»   »  புலன் விசாரணை கார்த்திகா-அஸ்வினி ஆர்.கே. செல்வமணியின் கனவு புராஜெக்டான புலன் விசாரணை பார்ட் 2 சூட்டிங் மிக விறுவிறுப்பாக நடந்துகொண்டுள்ளது.ஆட்டோ சங்கரின் பெண் கடத்தல்கள்-கொலைகள்-கற்பழிப்புகளை அடிப்படையாக வைத்து விஜய்காந்தைகொண்டு செல்வமணி உருவாக்கிய புலன் விசாரணை தமிழ் சினிமாவில் போலீஸ் கதைகளுக்கு ஒரு முன்மாதிரியாய் அமைந்தது.1990ம் ஆண்டில் வெளியான இந்தப் படம் மாபெரும் ஹிட்டானது. வில்லனாக வந்த சரத்குமாருக்கும் பெரும்பிரேக் தந்தது.இதையடுத்து கேப்டன் பிரபாகரன், செம்பருத்தி (இதில் தான் ரோஜாவை அறிமுகப்படுத்தி காதலிலும் விழுந்துகல்யாணமும் செய்தார் செல்வமணி) ஆகிய ஹிட் படங்களைத் தந்த செல்வமணிக்கு சரிவு ஆரம்பித்தது.அடுத்தடுத்து அவர் இயக்கிய சாமந்தி, கன்மணி, ராஜ முத்ரா (தெலுங்கு), மக்கள் ஆட்சி, அரசியல், ராஜஸ்தான்,துர்கா என எந்தப் படமும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. தொடர்ந்து தோல்விகளால் துவண்டுபோய்விட்ட செல்வமணி கடைசியாக ரோஜாவின் 100வது படமான துர்காவை.இதனால் கோலிவுட்டில் இருந்து தானாகவே ரிடையர்மெண்ட் வாங்கிக் கொண்டு தமிழ்திரை டிவியை நடத்தும்வேலையில் இறங்கினார். அதுவும் பெரும் தோல்வி அடைந்துவிட்டது.இதனால் கிட்டத்தட்ட 5 ஆண்டு இடைவெளிக்குப் பின் மீண்டும் களத்தில் குதித்திருக்கிறார். தனக்கு வாழ்க்கைதந்த புலன் விசாரணையையே இரண்டாம் பார்ட் எடுத்து வருகிறார்.நீண்ட யோசனைக்குப் பின் ஹீரோவாக பிரஷாந்தைப் போட்டுவிட்டு கேரளத்தைச் சேர்ந்த கார்த்திகா (இவர்கோலிவுட்டில் இப்போது உலா வரும் 2வது கார்த்திகா), ஆந்திராவைச் சேர்ந்த அஸ்வினி ஆகியோரைஹீரோயின்களாக்கிவிட்டார்.இந்த இருவருமே சில தெலுங்கு சினிமாக்களில் நடித்தவர்கள். அஸ்வினி தமிழில் ஏற்கனவே அறிமுகமானவர்தான்.செல்மணிக்கு இணையாக தொடர்ந்து சறுக்கல்களை சந்தித்து வருபவர் பிரஷாந்த். இதுவரை ஒரு பிரேக் கூடகிடைக்காமல் அல்லாடிக் கொண்டிருப்பவர். இதனால் பிரஷாந்தும் புலன் விசாரணையை ரொம்பவே எதிர்பார்த்துகஷ்டப்பட்டு நடித்துக் கொண்டிருக்கிறார்.இப்போது பிரஷாந்திடம் ரன்வே, பெட்ரோல், அடைக்கலம், போலீஸ், என்ன விலை அழகே, சர்க்கரை உள்பட 9படங்கள் கைவசம் உள்ளன. இந்தப் படங்கள் எல்லாம் பல காலமாக தயாரிப்பில் உள்ளன என்பதுகுறிப்பிடத்தக்கது.இந்தப் படங்களிலேயே பிரஷாந்த் அதிகமாக எதிர்பார்த்திருப்பது புலன் விசாரணையைத் தான். இந்தப்படத்துக்கு காதல் பட இசையமைப்பாளர் ஜோஷ்வா ஸ்ரீதர் தான் மியூசிக்.படத்தை பிரமாண்ட செலவில் இப்ராகிம் ராவுத்தர் தயாரித்துக் கொண்டிருக்கிறார்.

