»   »  ரஜினியின் சிவாஜி: ரகசிய பூஜை- டிசம்பரில் சூட்டிங் ரஜினிகாந்த் நடிக்கும் சிவாஜி படத்தின் தொடக்க விழா பூஜை சென்னை ஏவிஎம் ஸ்டூடியோவில் மிக மிக ரகசியமாக நடந்தது.ஏவிஎம் நிறுவனம் தனது 60வது ஆண்டில், ரஜினிகாந்த் நடிக்கும் சிவாஜி என்ற படத்தை தயாரிக்கிறது. இது ஏவிஎம் தயாரிக்கும்169வது படமாகும். இந்த படத்தை ஷங்கர் இயக்குகிறார்.படத்தின் தொடக்க விழா பூஜை ஏவிஎம் ஸ்டூடியோவின் 3வது தளத்தில் நேற்று நடந்தது.ஏவிஎம் நிறுவனரான மறைந்த ஏ.வி.மெய்யப்ப செட்டியார் முதன் முதலாக காரைக்குடியில் நடத்திய ஸ்டூடியோ அரங்கைஅப்படியே எடுத்து வந்து, அவருடைய நினைவாக அப்படியே அமைக்கப்பட்ட அரங்கில் இந்த படப் பூஜை நடைபெற்றதுஎன்பது குறிப்பிடத்தக்கது.தமிழ்நாட்டில் ஏற்பட்ட மழை சேதங்களை கருத்தில் கொண்டு சிவாஜி படத்தின் பூஜையை எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல்எளிமையான முறையில் நடத்த ரஜினிகாந்த், ஏவிஎம் சரவணன், இயக்குனர் ஷங்கர் ஆகிய 3 பேரும் திட்டமிட்டனர்.அதன்படி அழைப்பிதழ் ஏதும் அச்சடிக்கப்படாமல் காதும் காதும் வைத்தது மாதிரி ரகசியமாக சிவாஜி படப்பூஜைநடத்தப்பட்டது.பூஜைக்கு வந்த ரஜினிகாந்தை ஏவிஎம் சரவணன், எம்.எஸ்.குகன், இயக்குனர் ஷங்கர் ஆகியோர் வரவேற்றனர்.இதில், ஹீரோயின் ஸ்ரேயா, எழுத்தாளர் சுஜாதா, இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானின் தாயார் கரீமா பேகம், கவிஞர்வைரமுத்து, நடிகர் விவேக், ஒளிப்பதிவாளர் கே.வி. ஆனந்த், டான்ஸ் மாஸ்டர் ராஜூ சுந்தரம்,ஆர்ட் டைரக்டர் தோட்டா தரணி, காதல் பட இயக்குனர் பாலாஜி சக்திவேல், சிவகாசி பட இயக்குனர் பேரரசு மற்றும் உல்லாசம்பட இயக்குனர்கள் ஜேடி-ஜெர்ரி (இவர்கள் இந்தப் படத்தில் ஷங்கருக்கு உதவப் போகின்றனர்), மணிரத்னத்தின் முன்னாள்அஸிஸ்டெண்ட் காந்தி கிருஷ்ணா, ரஜினிகாந்த் நற்பணி மன்ற தலைவர் சத்யநாராயணா ஆகியோர் கலந்து கொண்டனர்.இயக்குனர் எஸ்.பி. முத்துராமன் அனைவரையும் வரவேற்றார். புரோகிதர் மந்திரம் ஓத பூஜை நடந்தது.விழாவில் பேசிய வைரமுத்து, ஏவிஎம்க்கு 60 வருடத்தின் உச்சமாகவும், உங்களுக்கு (ரஜினிக்கு) திரைத்துறையில் 30 வருடத்தின்உச்சமாகவும் இந்த சிவாஜி திரைப்படம் அமையும் என்று கூற அதைக் கேட்டு ரஜினிகாந்த் சிரித்தார்.தயாரிப்பாளர்களில் ஒருவரான எம்.எஸ். குகன் பின்னர் நிருபர்களிடம் பேசுகையில்,சிவாஜி படத்தில் கதாநாயகி, ஸ்ரேயா ஒருவர் தான். வேறு கதாநாயகி கிடையாது. படப்பிடிப்பு தேதியை இன்னும் முடிவுசெய்யவில்லை. தமிழ்நாட்டின் மழை-வெள்ள சேதங்களை மனதில் கொண்டு இந்த விழா எளிமையாக நடத்தப்பட்டது.ரஜினிகாந்த், இயக்குனர் ஷங்கர் ஆகிய இரண்டு பேரை தவிர மற்ற அத்தனை தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் அட்வான்ஸ்கொடுக்கப்பட்டுவிட்டது என்றார். படத்தின் ஆரம்பக் காட்சிகளுக்காக ஹைதராபாத்தில் செட் அமைக்கும் வேலை நடந்து வருகிறதாம். டிசம்பர் 15 முதல் சூட்டிங்தொடங்கும் என்கிறார்கள்.

