சூட்டிங் ஸ்பாட்
கண்டுகொண்டேன் கண்கொண்டேன் அப்படி இப்படி ஓடி மும்பையில் ஆங்கில சப் டைட்டிலுடன் சக்கைபோடு போடுகிறது.
அந்த உற்சாகத்தில் டைரக்டர் ராஜிவ்மேனன் அடுத்த படத்திற்கான களத்தில் இறங்கிவிட்டார். கதை, சில வருடங்களுக்கு முன் லண்டனில் நடந்த கப்பல்விபத்தை பின்னணியாகக் கொண்டது.
அருமையான காதல் சரித்திரம் படைக்கப் போகிறதாம் இந்தப்படம். கதை விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. அது முடிந்த பின் இன்னும் சில நாட்களில்ஷூட்டிங் ஆரம்பிக்க இருக்கிறதாம்.
பிரம்மாண்டம் ப்ளஸ் காதலுடன் தமிழில் இன்னொரு டைட்டானிக் வருகிறது என்று கோடம்பாக்கத்தில் பேசப்படுகிறது.
குழப்பமில்லாமல் படம் கொடுப்பீங்கதானே ராஜிவ்?
Comments


Click it and Unblock the Notifications