புலன் விசாரணை கார்த்திகா-அஸ்வினி ஆர்.கே. செல்வமணியின் கனவு புராஜெக்டான புலன் விசாரணை பார்ட் 2 சூட்டிங் மிக விறுவிறுப்பாக நடந்துகொண்டுள்ளது.ஆட்டோ சங்கரின் பெண் கடத்தல்கள்-கொலைகள்-கற்பழிப்புகளை அடிப்படையாக வைத்து விஜய்காந்தைகொண்டு செல்வமணி உருவாக்கிய புலன் விசாரணை தமிழ் சினிமாவில் போலீஸ் கதைகளுக்கு ஒரு முன்மாதிரியாய் அமைந்தது.1990ம் ஆண்டில் வெளியான இந்தப் படம் மாபெரும் ஹிட்டானது. வில்லனாக வந்த சரத்குமாருக்கும் பெரும்பிரேக் தந்தது.இதையடுத்து கேப்டன் பிரபாகரன், செம்பருத்தி (இதில் தான் ரோஜாவை அறிமுகப்படுத்தி காதலிலும் விழுந்துகல்யாணமும் செய்தார் செல்வமணி) ஆகிய ஹிட் படங்களைத் தந்த செல்வமணிக்கு சரிவு ஆரம்பித்தது.அடுத்தடுத்து அவர் இயக்கிய சாமந்தி, கன்மணி, ராஜ முத்ரா (தெலுங்கு), மக்கள் ஆட்சி, அரசியல், ராஜஸ்தான்,துர்கா என எந்தப் படமும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. தொடர்ந்து தோல்விகளால் துவண்டுபோய்விட்ட செல்வமணி கடைசியாக ரோஜாவின் 100வது படமான துர்காவை.இதனால் கோலிவுட்டில் இருந்து தானாகவே ரிடையர்மெண்ட் வாங்கிக் கொண்டு தமிழ்திரை டிவியை நடத்தும்வேலையில் இறங்கினார். அதுவும் பெரும் தோல்வி அடைந்துவிட்டது.இதனால் கிட்டத்தட்ட 5 ஆண்டு இடைவெளிக்குப் பின் மீண்டும் களத்தில் குதித்திருக்கிறார். தனக்கு வாழ்க்கைதந்த புலன் விசாரணையையே இரண்டாம் பார்ட் எடுத்து வருகிறார்.நீண்ட யோசனைக்குப் பின் ஹீரோவாக பிரஷாந்தைப் போட்டுவிட்டு கேரளத்தைச் சேர்ந்த கார்த்திகா (இவர்கோலிவுட்டில் இப்போது உலா வரும் 2வது கார்த்திகா), ஆந்திராவைச் சேர்ந்த அஸ்வினி ஆகியோரைஹீரோயின்களாக்கிவிட்டார்.இந்த இருவருமே சில தெலுங்கு சினிமாக்களில் நடித்தவர்கள். அஸ்வினி தமிழில் ஏற்கனவே அறிமுகமானவர்தான்.செல்மணிக்கு இணையாக தொடர்ந்து சறுக்கல்களை சந்தித்து வருபவர் பிரஷாந்த். இதுவரை ஒரு பிரேக் கூடகிடைக்காமல் அல்லாடிக் கொண்டிருப்பவர். இதனால் பிரஷாந்தும் புலன் விசாரணையை ரொம்பவே எதிர்பார்த்துகஷ்டப்பட்டு நடித்துக் கொண்டிருக்கிறார்.இப்போது பிரஷாந்திடம் ரன்வே, பெட்ரோல், அடைக்கலம், போலீஸ், என்ன விலை அழகே, சர்க்கரை உள்பட 9படங்கள் கைவசம் உள்ளன. இந்தப் படங்கள் எல்லாம் பல காலமாக தயாரிப்பில் உள்ளன என்பதுகுறிப்பிடத்தக்கது.இந்தப் படங்களிலேயே பிரஷாந்த் அதிகமாக எதிர்பார்த்திருப்பது புலன் விசாரணையைத் தான். இந்தப்படத்துக்கு காதல் பட இசையமைப்பாளர் ஜோஷ்வா ஸ்ரீதர் தான் மியூசிக்.படத்தை பிரமாண்ட செலவில் இப்ராகிம் ராவுத்தர் தயாரித்துக் கொண்டிருக்கிறார்.