ரஜினியின் சிவாஜி: ரகசிய பூஜை- டிசம்பரில் சூட்டிங் ரஜினிகாந்த் நடிக்கும் சிவாஜி படத்தின் தொடக்க விழா பூஜை சென்னை ஏவிஎம் ஸ்டூடியோவில் மிக மிக ரகசியமாக நடந்தது.ஏவிஎம் நிறுவனம் தனது 60வது ஆண்டில், ரஜினிகாந்த் நடிக்கும் சிவாஜி என்ற படத்தை தயாரிக்கிறது. இது ஏவிஎம் தயாரிக்கும்169வது படமாகும். இந்த படத்தை ஷங்கர் இயக்குகிறார்.படத்தின் தொடக்க விழா பூஜை ஏவிஎம் ஸ்டூடியோவின் 3வது தளத்தில் நேற்று நடந்தது.ஏவிஎம் நிறுவனரான மறைந்த ஏ.வி.மெய்யப்ப செட்டியார் முதன் முதலாக காரைக்குடியில் நடத்திய ஸ்டூடியோ அரங்கைஅப்படியே எடுத்து வந்து, அவருடைய நினைவாக அப்படியே அமைக்கப்பட்ட அரங்கில் இந்த படப் பூஜை நடைபெற்றதுஎன்பது குறிப்பிடத்தக்கது.தமிழ்நாட்டில் ஏற்பட்ட மழை சேதங்களை கருத்தில் கொண்டு சிவாஜி படத்தின் பூஜையை எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல்எளிமையான முறையில் நடத்த ரஜினிகாந்த், ஏவிஎம் சரவணன், இயக்குனர் ஷங்கர் ஆகிய 3 பேரும் திட்டமிட்டனர்.அதன்படி அழைப்பிதழ் ஏதும் அச்சடிக்கப்படாமல் காதும் காதும் வைத்தது மாதிரி ரகசியமாக சிவாஜி படப்பூஜைநடத்தப்பட்டது.பூஜைக்கு வந்த ரஜினிகாந்தை ஏவிஎம் சரவணன், எம்.எஸ்.குகன், இயக்குனர் ஷங்கர் ஆகியோர் வரவேற்றனர்.இதில், ஹீரோயின் ஸ்ரேயா, எழுத்தாளர் சுஜாதா, இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானின் தாயார் கரீமா பேகம், கவிஞர்வைரமுத்து, நடிகர் விவேக், ஒளிப்பதிவாளர் கே.வி. ஆனந்த், டான்ஸ் மாஸ்டர் ராஜூ சுந்தரம்,ஆர்ட் டைரக்டர் தோட்டா தரணி, காதல் பட இயக்குனர் பாலாஜி சக்திவேல், சிவகாசி பட இயக்குனர் பேரரசு மற்றும் உல்லாசம்பட இயக்குனர்கள் ஜேடி-ஜெர்ரி (இவர்கள் இந்தப் படத்தில் ஷங்கருக்கு உதவப் போகின்றனர்), மணிரத்னத்தின் முன்னாள்அஸிஸ்டெண்ட் காந்தி கிருஷ்ணா, ரஜினிகாந்த் நற்பணி மன்ற தலைவர் சத்யநாராயணா ஆகியோர் கலந்து கொண்டனர்.இயக்குனர் எஸ்.பி. முத்துராமன் அனைவரையும் வரவேற்றார். புரோகிதர் மந்திரம் ஓத பூஜை நடந்தது.விழாவில் பேசிய வைரமுத்து, ஏவிஎம்க்கு 60 வருடத்தின் உச்சமாகவும், உங்களுக்கு (ரஜினிக்கு) திரைத்துறையில் 30 வருடத்தின்உச்சமாகவும் இந்த சிவாஜி திரைப்படம் அமையும் என்று கூற அதைக் கேட்டு ரஜினிகாந்த் சிரித்தார்.தயாரிப்பாளர்களில் ஒருவரான எம்.எஸ். குகன் பின்னர் நிருபர்களிடம் பேசுகையில்,சிவாஜி படத்தில் கதாநாயகி, ஸ்ரேயா ஒருவர் தான். வேறு கதாநாயகி கிடையாது. படப்பிடிப்பு தேதியை இன்னும் முடிவுசெய்யவில்லை. தமிழ்நாட்டின் மழை-வெள்ள சேதங்களை மனதில் கொண்டு இந்த விழா எளிமையாக நடத்தப்பட்டது.ரஜினிகாந்த், இயக்குனர் ஷங்கர் ஆகிய இரண்டு பேரை தவிர மற்ற அத்தனை தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் அட்வான்ஸ்கொடுக்கப்பட்டுவிட்டது என்றார். படத்தின் ஆரம்பக் காட்சிகளுக்காக ஹைதராபாத்தில் செட் அமைக்கும் வேலை நடந்து வருகிறதாம். டிசம்பர் 15 முதல் சூட்டிங்தொடங்கும் என்கிறார்கள்.

