சந்திரமுகி சூட்டிங் ஸ்பாட்டில் கலகலப்பு.. ராதிகா, வடிவேலுவுடன் போஸ் கொடுத்த லாரன்ஸ்!

சென்னை : நடிகர் ரஜினிகாந்த், நயன்தாரா, ஜோதிகா, பிரபு, வடிவேலு உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த 2005ம் ஆண்டில் வெளியானது சந்திரமுகி.

ஹாரர் த்ரில்லர் வகையறாவில் வெளியான இந்தப் படத்தில் காமெடி கலாட்டாக்களும், த்ரில்லரும் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது.

இந்தப் படத்தின் இரண்டாவது பாகத்தை டைரக்டர் பி வாசுவே இயக்கி வருகிறார். அடுத்தடுத்து கட்ட சூட்டிங்குகள் நடத்தப்பட்டு வருகின்றன.

 மிரட்டலான சந்திரமுகி படம்

மிரட்டலான சந்திரமுகி படம்

நடிகர் ரஜினிகாந்தின் எவர்கிரீன் படங்களில் சந்திரமுகிக்கு மிகச்சிறந்த இடம் உண்டு. பி வாசு இயக்கத்தில் வெளியான இந்தப் படம் மிகச்சிறந்த படைப்பாக கடந்த 2005ம் ஆண்டில் வெளியானது. மலையாளத்தில் இருந்து தமிழில் ரீமேக்கானாலும் தமிழ்ப்படமாவே வெளியாகி அனைவரையும் கவர்ந்தது.

ரஜினி -வடிவேலு காம்பினேஷன் காட்சிகள்

ரஜினி -வடிவேலு காம்பினேஷன் காட்சிகள்

ஹாரர் த்ரில்லர் படமாக வெளியான சந்திரமுகி படத்தின் மேக்கிங், திரைக்கதை, காட்சி அமைப்புகள் உள்ளிட்டவை அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. குறிப்பாக ரஜினி -வடிவேலு காம்பினேஷன் காட்சிகள், நயன்தாராவின் ப்ரெஷ் லுக், ஜோதிகாவின் மிரட்டலான நடிப்பு போன்றவை இந்தப் படத்திற்கு பலம் சேர்த்தன.

லாரன்ஸ் நடிப்பில் சந்திரமுகி 2

லாரன்ஸ் நடிப்பில் சந்திரமுகி 2

இந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த நிலையில் தற்போது 18 ஆண்டுகள் கழித்து இந்தப் படத்தின் இரண்டாவது பாகத்தை டைரக்டர் பி வாசுவே இயக்கி வருகிறார். ரஜினிகாந்திற்கு பதிலாக இந்தப் படத்தில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாகியுள்ளார். மேலும் படத்தில் ராதிகா சரத்குமார், வடிவேலு, மனோபாலா உள்ளிட்டவர்களும் நடித்து வருகின்றனர்.

ஐதராபாத்தில் 2வது கட்ட சூட்டிங்

ஐதராபாத்தில் 2வது கட்ட சூட்டிங்

படத்தின் பூஜை கடந்த சில வாரங்களுக்கு முன்பு போடப்பட்டு மைசூரு பேலசில் முதல் கட்ட சூட்டிங் நடத்தப்பட்டது. இதையடுத்து தற்போது ஐதராபாத்தில் பிரம்மாண்ட அரண்மனை செட்டை போட்டு இரண்டாவது கட்ட படப்பிடிப்பை இயக்குநர் பி வாசு நடத்தி வருகிறார். இந்தப் படத்தில் ஹீரோயின் இன்னும் இறுதி செய்யப்படவில்லை.

காஜல் அகர்வால் நாயகி?

காஜல் அகர்வால் நாயகி?

இதனிடையே படத்தில் காஜல் அகர்வால் நாயகியாக நடிக்கவுள்ளதாகவும் இதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் படக்குழு சார்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல் பார்ட்டில் ஜோதிகா தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்த நிலையில், அந்த கேரக்டரில் தற்போது காஜல் அகர்வால் இணையவுள்ளது சிறப்பாக பார்க்கப்படுகிறது.

ரசிகர்கள் உற்சாகம்

ரசிகர்கள் உற்சாகம்

தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்துவரும் காஜல் அகர்வால், படத்திற்காக குதிரையேற்றம் முதலியவற்றை செய்து அசத்தினார். படத்திற்கு ஒரு மாத காலம் இடைவெளி விடப்பட்டுள்ளது. விரைவில் அடுத்தக்கட்ட சூட்டிங் துவங்கவுள்ளது. இதனிடையே, சந்திரமுகி 2 படத்தில் காஜல் அகர்வால் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தயுள்ளது.

நாயகி இல்லாமல் சூட்டிங்

நாயகி இல்லாமல் சூட்டிங்

இந்நிலையில் ஐதராபாத்தில் நடைபெற்றுவரும் சந்திரமுகி 2 படத்தின் சூட்டிங் நாயகி இல்லாமலேயே நடைபெற்று வருகிறது. இதன் 2வது கட்ட சூட்டிங்கில் ராகவா லாரன்ஸ், ராதிகா சரத்குமார், வடிவேலு, மனோபாலா உள்ளிட்டவர்கள் பங்கேற்றுள்ள நிலையில் சூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

 பிரம்மாண்டமான அரண்மனை செட்

பிரம்மாண்டமான அரண்மனை செட்

சந்திரமுகி படத்தில் அரண்மனையும் மிகவும் பிரம்மாண்டமாக படத்தின் ஒரு அங்கமாக அமைந்திருந்தது. பல இடங்கள் மிரட்டலான அனுபவத்தை ரசிகர்களுக்கு கொடுத்தது. அதேபோல தற்போது வெளியாகியுள்ள சந்திரமுகி 2 படத்தின் சூட்டிங் ஸ்பாட் புகைப்படத்திலும் பிரம்மாண்டமான அரண்மனை காணப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X