ஷூட்டிங் நடக்கும்போதே வியாபாரத்தில் 2.0 படத்தை முந்திய ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர்?

By Siva

Recommended Video

2.0 படத்தை முந்திய ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர்?-வீடியோ

ஹைதராபாத்: ராஜமவுலி இயக்கி வரும் ஆர்ஆர்ஆர் தெலுங்கு படம் ரஜினிகாந்தின் 2.0 படத்தை முந்தியுள்ளது.

ராம் சரண் தேஜா, ஜூனியர் என்.டி. ஆர். ஆகியோரை வைத்து எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கி வரும் படம் ஆர்ஆர்ஆர். பாகுபலி 2 படத்தை அடுத்து ராஜமவுலி இயக்கும் இந்த படத்திற்கு தற்போதே எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது.

இந்நிலையில் தான் ஆர்ஆர்ஆர் படம் புதிய சாதனை படைத்துள்ளது.

2.0

2.0

ஆர்ஆர்ஆர் படத்தின் சாட்டிலைட் உரிமத்தை பிரபல தொலைக்காட்சி சேனல் ரூ. 132 கோடிக்கு வாங்கியுள்ளது. முன்னதாக ரஜினிகாந்தின் 2.0 படத்தின் சாட்டிலைட் உரிமம் ரூ. 108 கோடிக்கு விற்பனையானது. இதன் மூலம் ஆர்ஆர்ஆர் 2.0 பட சாதனையை முறியடித்துள்ளது.

பெரிய தொகை

பெரிய தொகை

படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போதே ஒரு படத்தின் சாட்டிலைட் உரிமம் இவ்வளவு பெரிய தொகைக்கு விற்பனையாகியுள்ளது சினிமா வட்டாரத்தில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜமவுலி என்கிற ஒரு பெயர் போதுமே வியாபாரம் செய்ய.

ஜூனியர் என்.டி.ஆர்.

ஜூனியர் என்.டி.ஆர்.

ஆர்ஆர்ஆர் படம் ரூ. 300 கோடி பொருட்செலவில் எடுக்கப்பட்டு வருகிறது. படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் உள்ள ஸ்டுடியோ ஒன்றில் நடந்து வருகிறது. இந்த படத்தின் மூலம் முதல்முறையாக ராம் சரணும், ஜூனியர் என்.டி.ஆரும். சேர்ந்து நடிக்கிறார்கள்.

சமுத்திரக்கனி

சமுத்திரக்கனி

ஆர்ஆர்ஆர் படத்தில் சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இது தான் அவர் நடிக்கும் முதல் தெலுங்கு படம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆர்ஆர்ஆர் படத்தில் நடிக்க முடியுமா என்று ராஜமவுலி கேட்டதுமே ஓகே சொல்லிவிட்டாராம் சமுத்திரக்கனி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X