twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தயாரிப்பாளர் எஸ்கேப்: நடிகர், நடிகைகள் தவிப்பு! கண்ணும் கண்ணும் நோக்கியா படத்தின் தயாரிப்பாளர் பாரதி மோகன் திடீரெனதலைமறைவாகி விட்டதால், ஹீரோ ஜெயசக்தி, ஹீரோயின் ஷிவானி ஸ்ரீ மற்றும்நடிகர் நடிகைகள், படக் குழுவினர் கடலூரில் தவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இயக்குநர் பாரதிமோகன் தயாரித்து இயக்கும் படம் கண்ணும் கண்ணும் நோக்கியா.இப்படத்தின் பூஜை கடந்த 12ம் தேதி சென்னையில் நடந்தது. இப்படத்தில் நாயகனாகநாகரீக கோமாளியில் நடித்திருந்த மறைந்த நகைச்சுவை நடிகர் சுருளிராஜனின் பேரன்ஜெயசக்தியும், ஹீரோயினாக கேரளாவைச் சேர்ந்த ஷிவாணிஸ்ரீயும் நடிக்கின்றனர். பட பூஜைக்குப் பின்னர் படப்பிடிப்பு கடலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறுகிராமங்களில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. ஹீரோ, ஹீரோயின் மற்றும் முக்கியநடிகர், நடிகையர் கடலூரில் உள்ள சூரியப்பிரியா ஹோட்டலில் தங்கிபடப்பிடிப்புக்குச் சென்று வந்தனர். மற்றவர்கள் வேறு லாட்ஜுகளில் தங்கியிருந்தனர். பாதிரிக்குப்பம், கடலூர் துநகர், ராமாபுரம், பச்சக்குப்பம் உள்ளிட்ட பல்வேறுகிராமங்களில் கடந்த 10 நாட்களாக படப்பிடிப்பு நடந்து வந்தது. படப்பிடிப்புமுடிவடையும் நிலையில், திடீரென பாரதிமோகனுக்கு பணப் பிரச்சினை ஏற்பட்டது. இதனால் அவர் யாரிடம் சொல்லாமல் தலைமறைவாகி விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த படக்குழுவினர் என்ன செய்வது என்று தெரியாமல்தவித்தனர். இதையடுத்து பேசாமல் சென்னைக்கே சென்று விட அவர்கள்முடிவெடுத்தனர். இதைத் தொடர்ந்து ஜெயசக்தி, ஷிவாணிஸ்ரீ, அவரது பெற்றோர், பிற நடிகர்,நடிகையர் 2 வாடகைக் கார்களை எடுத்துக் கொண்டு சென்னை கிளம்பினர். இந்தக்கார்களுக்குரிய வாடகையாக கையில் இருந்த 3,000 ரூபாயை ஹீரோ ஜெயசக்திகொடுத்து கார்களை அனுப்பி வைத்தார்.மற்ற நடிகர், நடிகையரும் கூட சென்னைக்குத் திரும்பி விட்டனர். ஒருசிலர் மட்டுமேகடலூரில் தங்கியுள்ளனர். பாரதிமோகன் வந்து லாட்ஜுகளுக்குரிய வாடகைப்பணத்தை கட்டிய பிறகுதான் அவர்களால் வரமுடியும் என்ற நிலை. பாரதிமோகனின் திடீர் தலைமறைவினால் படப்பிடிப்பு பாதியில் நின்று, நடிகர்,நடிகையர் தவிக்கும் நிலை ஏற்பட்டது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அவசரப்பட்டுட்டாங்க...இந் நிலையில் பாரதி மோகன் அளித்துள்ள விளக்கத்தில்,சென்னையிலிருந்து 90 கலைஞர்களுடன் கடலூர் வந்த நான் கால்வாசி படப்பிடிப்பை வெற்றிகரமாக முடித்தேன். பொருளாதார சிக்கலால் படப்பிடிப்பை தொடரமுடியாமல் தள்ளி வைத்துள்ளேன்.லாட்ஜ் பில்களை நான் செட்டில் செய்வதற்குள் ஹீரோவும் ஹீரோயினும்அவசரப்பட்டு சென்றுவிட்டார்கள் என்று கூறியிருக்கிறார்.

