ஷூட்டிங் தொடக்கம்.. சுந்தர்.சி படத்தில், பிக் பாஸ் நடிகை மாற்றம்.. மராத்தி ஹீரோயின் நடிக்கிறார்!

By

சென்னை: சுந்தர்.சி படத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்பட்ட பிரபல பிக் பாஸ் நடிகை இப்போது மாற்றப்பட்டுள்ளார்.

காமெடி மற்றும் ஹாரர் படங்களை இயக்கி வரும் சுந்தர்.சி, இப்போது அரண்மனை 3 படத்தை இயக்குகிறார்.

இதன் ஷூட்டிங் குஜராத்தில் நடந்தபோது கொரோனா பரவல் அதிகமானது. இதையடுத்து படக்குழு சென்னை திரும்பியது.

நடிகை ஆண்ட்ரியா

நடிகை ஆண்ட்ரியா

அரண்மனை 3 படத்தில் ஹீரோவாக ஆர்யா நடிக்கிறார். அவர்தான் பேயாக நடிப்பதாகக் கூறப்படுகிறது. ஹீரோயின்களாக, ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, சாக்‌ஷி அகர்வால் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் அடுத்த ஷெட்யூல், ஐதராபாத்தில் நடக்க இருந்தது. கொரோனா காரணமாக, இப்போது சென்னையில் நடக்கும் என்று தெரிகிறது.

மாயாபஜார்

மாயாபஜார்

இதற்கிடையே, தனது அவ்னி சினிமேக்ஸ் நிறுவனம் சார்பில் அவர் படங்களையும் தயாரித்து வருகிறார். இதுவரை ஹலோ நான் பேய் பேசுகிறேன், முத்தின கத்தரிக்கா, மீசைய முறுக்கு, நட்பே துணை, நான் சிரித்தால் ஆகிய படங்களை தயாரித்துள்ளார். இப்போது, கன்னடத்தில் ஹிட்டான 'மாயாபஜார்' படத்தின் ரீமேக் உரிமையை இவர் பெற்றிருக்கிறார்.

பிரகாஷ் ராஜ்

பிரகாஷ் ராஜ்

இந்தப் படத்தில், ராஜ் பி ஷெட்டி, வசிஷ்டா சிம்ஹா, பிரகாஷ் ராஜ், அச்சியுத் குமார், சாது கோகிலா உள்பட பலர் நடித்திருந்தனர். ராதாகிருஷ்ண ரெட்டி இயக்கி இருந்த இந்தப் படம் கன்னடத்தில் வரவேற்பை பெற்றிருந்தது. இந்தப் படத்தின் தமிழ் ரீமேக்கை சுந்தர்.சி தயாரிப்பில் பத்ரி இயக்குகிறார்.

ரைசா வில்சன்

ரைசா வில்சன்

இவர் சுந்தர்.சி நடித்த வீராப்பு, ஐந்தாம் படை, பரத் நடித்த தம்பிக்கு இந்த ஊரு, சிவா நடித்த தில்லுமுல்லு, ஆடாம ஜெயிச்சோமடா ஆகிய படங்களை இயக்கியவர். சில படங்களுக்கு வசனம் எழுதி உள்ளார். இதில் பிரசன்னா, அஸ்வின், யோகிபாபு உள்பட பலர் நடிக்கின்றனர். ஹீரோயினாக பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த ரைசா வில்சன் நடிப்பதாகக் கூறப்பட்டது.

ஸ்ருதி மராத்தி

ஸ்ருதி மராத்தி

இப்போது அவர் மாற்றப்பட்டுள்ளார். ஸ்ருதி மராத்தி நடிக்கிறார். இவர் ஏற்கனவே, தமிழில் இந்திரவிழா, குருசிஷ்யன் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். மராத்தி மற்றும் இந்தி படங்களிலும் நடித்துள்ளார். இதன் ஷூட்டிங் சென்னையில் இன்று தொடங்கியது. சத்யா இசை அமைக்கிறார். கிச்சா ஒளிப்பதிவு செய்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X