ரஜினி ஷூட்டிங்கில் சலசலப்பு சென்னையில் நடந்த ரஜினியின் சிவாஜி பட ஷூட்டிங்கை நிறுத்துமாறு காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியதால்பெரும் சலசலப்பு ஏற்பட்டது.ரஜினியின் சிவாஜி பட ஷூட்டிங் தற்போது சென்னையின் பல்வேறு இடங்களில் படமாக்கப்பட்டு வருகிறது. சிலநாட்களுக்கு முன்பு புளியந்தோப்பு காவல் நிலையத்தில் ரஜினி சம்பந்தப்பட்ட சில காட்சிகளை இயக்குநர்ஷங்கர் படமாக்கினார்.நேற்று கீழ்ப்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு பள்ளிக் கூடத்தில் ரஜினி, துணை நடிகர்கள் பங்கேற்ற சில காட்சிகளைஷங்கர் படமாக்கினார். காலை 9.30 மணிக்கு நடந்த இந்த படப்பிடிப்பில் ரஜினியுடன் 300க்கும் மேற்பட்டதுணை நடிகர், நடிகையர் பங்கேற்றனர்.அப்போது அங்கு ஒரு இன்ஸ்பெக்டர் வந்தார். படப்பிடிப்பை உடனடியாக நிறுத்துங்கள், இங்கு படப்பிடிப்புநடத்தக் கூடாது என்று கூறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.ஏன் படப்பிடிப்பை நடத்தக் கூடாது என்கிறீர்கள், முறையாக நாங்கள் அனுமதி வாங்கியிருக்கிறோம் என்று படக்குழுவினர் அந்த இன்ஸ்பெக்டரிடம் கூறியபோது, அதை ஏற்காத இன்ஸ்பெக்டர், ஆணையர் அலுவலகத்தில்தான் அனுமதி வாங்க வேண்டும் என்று கண்டிப்புடன் கூறினார்.அதற்கு படக்குழுவினர் இது சாதாரண படப்பிடிப்புதான், பொது இடம் கிடையாது. எனவே இங்கு படப்பிடிப்புநடத்த காவல்துறை ஆணையரிடம் அனுமதி வாங்கத் தேவையில்லை என்றனர். இதை இன்ஸ்பெக்டர்ஏற்கவில்லை. இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்து கொண்டிருந்தது.இந்த நிலையில் படக் குழுவினர் உயர் காவல்துறை அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு இன்ஸ்பெக்டர் குறித்துதெரிவித்தனர். இதையடுத்து சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டரைத் தொடர்பு கொண்ட உயர் அதிகாரிகள் விசாரணைநடத்தினர்.இதைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் அங்கிருந்து சென்று விட்டார். அதன் பின்னர் மாலை 6 மணி வரைபடப்பிடிப்பு தொடர்ந்து நடந்தது. இந்த சர்ச்சையால் சில நிமிடங்களுக்கு படப்பிடிப்பில் பரபரப்பு ஏற்பட்டது.
ரஜினியின் சிவாஜி பட ஷூட்டிங் தற்போது சென்னையின் பல்வேறு இடங்களில் படமாக்கப்பட்டு வருகிறது. சிலநாட்களுக்கு முன்பு புளியந்தோப்பு காவல் நிலையத்தில் ரஜினி சம்பந்தப்பட்ட சில காட்சிகளை இயக்குநர்ஷங்கர் படமாக்கினார்.
நேற்று கீழ்ப்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு பள்ளிக் கூடத்தில் ரஜினி, துணை நடிகர்கள் பங்கேற்ற சில காட்சிகளைஷங்கர் படமாக்கினார். காலை 9.30 மணிக்கு நடந்த இந்த படப்பிடிப்பில் ரஜினியுடன் 300க்கும் மேற்பட்டதுணை நடிகர், நடிகையர் பங்கேற்றனர்.
அப்போது அங்கு ஒரு இன்ஸ்பெக்டர் வந்தார். படப்பிடிப்பை உடனடியாக நிறுத்துங்கள், இங்கு படப்பிடிப்புநடத்தக் கூடாது என்று கூறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
ஏன் படப்பிடிப்பை நடத்தக் கூடாது என்கிறீர்கள், முறையாக நாங்கள் அனுமதி வாங்கியிருக்கிறோம் என்று படக்குழுவினர் அந்த இன்ஸ்பெக்டரிடம் கூறியபோது, அதை ஏற்காத இன்ஸ்பெக்டர், ஆணையர் அலுவலகத்தில்தான் அனுமதி வாங்க வேண்டும் என்று கண்டிப்புடன் கூறினார்.அதற்கு படக்குழுவினர் இது சாதாரண படப்பிடிப்புதான், பொது இடம் கிடையாது. எனவே இங்கு படப்பிடிப்புநடத்த காவல்துறை ஆணையரிடம் அனுமதி வாங்கத் தேவையில்லை என்றனர். இதை இன்ஸ்பெக்டர்ஏற்கவில்லை. இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்து கொண்டிருந்தது.
இந்த நிலையில் படக் குழுவினர் உயர் காவல்துறை அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு இன்ஸ்பெக்டர் குறித்துதெரிவித்தனர். இதையடுத்து சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டரைத் தொடர்பு கொண்ட உயர் அதிகாரிகள் விசாரணைநடத்தினர்.
இதைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் அங்கிருந்து சென்று விட்டார். அதன் பின்னர் மாலை 6 மணி வரைபடப்பிடிப்பு தொடர்ந்து நடந்தது. இந்த சர்ச்சையால் சில நிமிடங்களுக்கு படப்பிடிப்பில் பரபரப்பு ஏற்பட்டது.


Click it and Unblock the Notifications











