»   »  ஆந்திராவுக்கு ரெடியாகும் பிரியா மணி!

ஆந்திராவுக்கு ரெடியாகும் பிரியா மணி!

Subscribe to Oneindia Tamil

ஆந்திர ரசிகர்களை அப்படியே தனது கிளாமர் அட்டாக்கால் அசரடிக்க முடிவு செய்துள்ளாராம் பிரியா மணி.

அகண்களால் கைது செய் மூலம் தமிழ் ரசிகர்களை வசீகரித்த பிரியா மணி சொல்லிக் கொள்ளும்படி தமிழில்முன்னேற முடியவில்லை. கிளாமர் காட்டியும், பாந்தமாக நடித்தும் தமிழ் ரசிகர்கள் கண்டுகொள்ளாததால்வெதும்பிக் கிடந்தார்.

இடையில் மலையாளத்திலும் நடித்துப் பார்த்தார். ஆனால் அவரது நடிப்புக்கு பாராட்டு கிடைத்ததே தவிர படவாய்ப்பு ஏதும் வந்த பாடில்லை.

தற்போது அவர் நடித்துள்ள பருத்தி வீரனை அதிகம் எதிர்பார்க்கிறார். அதில் அசத்தலாக பாவாடை, தாவணியில்கலக்கியுள்ளாராம். விருமாண்டியில் அபிராமிக்கு பெயர் கிடைத்தது போல இதில் தனக்குப் பெயர் கிடைக்கும்என நம்புகிறார் பிரியா.

பிரியா கைவசம் இப்போது தோட்டா, உள்ளம் என இரு தமிழ்ப் படங்கள் உள்ளதாம். அடுத்ததாக தெலுங்கில்ஜூனியர் என்.டி.ஆருடன் ஜோடி போடுகிறார். இதில் படம் முழுக்க படு கிளாமராக வரப் போகிறாராம் பிரியா.

கரம் மசாலாவாக நடித்தால்தான் தெலுங்கு ரசிகர்களுக்குப் பிடிக்கும் என்பதால் முழு நீள கவர்ச்சிக்குத் தாவுகிறார்.இப்படத்தில் தனது கிளாமரைக் கண்டு நிச்சயம் ரசிகர் கூட்டம் தன் பக்கம் சாயும் என படு தெம்பாக நம்புகிறார்பிரியா.

இப்படம் வெற்றி பெற்றால் தொடர்ந்து தெலுங்கில் கிளாமர் ரோல்களை செய்யும் முடிவில் இருக்கிறாராம் பிரியா.அதேபோல பருத்தி வீரன் வெற்றி பெற்றால் அதே டைப்பிலான ரோல்களை தொடர்ந்து தமிழில் செய்வாராம்.

அதாவது தெலுங்கில் கவர்ச்சிக் குதிரையாகவும், தமிழில் பாந்த தேவதையாகவும் தூள் பரத்தப் போகிறாராம்.

எப்படின்னாலும் ரசிக்க ரசிக மக்கா ரெடி!

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil