ரஜினி- சேதுபதி- கார்த்திக் சுப்புராஜ்.. டார்ஜிலிங்கில் தொடங்கியது சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படம்!
Recommended Video

டேராடூன்: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு டார்ஜிலிங்கில் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், தற்போது இன்னொரு இளம் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் புதிய படத்தில் நடிக்க ரஜினிகாந்த் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்தை நீண்ட நாட்களுக்கு பிறகு சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இதற்காக ரஜினி டார்ஜிலிங் புறப்பட்டு சென்றுள்ளார்.

டேராடூனில் இன்னும் ஒரு மாதம் படப்பிடிப்பு நடக்க உள்ளது. படத்தின் முக்கியமான காட்சிகள் டார்ஜிலிங்கில் நடக்கிறது. படத்தின் மொத்த குழுவும் இதற்காக டார்ஜிலிங் சென்றுள்ளது. 3 மாதத்தில் ஷூட்டிங் முடித்து படத்தை வேகமாக வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
வரும் 2019ம் ஆண்டு தொடக்கத்தில் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். ரஜினி விஜய்சேதுபதியை திரையில் பார்க்க எல்லோரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
இந்த படத்தில் பாபி சிம்ஹா, சனத் ரெட்டி, மேகா ஆகாஷ் ஆகிய முக்கியமான நபர்கள் நடிக்கிராகிறாள். ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்கவிருக்கிறார்.இவர்கள் முதல்முறை ஜோடியாக நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார்.


Click it and Unblock the Notifications











