காமெடி 'பிஸ்கோத்'தில் சந்தானம் போட்ட டிஷ்யூம் ஸ்டைல் ஃபைட்... 80-கள் லுக்கில் இது வேற லெவலாம்!

By

சென்னை: சந்தானம் நடிக்கும் பிஸ்கோத் படத்தின் ஷூட்டிங் முடிவடைந்துள்ளது.

வினய் நடித்த ஜெயம் கொண்டான், பரத் நடித்த கண்டேன் காதலை, ஆர்யா, சந்தானம் நடித்த சேட்டை, விமல், சூரி நடித்த, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா, அதர்வாவின் பூமரங்க் உட்பட சில படங்களை இயக்கியவர் ஆர்.கண்ணன்.

இப்போது, சந்தானம் ஹீரோவாக நடிக்கும் பிஸ்கோத் என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார்.
இதில், சந்தானம் 3 தோற்றங்களில் நடித்திருக்கிறார்.

தாரா அலிஷா பெர்ரி

தாரா அலிஷா பெர்ரி

சந்தானம் ஜோடியாக தாரா அலிஷா பெர்ரி, சுவாதி முப்பாலா ஆகிய இருவரும் நடித்துள்ளனர். தாரா அலிஷா பெர்ரி, ஏ 1 படத்தில் ஏற்கனவே சந்தானம் ஜோடியாக நடித்து இருந்தார். மற்றும் சவுகார் ஜானகி, ஆனந்தராஜ், மொட்டை ராஜேந்திரன், ஆடுகளம் நரேன் உட்பட பலர் நடித்துள்ளனர். இயக்குனர் ஆர்.கண்ணனே இந்தப் படத்தைத் தயாரித்தும் உள்ளார். படத்தின் உலக விநியோக உரிமையை கே.ரவீந்திரன் பெற்றுள்ளார்.

அரண்மனை செட்

அரண்மனை செட்

காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் இந்தப் படத்தின் ஷூட்டிங், சென்னை, ஐதராபாத் நகரங்களில் நடைபெற்றுள்ளது. ஐதராபாத் அருகே சுமார் ஒன்றரை கோடி செலவில் பிரமாண்டமான அரண்மனை செட் அமைத்து அங்கு 20 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. பழங்கால அரண்மனை செட்டில் நடந்த படப்பிடிப்பில் சந்தானம் உட்பட பலர் பங்கேற்றுள்ளனர்.

காமெடியாகவே

காமெடியாகவே

இதுபற்றி இயக்குனர் ஆர்.கண்ணனிடம் கேட்டபோது, 'இந்தப் படத்தின் ஆரம்பத்தில் இருந்து முடியும் வரை, ஒவ்வொரு காட்சியும் காமெடியாகவே இருக்கும். 80-களில் நடப்பது போலவும் பீரியட் மற்றும் இப்போது நடப்பது போலவும் கதை அமைக்கப்பட்டுள்ளது. 80-கள் கேரக்டருக்கு சந்தானம் பெல்பாட்டம் அணிந்து, அந்த கால ஸ்டைலில் வருவார்.

டிஷ்யூம் டிஷ்யூம்

டிஷ்யூம் டிஷ்யூம்

அந்த கால கட்டத்தில் வரும் சினிமா பட சண்டைகள் போல, இதில் டிஷ்யூம் டிஷ்யூம் பின்னணியில் சந்தானம் பைட் பண்ணி இருக்கிறார். இந்தக் காட்சிகள் காமெடியில் அள்ளும். படத்தில் சந்தானத்துக்கு ஹீரோயிஷம் அதிகம் இருக்காது. ரசிகர்கள் விழுந்து விழுந்து சிரிக்க வேண்டும் என்பதற்காகவே இந்த ஸ்கிரிப்டை உருவாக்கி இருக்கிறோம்' என்றார். படத்தை கோடையில் வெளியிட முடிவு செய்துள்ளனர்.

Recommended Video

Dagalty | Santhanam | Rittika Sen | Vijay Anand
அதர்வா படம்

அதர்வா படம்

இதற்கிடையே அதர்வா நடிக்கும் படத்தையும் ஆர்.கண்ணன் இயக்கியுள்ளார். இதன் ஷூட்டிங் சமீபத்தில் அஸர்பைஜானில் நடந்தது. இதில் அதர்வா, ஆடுகளம் நரேன், அனுபமா பரமேஸ்வரன், அமிதாஸ் பிரதான் உட்பட பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் ஷூட்டிங்கும் முடிந்துவிட்டது. பிஸ்கோத் படத்தை ரிலீஸ் செய்துவிட்டு இந்தப் படத்தை ரிலீஸ் செய்ய உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X