Posted By:
Subscribe to Oneindia Tamil
ஆர்.கே. செல்வமணியின் கனவு புராஜெக்டான புலன் விசாரணை பார்ட் 2 சூட்டிங் மிக விறுவிறுப்பாக நடந்துகொண்டுள்ளது.

ஆட்டோ சங்கரின் பெண் கடத்தல்கள்-கொலைகள்-கற்பழிப்புகளை அடிப்படையாக வைத்து விஜய்காந்தைகொண்டு செல்வமணி உருவாக்கிய புலன் விசாரணை தமிழ் சினிமாவில் போலீஸ் கதைகளுக்கு ஒரு முன்மாதிரியாய் அமைந்தது.

1990ம் ஆண்டில் வெளியான இந்தப் படம் மாபெரும் ஹிட்டானது. வில்லனாக வந்த சரத்குமாருக்கும் பெரும்பிரேக் தந்தது.

இதையடுத்து கேப்டன் பிரபாகரன், செம்பருத்தி (இதில் தான் ரோஜாவை அறிமுகப்படுத்தி காதலிலும் விழுந்துகல்யாணமும் செய்தார் செல்வமணி) ஆகிய ஹிட் படங்களைத் தந்த செல்வமணிக்கு சரிவு ஆரம்பித்தது.

அடுத்தடுத்து அவர் இயக்கிய சாமந்தி, கன்மணி, ராஜ முத்ரா (தெலுங்கு), மக்கள் ஆட்சி, அரசியல், ராஜஸ்தான்,துர்கா என எந்தப் படமும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. தொடர்ந்து தோல்விகளால் துவண்டுபோய்விட்ட செல்வமணி கடைசியாக ரோஜாவின் 100வது படமான துர்காவை.

இதனால் கோலிவுட்டில் இருந்து தானாகவே ரிடையர்மெண்ட் வாங்கிக் கொண்டு தமிழ்திரை டிவியை நடத்தும்வேலையில் இறங்கினார். அதுவும் பெரும் தோல்வி அடைந்துவிட்டது.

இதனால் கிட்டத்தட்ட 5 ஆண்டு இடைவெளிக்குப் பின் மீண்டும் களத்தில் குதித்திருக்கிறார். தனக்கு வாழ்க்கைதந்த புலன் விசாரணையையே இரண்டாம் பார்ட் எடுத்து வருகிறார்.

நீண்ட யோசனைக்குப் பின் ஹீரோவாக பிரஷாந்தைப் போட்டுவிட்டு கேரளத்தைச் சேர்ந்த கார்த்திகா (இவர்கோலிவுட்டில் இப்போது உலா வரும் 2வது கார்த்திகா), ஆந்திராவைச் சேர்ந்த அஸ்வினி ஆகியோரைஹீரோயின்களாக்கிவிட்டார்.

இந்த இருவருமே சில தெலுங்கு சினிமாக்களில் நடித்தவர்கள். அஸ்வினி தமிழில் ஏற்கனவே அறிமுகமானவர்தான்.

செல்மணிக்கு இணையாக தொடர்ந்து சறுக்கல்களை சந்தித்து வருபவர் பிரஷாந்த். இதுவரை ஒரு பிரேக் கூடகிடைக்காமல் அல்லாடிக் கொண்டிருப்பவர். இதனால் பிரஷாந்தும் புலன் விசாரணையை ரொம்பவே எதிர்பார்த்துகஷ்டப்பட்டு நடித்துக் கொண்டிருக்கிறார்.

இப்போது பிரஷாந்திடம் ரன்வே, பெட்ரோல், அடைக்கலம், போலீஸ், என்ன விலை அழகே, சர்க்கரை உள்பட 9படங்கள் கைவசம் உள்ளன. இந்தப் படங்கள் எல்லாம் பல காலமாக தயாரிப்பில் உள்ளன என்பதுகுறிப்பிடத்தக்கது.

இந்தப் படங்களிலேயே பிரஷாந்த் அதிகமாக எதிர்பார்த்திருப்பது புலன் விசாரணையைத் தான். இந்தப்படத்துக்கு காதல் பட இசையமைப்பாளர் ஜோஷ்வா ஸ்ரீதர் தான் மியூசிக்.

படத்தை பிரமாண்ட செலவில் இப்ராகிம் ராவுத்தர் தயாரித்துக் கொண்டிருக்கிறார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil