்பட்ட நடிப்பில் உருவான இந்தப்படம் படு வித்தியாசமான காதல் திரில்லர்.

தேவிகா, கல்யாண்குமாரின் உணர்ச்சிப் பொங்கிய நடிப்பை இன்னும் கூட யாராலும் மறந்திருக்க முடியாது. அப்படி ஒரு அற்புதமான படம் நெஞ்சம்மறப்பதில்லை. விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசையில், வெளியான இப்படத்தில் நெஞ்சம் மறப்பதில்லை, அதன் நினைவை இழப்பதில்லை உள்ளிட்டபல சூப்பர் ஹிட் பாடல்கள் இடம் பெற்றிருந்தன.

கல்யாண்குமார், தேவிகா நடிப்பையே தூக்கிச் சாப்பிடும் வகையில் இருந்தது நம்பியாரின் வில்லன் நடிப்பு.

படத்தின் கதை இதுதான். கல்லூரி மாணவரான கல்யாண் குமார் தனது நண்பரோடு அவரது கிராமத்திற்குப் போகிறார். அங்கு நண்பரின்தங்கையான தேவிகா மீது காதல் பிறக்கிறது. இருந்தாலும் காதலைச் சொல்லாமல் அமைதி காக்கிறார்.

கிராமத்தைச் சுற்றிப் பார்ப்பதற்காக தனியாக செல்லும் கல்யாண்குமார் அங்குள்ள பாழடைந்த பங்களாவைப் பார்த்து ஆச்சரியப்பட்டு உள்ளேசெல்கிறார். உள்ளே சென்றவுடன் அவருக்குள் ஒரு மாற்றம். அந்த இடத்தை, அங்கிருந்த பொருட்களை இதற்கு முன்பு பார்த்தது போல ஒரு நினைவு.அவருக்குள் பலவித நினைவுகள் அலையடிக்கின்றன.

முன் ஜென்ம நினைவுகள் அவருக்குள் புகுகிறது. பழைய கதை பிளாஷ்பேக் ஆக மலருகிறது. கிராமத்து ஜமீன்தாரான நம்பியாரின் மகன்தான்கல்யாண் குமார். நம்பியாரின் பண்ணையில் வேலை பார்ப்பவரின் மகள்தான் தேவிகா.

இருவரும் காதலிக்கின்றனர். ஆனால் வில்லனாக நடுவே வருகிறார் நம்பியார். அந்தஸ்தை சொல்லி காதலை பிரிக்கப் பார்க்கிறார். ஆனால்கல்யாண்குமார் தனது காதலில் உறுதியாக இருக்கிறார். இருவரும் ரகசியமாக கல்யாணம் செய்து கொள்ள கிளம்புகின்றனர். இதை அறிந்தநம்பியார் துப்பாக்கியுடன் சென்று இருவரையும் சுட்டு வீழ்த்துகிறார்.

இந்த முன்ஜென்ம கதையை அறிந்து கொண்ட கல்யாண் குமார் அதிர்ச்சி அடைகிறார். தனது நண்பனின் தங்கைதான் தான் முன்ஜென்மத்தில்காதலித்த பண்ணை வீட்டுப் பெண் என்பதை அறிந்து அவரிடம் காதலைச் சொல்கிறார். தேவிகாவும் காதலை ஏற்கிறார்.

இந்த சமயத்தில் தங்களது முன்ஜென்மக் கதையை தேவிகாவிடம் கூறி அவரை பாழடைந்த பங்களாவுக்குக் கூட்டிச் செல்கிறார். அங்கு எதிர்பாராததிருப்பமாக, இன்னும் உயிருடன் வாழும் நம்பியாருக்கு கல்யாண்குமார், தேவிகா கதை தெரிய வருகிறது.

இந்தப் பிறவியிலும் இவர்களை சேர விடக் கூடாது என வெறித்தனமாக சபதம் ஏற்கும் நம்பியார், அவர்களை சுட்டுத் தள்ள முடிவு செய்கிறார்.இருவரும் கல்யாணம் செய்து கொள்ளப் போகும் சமயத்தில் துப்பாக்கியால் சுட முயற்சிக்கிறார். ஆனால் கல்யாண்குமார் முந்திக் கொண்டுநம்பியாரை சுட்டு வீழ்த்துகிறார்.

போன பிறவியில் மிஸ் ஆன காதலை இந்தப் பிறவியில் காப்பாற்றி ஒன்று சேருகிறது கல்யாண்குமார்-தேவிகா ஜோடி.

பழைய படப் பெயர்களை களவாடி புதுப் படங்களுக்கு சூட்டுவதும், பழைய படங்களையே திரும்பி ரீமேக் செய்வதும் இப்போது கோலிவுட்டில்சகஜமாகி வருவதால், நெஞ்சம் மறப்பதில்லை படத்தையும் அதே பெயரில் ரீமேக் பண்ணவுள்ளனர்.

பார்த்திபன்தான் ஹீரோவாம். ஹீரோயின்களாக நித்யாதாஸ், புலன் விசாரணை பார்ட் 2 நாயகி பிரியாவும் நடிக்கிறார்கள்.

இவர்கள் தவிர நாசர், ஸ்ரீமன், சரத்பாபு, ராஜ்கபூர், ஒய்.ஜி.மகேந்திரா, ரமேஷ்கண்ணா ஆகியோரும் உள்ளனர்.

கவிஞர்கள் பா.விஜய், சினேகன் பாடல்களை எழுதுகின்றனர். ஜெரோம் புஷ்பராஜ் இசையமைக்கிறார்.

திருமூர்த்திதான் படத்தை இயக்கப் பாகிறார். அடிதடி, மகா நடிகன், குஸ்தி என கும்மாங்குத்துப் படங்களாக எடுத்துத் தள்ளிய சுந்தரி பிலிம்ஸ்நிறுவனம்தான் நெஞ்சம் மறப்பதில்லை படத்தையும் எடுக்கப் போகிறது.

நல்ல கதை, நல்லபடியாக எடுங்க, குத்துப் பாட்டை போட்டு கொத்திப்புடாதீங்க!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil