ரகஸ்யா to
சீனா தானா பாட்டு வந்த புதிதில், ரகஸ்யா கோலிவுட்டின் புதிய குத்தாட்ட ராணியாக உருவெடுத்தார். ஏகப்பட்ட பட வாய்ப்புகள்அவரது ஹோட்டல் ரூமின் கதவை முட்டி மோதி படையெடுத்தன. வந்த வாய்ப்புகளை எல்லாம் படு லாவகமாக ஏற்றுக் கொண்டுகாசு பார்த்தார் ரகஸ்யா.
இப்போது ரகஸ்யா கையில் பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லை. ஒரே ஒரு படத்தில் தான் நடித்து வருகிறார், அதாவதுகுத்தாட்டம் போட்டு வருகிறார். இருந்தாலும் ஏற்றிய சம்பளத்தை இறக்குவது மாதிரி இல்லையாம்.
போதுமான அளவுக்கு காசு பார்த்து விட்டதால்தான் ரகஸ்யா இப்போது கிராக்கி பண்ணுகிறார். இந்த மும்பை குஜிலிகளேஇப்படித்தான். காரியம் ஆகும் வரை காலைப் பிடிக்கத் தயங்க மாட்டார்கள்.
ரகஸ்யா மறுக்கும் குத்துப்பாட்டுக்கள் எல்லாம் இப்போது ஜூனியர் சில்க்குக்கு திரும்பிக் கொண்டிருக்கிறதாம்.
இதனால் ஜூனியரின் காட்டில் செம மழையாம். கொடுக்கிற காசை கொடுங்க.. இந்தா எடுத்துக்குங்க என்று கேமரா முன்கலக்கலாக வந்து நின்று விடுகிறாராம்.


Click it and Unblock the Notifications











