ஏகப்பட்ட வாய்ப்புகளை வளைத்துப் போடும் ராஷி கன்னா; தனுஷின் திருச்சிற்றம்பலம் ஷூட்டிங்கில் பிசி!

சென்னை: கோலிவுட்டில் அடுத்தடுத்து ஏகப்பட்ட டாப் ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்து வருகிறார் நடிகை ராஷி கன்னா.

இயக்குநர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் திருச்சிற்றம்பலம் படத்தில் இவர் தான் ஹீரோயின்.

இந்நிலையில், திருச்சிற்றம்பலம் படப்பிடிப்பில் தான் கலந்து கொண்டதாக லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்டு ஹாட் அப்டேட்டை ரசிகர்களுக்கு கொடுத்திருக்கிறார்.

மெட்ராஸ் கஃபே

மெட்ராஸ் கஃபே

பாலிவுட்டில் ஜான் ஆபிரகாம் நடிப்பில் உருவான மெட்ராஸ் கஃபே படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ராஷி கன்னா. ராஜீவ் காந்தி கொலை வழக்கை மையப்படுத்தி உருவான அந்த படம் இந்தியாவில் வெளியாக தடை செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

நயன்தாரா படத்தில்

நயன்தாரா படத்தில்

தமிழில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, விஜய்சேதுபதி மற்றும் அதர்வா நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள் படத்தில் நடிகர் அதர்வாவுக்கு ஜோடியாக கோலிவுட்டில் காலடி எடுத்து வைத்தார் ராஷி கன்னா. தொடர்ந்து ஜெயம் ரவியின் அடங்க மறு, விஷாலின் அயோக்யா உள்ளிட்ட படங்களில் நடித்து அசத்தினார்.

மீண்டும் விஜய்சேதுபதி உடன்

மீண்டும் விஜய்சேதுபதி உடன்

அதன் பின்னர் விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான சங்கத் தமிழன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார் நடிகை ராஷி கன்னா. விரைவில் தொலைக்காட்சியில் வெளியாக உள்ள துக்ளக் தர்பார் படத்தில் இருந்து நடிகை அதிதி ராவ் வெளியேறிய நிலையில், அவருக்கு பதிலாக மீண்டும் விஜய்சேதுபதி உடன் துக்ளக் தர்பாரில் நடித்திருக்கிறார் ராஷி கன்னா.

ஹன்சிகாவை ஓரங்கட்டி

ஹன்சிகாவை ஓரங்கட்டி

நடிகை ஹன்சிகாவை போலவே கொழு கொழு என இருக்கும் ராஷி கன்னா சுந்தர் சி இயக்கத்தில் ஆர்யா நடித்து வரும் அரண்மனை 3ம் பாகத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். சிஜி பணிகள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், அந்த படமும் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சூர்யாவுக்கு ஜோடி

சூர்யாவுக்கு ஜோடி

இயக்குநர் ஹரி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கவிருந்த அருவா படம் டிராப் ஆனதால், சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு நடிகை ராஷி கன்னாவின் கை நழுவி போனது. ஆனால், விரைவிலே மீண்டும் சூர்யாவுடன் இணைந்து நடிப்பேன் என்பதில் மிகவும் உறுதியாக இருக்கிறார் ராஷி கன்னா.

திருச்சிற்றம்பலம் ஷுட்டிங்கில்

திருச்சிற்றம்பலம் ஷுட்டிங்கில்

இந்நிலையில், நடிகை ராஷி கன்னா தான் தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தின் படப்பிடிப்பில் இருப்பதாக கையில் ஸ்க்ரிப்ட் பேப்பருடன் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு தனுஷ் ரசிகர்களுக்கு ஹாட் அப்டேட் கொடுத்திருக்கிறார். அதர்வா, ஜெயம் ரவி, விஷால், விஜய்சேதுபதி, ஆர்யாவை தொடர்ந்து தற்போது நடிகர் தனுசுக்கு ஜோடியாகவும் மாறி உள்ளார் நடிகை ராஷி கன்னா.

கருப்பு பிகினியில்

கருப்பு பிகினியில்

எத்தனை படங்களில் நடித்து வந்தாலும், ஓவர் கிளாமர் காட்டாமல் மாடர்ன் உடைகளிலும் பவ்யமான பெண்ணாகவே நடித்து வந்த நடிகை ராஷி கன்னா, என்ன என்னன்னு நினைச்சீங்க, நானும் ஹாட்டா நடிப்பேன் என்பதை அறிவிக்கும் விதமாக சமீபத்தில் நீச்சல் குளத்தில் கருப்பு பிகினி அணிந்து எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு ஹாட்னஸ் அலர்ட் கொடுத்திருந்தார்.

ராசிக்கார பொண்ணு

ராசிக்கார பொண்ணு

பெயரிலேயே ராசி இருப்பதால் நடிகை ராஷி கன்னா ரொம்ப ராசியான பொண்ணு என ஏகப்பட்ட தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்களிடம் நல்ல பெயரை வாங்கி வருகிறாராம். அது மட்டுமில்லாமல், படப்பிடிப்பு தளங்களில் சில ஹீரோயின்கள் போல ஓவர் பந்தா காட்டாமல் இருக்குற இடமே தெரியாமல் நடித்து விட்டு செல்வதால், ஏகப்பட்ட வாய்ப்புகள் தொடர்ந்து குவிந்து வருகிறதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X