சென்னையைக் கலக்கிய சிவாஜி! ரஜினியின் சிவாஜி பட ஷூட்டிங் மீண்டும் சென்னையில் நடந்துள்ளது. இந்த முறை தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு ஒன்றில் நடத்தப்பட்டதால் நூற்றுக்கணக்கான மக்கள் மிகுந்த சந்தோஷத்துடன் ரஜினி நடிப்பதை பார்த்து ரசித்தனர். ஷங்கர் இயக்கத்தில்,ஏவி.எம். தயாரிப்பில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் சிவாஜி பட ஷூட்டிங் படு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. முதல் கட்ட ஷூட்டிங் ஹைதராபாத்தில் நடந்தது. அதைத் தொடர்ந்து சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் திடீரென ஒரு நாள் படப்பிடிப்பை நடத்தினார்கள். அதன் பின்னர் மீண்டும் ஹைதராபாத்துக்குப் பறந்து விட்டார்கள். இந்த நிலையில் மீண்டும் சென்னைக்கு வந்துள்ள சிவாஜி பட யூனிட், கீழ்ப்பாக்கம் கார்டன் பகுதியில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பு ஒன்றில் படப்பிடிப்பை நடத்தியது. மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்த படப்பிடிப்பு குறித்து அக்கம் பக்கத்தினருக்குத் தகவல் தெரிந்ததால், முதல் நாளே தங்களுக்குத் தெரிந்தவர்களின் வீடுகளில் அவர்கள் தஞ்சம் புகுந்து படப்பிடிப்பை பார்த்து ரசித்தனர். மிகுந்த பாதுகாப்புடன் படப்பிடிப்பு நடந்தது. இப்படப்பிடிப்பின் போது ரஜினி, விவேக், மணிவண்ணன் ஆகியோர் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டன. குடியிருப்பு வளாகத்திற்குள் வெளியாட்கள் யாரும் நுழையாமல் தடுக்கப்பட்டனர். குடியிருப்பில் உள்ள வீடுகளில் வசிப்பவர்கள் படப்பிடிப்பின் போது, இடையூறு செய்யாமல் அமைதியாக படப்பிடிப்பைப் பார்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார்கள். அடுக்கு மாடிக் குடியிருப்பின் கீழ் தளத்தில் உள்ள வீடுகளின் வழியாக ரஜினியும், விவேக்கும் ஓடுவது போலவும், மணிவண்ணன், ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகளையும் இயக்குநர் ஷங்கர் படம் பிடித்தார். படப்பிடிப்புக்காக புதிதாக காய் கறிக்கடை, இஸ்திரி வண்டி உள்ளிட்ட சில செட்கள் போடப்பட்டிருந்தன. குடியிருப்புகளில் வசிப்பவர்கள், வீட்டு ஜன்னல் வழியாகவும், கதவுகளின் அருகே நின்று கொண்டும் ரஜினி உள்ளிட்டவர்கள் நடித்ததைப் பார்த்தனர். ஏராளமான சிறுவர்களும் ரஜினியின் நடிப்பைப் பார்த்து ரசித்தனர். படப்பிடிப்பின் போது ரஜினி ஓடியபோது, சிறுவர், சிறுமியர் அவரைப் பார்த்து கை காட்டி குதூகலித்தனர். பதிலுக்கு ரஜினியும் கண்களை அசைத்து சிரித்தபடி ஓடி அவர்களுக்கு சந்தோஷம் கொடுத்தார். இந்தப் படப்பிடிப்புக்குப் பின்னர் மேலும் சில காட்சிகளை சென்னையில் படம் பிடிக்க திட்டமிட்டுள்ள ஷங்கர் அதன் பின்னர் மீண்டும் ஹைதராபாத்தில் படப்பிடிப்பைத் தொடரத் திட்டமிட்டுள்ளார்.

By Staff
ரஜினியின் சிவாஜி பட ஷூட்டிங் மீண்டும் சென்னையில் நடந்துள்ளது. இந்த முறை தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு ஒன்றில் நடத்தப்பட்டதால் நூற்றுக்கணக்கான மக்கள் மிகுந்த சந்தோஷத்துடன் ரஜினி நடிப்பதை பார்த்து ரசித்தனர்.

ஷங்கர் இயக்கத்தில்,ஏவி.எம். தயாரிப்பில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் சிவாஜி பட ஷூட்டிங் படு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. முதல் கட்ட ஷூட்டிங் ஹைதராபாத்தில் நடந்தது. அதைத் தொடர்ந்து சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் திடீரென ஒரு நாள் படப்பிடிப்பை நடத்தினார்கள். அதன் பின்னர் மீண்டும் ஹைதராபாத்துக்குப் பறந்து விட்டார்கள்.

இந்த நிலையில் மீண்டும் சென்னைக்கு வந்துள்ள சிவாஜி பட யூனிட், கீழ்ப்பாக்கம் கார்டன் பகுதியில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பு ஒன்றில் படப்பிடிப்பை நடத்தியது. மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்த படப்பிடிப்பு குறித்து அக்கம் பக்கத்தினருக்குத் தகவல் தெரிந்ததால், முதல் நாளே தங்களுக்குத் தெரிந்தவர்களின் வீடுகளில் அவர்கள் தஞ்சம் புகுந்து படப்பிடிப்பை பார்த்து ரசித்தனர்.

மிகுந்த பாதுகாப்புடன் படப்பிடிப்பு நடந்தது. இப்படப்பிடிப்பின் போது ரஜினி, விவேக், மணிவண்ணன் ஆகியோர் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டன. குடியிருப்பு வளாகத்திற்குள் வெளியாட்கள் யாரும் நுழையாமல் தடுக்கப்பட்டனர். குடியிருப்பில் உள்ள வீடுகளில் வசிப்பவர்கள் படப்பிடிப்பின் போது, இடையூறு செய்யாமல் அமைதியாக படப்பிடிப்பைப் பார்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார்கள்.

அடுக்கு மாடிக் குடியிருப்பின் கீழ் தளத்தில் உள்ள வீடுகளின் வழியாக ரஜினியும், விவேக்கும் ஓடுவது போலவும், மணிவண்ணன், ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகளையும் இயக்குநர் ஷங்கர் படம் பிடித்தார்.

படப்பிடிப்புக்காக புதிதாக காய் கறிக்கடை, இஸ்திரி வண்டி உள்ளிட்ட சில செட்கள் போடப்பட்டிருந்தன. குடியிருப்புகளில் வசிப்பவர்கள், வீட்டு ஜன்னல் வழியாகவும், கதவுகளின் அருகே நின்று கொண்டும் ரஜினி உள்ளிட்டவர்கள் நடித்ததைப் பார்த்தனர்.

ஏராளமான சிறுவர்களும் ரஜினியின் நடிப்பைப் பார்த்து ரசித்தனர். படப்பிடிப்பின் போது ரஜினி ஓடியபோது, சிறுவர், சிறுமியர் அவரைப் பார்த்து கை காட்டி குதூகலித்தனர். பதிலுக்கு ரஜினியும் கண்களை அசைத்து சிரித்தபடி ஓடி அவர்களுக்கு சந்தோஷம் கொடுத்தார்.

இந்தப் படப்பிடிப்புக்குப் பின்னர் மேலும் சில காட்சிகளை சென்னையில் படம் பிடிக்க திட்டமிட்டுள்ள ஷங்கர் அதன் பின்னர் மீண்டும் ஹைதராபாத்தில் படப்பிடிப்பைத் தொடரத் திட்டமிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X