    By Staff
    |

    கண்ணும் கண்ணும் நோக்கியா படத்தின் தயாரிப்பாளர் பாரதி மோகன் திடீரெனதலைமறைவாகி விட்டதால், ஹீரோ ஜெயசக்தி, ஹீரோயின் ஷிவானி ஸ்ரீ மற்றும்நடிகர் நடிகைகள், படக் குழுவினர் கடலூரில் தவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

    இயக்குநர் பாரதிமோகன் தயாரித்து இயக்கும் படம் கண்ணும் கண்ணும் நோக்கியா.இப்படத்தின் பூஜை கடந்த 12ம் தேதி சென்னையில் நடந்தது. இப்படத்தில் நாயகனாகநாகரீக கோமாளியில் நடித்திருந்த மறைந்த நகைச்சுவை நடிகர் சுருளிராஜனின் பேரன்ஜெயசக்தியும், ஹீரோயினாக கேரளாவைச் சேர்ந்த ஷிவாணிஸ்ரீயும் நடிக்கின்றனர்.

    பட பூஜைக்குப் பின்னர் படப்பிடிப்பு கடலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறுகிராமங்களில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. ஹீரோ, ஹீரோயின் மற்றும் முக்கியநடிகர், நடிகையர் கடலூரில் உள்ள சூரியப்பிரியா ஹோட்டலில் தங்கிபடப்பிடிப்புக்குச் சென்று வந்தனர். மற்றவர்கள் வேறு லாட்ஜுகளில் தங்கியிருந்தனர்.


    பாதிரிக்குப்பம், கடலூர் துநகர், ராமாபுரம், பச்சக்குப்பம் உள்ளிட்ட பல்வேறுகிராமங்களில் கடந்த 10 நாட்களாக படப்பிடிப்பு நடந்து வந்தது. படப்பிடிப்புமுடிவடையும் நிலையில், திடீரென பாரதிமோகனுக்கு பணப் பிரச்சினை ஏற்பட்டது.

    இதனால் அவர் யாரிடம் சொல்லாமல் தலைமறைவாகி விட்டார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த படக்குழுவினர் என்ன செய்வது என்று தெரியாமல்தவித்தனர். இதையடுத்து பேசாமல் சென்னைக்கே சென்று விட அவர்கள்முடிவெடுத்தனர்.

    இதைத் தொடர்ந்து ஜெயசக்தி, ஷிவாணிஸ்ரீ, அவரது பெற்றோர், பிற நடிகர்,நடிகையர் 2 வாடகைக் கார்களை எடுத்துக் கொண்டு சென்னை கிளம்பினர். இந்தக்கார்களுக்குரிய வாடகையாக கையில் இருந்த 3,000 ரூபாயை ஹீரோ ஜெயசக்திகொடுத்து கார்களை அனுப்பி வைத்தார்.


    மற்ற நடிகர், நடிகையரும் கூட சென்னைக்குத் திரும்பி விட்டனர். ஒருசிலர் மட்டுமேகடலூரில் தங்கியுள்ளனர். பாரதிமோகன் வந்து லாட்ஜுகளுக்குரிய வாடகைப்பணத்தை கட்டிய பிறகுதான் அவர்களால் வரமுடியும் என்ற நிலை.

    பாரதிமோகனின் திடீர் தலைமறைவினால் படப்பிடிப்பு பாதியில் நின்று, நடிகர்,நடிகையர் தவிக்கும் நிலை ஏற்பட்டது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அவசரப்பட்டுட்டாங்க...

    இந் நிலையில் பாரதி மோகன் அளித்துள்ள விளக்கத்தில்,

    சென்னையிலிருந்து 90 கலைஞர்களுடன் கடலூர் வந்த நான் கால்வாசி படப்பிடிப்பை வெற்றிகரமாக முடித்தேன். பொருளாதார சிக்கலால் படப்பிடிப்பை தொடரமுடியாமல் தள்ளி வைத்துள்ளேன்.

    லாட்ஜ் பில்களை நான் செட்டில் செய்வதற்குள் ஹீரோவும் ஹீரோயினும்அவசரப்பட்டு சென்றுவிட்டார்கள் என்று கூறியிருக்கிறார்.

      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X