twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கூட்டிக் குறைக்கும் ரகஸ்யா சீனா தானா ரகஸ்யாவின் மார்க்கெட் பாதாளத்தை நோக்கி வேகமாகப் போய்க் கொண்டிருக்கிறது. இதனால் தனது சம்பளத்தையும்கூட்டிக் குறைத்து மார்க்கெட் ஆட்டம் காணாத வகையில் ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார் அம்மணி. சீனா தானா பாட்டு வந்த போது ரகஸ்யாவுக்கு கடும் கிராக்கி காணப்பட்டது. நான், நீ என்று போட்டி போட்டுக் கொண்டுரகஸ்யாவை புக் செய்தனர் தயாரிப்பாளர்கள். ஆனால் எந்த வேகத்தில் மேலே போனாரோ அதே வேகத்தில் கீழிறங்கஆரம்பித்தார் ரகஸ்யா. இப்போது ஹீரோயின்களே குத்தாட்டத்தில் குபேரர்களாகி விட்ட நிலையில் ரகஸ்யா போன்றவர்களின் நிலையை சொல்லித்தெரிய வேண்டியதில்லை. மார்க்கெட் நிலை படு மோசமாகி வருவதை உணர்ந்த ரகஸ்யாவும் தனது சம்பளத்தை மாற்றி அமைக்ககட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார். சீனா தானா பாட்டுக்கு 25 லட்சம் சம்பளமாக வாங்கிய ரகஸ்யாவின் இப்போதைய சம்பளம் படு சீப்பாகி விட்டது.தயாரிப்பாளரைப் பொறுத்து, காஸ்ட்யூமைப் பொறுத்து இப்போது சம்பளத்தை நிர்ணயிக்கிறார்.4 லட்சம், 3 லட்சம், 2 லட்சம், 1 லட்சம் என ரகஸ்யாவின் சம்பளமும், மார்க்கெட்டும் ஊசலாடிக் கொண்டிருக்கிறதாம். குத்தாட்டகுமரிகளின் ஆதிக்கத்தை சமாளித்து, தொடர்ந்து ஆட வேண்டும் என்ற வைராக்கியத்தில் உள்ள ரகஸ்யா சம்பளத்தைக்குறைத்துக் கொள்வதற்கு சற்றும் தயங்குவதில்லையாம். ஒரு காலத்தில் டெய்லி 10,000 என்ற பிளாட் ரேட்டுக்கு டான்ஸ் ஆடி வந்தவர் தான் ரகஸ்யா. எனவே இந்த சம்பளக் குறைப்பு,கூட்டல் எல்லாம் ரகஸ்யாவுக்கு ஒரு மேட்டரே இல்லை. ரகஸ்யாவை தரிசிக்க காத்திருக்கும் ரசிக மகா ஜனங்களைகுஷிப்படுத்தினால் போதும்

    By Staff
    |
    சீனா தானா ரகஸ்யாவின் மார்க்கெட் பாதாளத்தை நோக்கி வேகமாகப் போய்க் கொண்டிருக்கிறது. இதனால் தனது சம்பளத்தையும்கூட்டிக் குறைத்து மார்க்கெட் ஆட்டம் காணாத வகையில் ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார் அம்மணி.

    சீனா தானா பாட்டு வந்த போது ரகஸ்யாவுக்கு கடும் கிராக்கி காணப்பட்டது. நான், நீ என்று போட்டி போட்டுக் கொண்டுரகஸ்யாவை புக் செய்தனர் தயாரிப்பாளர்கள். ஆனால் எந்த வேகத்தில் மேலே போனாரோ அதே வேகத்தில் கீழிறங்கஆரம்பித்தார் ரகஸ்யா.

    இப்போது ஹீரோயின்களே குத்தாட்டத்தில் குபேரர்களாகி விட்ட நிலையில் ரகஸ்யா போன்றவர்களின் நிலையை சொல்லித்தெரிய வேண்டியதில்லை. மார்க்கெட் நிலை படு மோசமாகி வருவதை உணர்ந்த ரகஸ்யாவும் தனது சம்பளத்தை மாற்றி அமைக்ககட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார்.

    சீனா தானா பாட்டுக்கு 25 லட்சம் சம்பளமாக வாங்கிய ரகஸ்யாவின் இப்போதைய சம்பளம் படு சீப்பாகி விட்டது.தயாரிப்பாளரைப் பொறுத்து, காஸ்ட்யூமைப் பொறுத்து இப்போது சம்பளத்தை நிர்ணயிக்கிறார்.

    4 லட்சம், 3 லட்சம், 2 லட்சம், 1 லட்சம் என ரகஸ்யாவின் சம்பளமும், மார்க்கெட்டும் ஊசலாடிக் கொண்டிருக்கிறதாம். குத்தாட்டகுமரிகளின் ஆதிக்கத்தை சமாளித்து, தொடர்ந்து ஆட வேண்டும் என்ற வைராக்கியத்தில் உள்ள ரகஸ்யா சம்பளத்தைக்குறைத்துக் கொள்வதற்கு சற்றும் தயங்குவதில்லையாம்.

    ஒரு காலத்தில் டெய்லி 10,000 என்ற பிளாட் ரேட்டுக்கு டான்ஸ் ஆடி வந்தவர் தான் ரகஸ்யா. எனவே இந்த சம்பளக் குறைப்பு,கூட்டல் எல்லாம் ரகஸ்யாவுக்கு ஒரு மேட்டரே இல்லை. ரகஸ்யாவை தரிசிக்க காத்திருக்கும் ரசிக மகா ஜனங்களைகுஷிப்படுத்தினால் போதும்

      Read more about: ragasyas remuneration
      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X