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரஜினிகாந்த் நடிக்கும் சிவாஜி படத்தின் தொடக்க விழா பூஜை சென்னை ஏவிஎம் ஸ்டூடியோவில் மிக மிக ரகசியமாக நடந்தது.

ஏவிஎம் நிறுவனம் தனது 60வது ஆண்டில், ரஜினிகாந்த் நடிக்கும் சிவாஜி என்ற படத்தை தயாரிக்கிறது. இது ஏவிஎம் தயாரிக்கும்169வது படமாகும். இந்த படத்தை ஷங்கர் இயக்குகிறார்.

படத்தின் தொடக்க விழா பூஜை ஏவிஎம் ஸ்டூடியோவின் 3வது தளத்தில் நேற்று நடந்தது.

ஏவிஎம் நிறுவனரான மறைந்த ஏ.வி.மெய்யப்ப செட்டியார் முதன் முதலாக காரைக்குடியில் நடத்திய ஸ்டூடியோ அரங்கைஅப்படியே எடுத்து வந்து, அவருடைய நினைவாக அப்படியே அமைக்கப்பட்ட அரங்கில் இந்த படப் பூஜை நடைபெற்றதுஎன்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் ஏற்பட்ட மழை சேதங்களை கருத்தில் கொண்டு சிவாஜி படத்தின் பூஜையை எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல்எளிமையான முறையில் நடத்த ரஜினிகாந்த், ஏவிஎம் சரவணன், இயக்குனர் ஷங்கர் ஆகிய 3 பேரும் திட்டமிட்டனர்.


அதன்படி அழைப்பிதழ் ஏதும் அச்சடிக்கப்படாமல் காதும் காதும் வைத்தது மாதிரி ரகசியமாக சிவாஜி படப்பூஜைநடத்தப்பட்டது.

பூஜைக்கு வந்த ரஜினிகாந்தை ஏவிஎம் சரவணன், எம்.எஸ்.குகன், இயக்குனர் ஷங்கர் ஆகியோர் வரவேற்றனர்.

இதில், ஹீரோயின் ஸ்ரேயா, எழுத்தாளர் சுஜாதா, இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானின் தாயார் கரீமா பேகம், கவிஞர்வைரமுத்து, நடிகர் விவேக், ஒளிப்பதிவாளர் கே.வி. ஆனந்த், டான்ஸ் மாஸ்டர் ராஜூ சுந்தரம்,

ஆர்ட் டைரக்டர் தோட்டா தரணி, காதல் பட இயக்குனர் பாலாஜி சக்திவேல், சிவகாசி பட இயக்குனர் பேரரசு மற்றும் உல்லாசம்பட இயக்குனர்கள் ஜேடி-ஜெர்ரி (இவர்கள் இந்தப் படத்தில் ஷங்கருக்கு உதவப் போகின்றனர்), மணிரத்னத்தின் முன்னாள்அஸிஸ்டெண்ட் காந்தி கிருஷ்ணா, ரஜினிகாந்த் நற்பணி மன்ற தலைவர் சத்யநாராயணா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இயக்குனர் எஸ்.பி. முத்துராமன் அனைவரையும் வரவேற்றார். புரோகிதர் மந்திரம் ஓத பூஜை நடந்தது.


விழாவில் பேசிய வைரமுத்து, ஏவிஎம்க்கு 60 வருடத்தின் உச்சமாகவும், உங்களுக்கு (ரஜினிக்கு) திரைத்துறையில் 30 வருடத்தின்உச்சமாகவும் இந்த சிவாஜி திரைப்படம் அமையும் என்று கூற அதைக் கேட்டு ரஜினிகாந்த் சிரித்தார்.

தயாரிப்பாளர்களில் ஒருவரான எம்.எஸ். குகன் பின்னர் நிருபர்களிடம் பேசுகையில்,

சிவாஜி படத்தில் கதாநாயகி, ஸ்ரேயா ஒருவர் தான். வேறு கதாநாயகி கிடையாது. படப்பிடிப்பு தேதியை இன்னும் முடிவுசெய்யவில்லை. தமிழ்நாட்டின் மழை-வெள்ள சேதங்களை மனதில் கொண்டு இந்த விழா எளிமையாக நடத்தப்பட்டது.ரஜினிகாந்த், இயக்குனர் ஷங்கர் ஆகிய இரண்டு பேரை தவிர மற்ற அத்தனை தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் அட்வான்ஸ்கொடுக்கப்பட்டுவிட்டது என்றார்.

படத்தின் ஆரம்பக் காட்சிகளுக்காக ஹைதராபாத்தில் செட் அமைக்கும் வேலை நடந்து வருகிறதாம். டிசம்பர் 15 முதல் சூட்டிங்தொடங்கும் என்கிறார்கள்.


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil