புளியந்தோப்பில் ரஜினி! சென்னை புளியந்தோப்பு, உதவி போலீஸ் ஆணையர் அலுவலகத்தில் ரஜினியைகைது செய்வது போன்ற காட்சியை சிவாஜி படத்திற்காக இயக்குனர் ஷங்கர்படமாக்கினார்.ஏவி.எம்.மின் பிரமாண்டத் தயாரிப்பில், ஷங்கரின் படு பிரமாண்டமான இயக்கத்தில்இளமைத் துடிப்புடன் புத்தம் புதிய ரஜினியும் ஷ்ரேயாவும் நடிக்கும் சிவாஜி படத்தின்ஷூட்டிங் நிதானமாகவும், அதே நேரத்தில் படு நேர்த்தியாகவும் வளர்ந்து வருகிறது.சென்னையில் தொடங்கி ஹைதராபாத்திலும், வெளிநாடுகளிலும் படப்பிடிப்பைநடத்திய ஷங்கர் மீண்டும் சென்னையில் தற்போது முகாமிட்டு ஆங்காங்கேபடப்பிடிப்பை நடத்திக் கொண்டிருக்கிறார்.கடந்த ஒரு வாரமாக பின்னி மில் வளாகத்தில் படப்பிடிப்பு நடந்தது. அங்கு ரஜினிசிறையில் அடைக்கப்பட்டிருப்பது போல காட்சிகள் படமாக்கப்பட்டன.இந் நிலையில் புளியந்தோப்பு உதவி ஆணையர் அலுவலகத்தில் சிவாஜி படப்பிடிப்புநடந்தது.உதவி ஆணையர் அலுவலகத்தில் ரஜினி வெளியே வருவது போலவும், அவரைபோலீஸார் கைது செய்து காரில் ஏற்றிச் செல்வது போலவும் காட்சிகள்எடுக்கப்பட்டன.ரஜினியை கைது செய்யும் காவல்துறை ஆணையராக ராஜேந்திரநாத் நடித்தார்.ரஜினியை கைது செய்யும்போது பொதுமக்கள் அதை எதிர்த்து கோஷம் போடுவதுபோலவும் காட்சிகள் படமாக்கப்பட்டன. இதற்காக 5,000 துணை நடிகர், நடிகையர்அங்கே குவிக்கப்பட்டிருந்தனர்.எப்படியும் பெரும் கூட்டம் கூடி விடும் என்பதை உணர்ந்திருந்த ஷங்கர், துணைநடிகர்கள் பலருக்கு காக்கிச் சட்டை அணிவித்து போலீஸ்காரர்களை போல நிறுத்திஷூட்டிங்கை பார்க்க வந்திருந்த பொதுமக்களை கட்டுப்படுத்தினார்.நிஜ போலீஸ் என நினைத்து கூட்டத்தினரும் கட்டுப்பட்டனர். ஆனால் அவர்கள்டுபாக்கூர் போலீஸ் எனத் தெரிய வந்ததும் அவர்களை திட்டி, தள்ளிவிட்டபடி ரஜினியைபார்க்க ண்டியடித்தனர்.ஆனால் அப்போது நிஜ போலீஸார் குறுக்கிட்டு கூட்டத்தை ஒழுங்குபடுத்தினர்.ரஜினி படு டிப்டாப்பாக, டீக்காக காணப்பட்டார். அரக்கு கலர் டீ சர்ட், பேண்ட்அணிந்திருந்த ரஜினியின் தலை நன்கு ஏற்றி சீவப்பட்டிருந்தது. மேக்கப்பில் பழையரஜினி போல படு பளிச்சென இருந்தார்.கலங்குங்க..

By Staff
சென்னை புளியந்தோப்பு, உதவி போலீஸ் ஆணையர் அலுவலகத்தில் ரஜினியைகைது செய்வது போன்ற காட்சியை சிவாஜி படத்திற்காக இயக்குனர் ஷங்கர்படமாக்கினார்.

ஏவி.எம்.மின் பிரமாண்டத் தயாரிப்பில், ஷங்கரின் படு பிரமாண்டமான இயக்கத்தில்இளமைத் துடிப்புடன் புத்தம் புதிய ரஜினியும் ஷ்ரேயாவும் நடிக்கும் சிவாஜி படத்தின்ஷூட்டிங் நிதானமாகவும், அதே நேரத்தில் படு நேர்த்தியாகவும் வளர்ந்து வருகிறது.

சென்னையில் தொடங்கி ஹைதராபாத்திலும், வெளிநாடுகளிலும் படப்பிடிப்பைநடத்திய ஷங்கர் மீண்டும் சென்னையில் தற்போது முகாமிட்டு ஆங்காங்கேபடப்பிடிப்பை நடத்திக் கொண்டிருக்கிறார்.

கடந்த ஒரு வாரமாக பின்னி மில் வளாகத்தில் படப்பிடிப்பு நடந்தது. அங்கு ரஜினிசிறையில் அடைக்கப்பட்டிருப்பது போல காட்சிகள் படமாக்கப்பட்டன.

இந் நிலையில் புளியந்தோப்பு உதவி ஆணையர் அலுவலகத்தில் சிவாஜி படப்பிடிப்புநடந்தது.

உதவி ஆணையர் அலுவலகத்தில் ரஜினி வெளியே வருவது போலவும், அவரைபோலீஸார் கைது செய்து காரில் ஏற்றிச் செல்வது போலவும் காட்சிகள்எடுக்கப்பட்டன.

ரஜினியை கைது செய்யும் காவல்துறை ஆணையராக ராஜேந்திரநாத் நடித்தார்.ரஜினியை கைது செய்யும்போது பொதுமக்கள் அதை எதிர்த்து கோஷம் போடுவதுபோலவும் காட்சிகள் படமாக்கப்பட்டன. இதற்காக 5,000 துணை நடிகர், நடிகையர்அங்கே குவிக்கப்பட்டிருந்தனர்.

எப்படியும் பெரும் கூட்டம் கூடி விடும் என்பதை உணர்ந்திருந்த ஷங்கர், துணைநடிகர்கள் பலருக்கு காக்கிச் சட்டை அணிவித்து போலீஸ்காரர்களை போல நிறுத்திஷூட்டிங்கை பார்க்க வந்திருந்த பொதுமக்களை கட்டுப்படுத்தினார்.

நிஜ போலீஸ் என நினைத்து கூட்டத்தினரும் கட்டுப்பட்டனர். ஆனால் அவர்கள்டுபாக்கூர் போலீஸ் எனத் தெரிய வந்ததும் அவர்களை திட்டி, தள்ளிவிட்டபடி ரஜினியைபார்க்க ண்டியடித்தனர்.

ஆனால் அப்போது நிஜ போலீஸார் குறுக்கிட்டு கூட்டத்தை ஒழுங்குபடுத்தினர்.

ரஜினி படு டிப்டாப்பாக, டீக்காக காணப்பட்டார். அரக்கு கலர் டீ சர்ட், பேண்ட்அணிந்திருந்த ரஜினியின் தலை நன்கு ஏற்றி சீவப்பட்டிருந்தது. மேக்கப்பில் பழையரஜினி போல படு பளிச்சென இருந்தார்.

கலங்குங்க..

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X