அடங்காத ரகுல் ப்ரீத் சிங்.. கொரோனா எச்சரிக்கையை மீறி ஷூட்டிங்.. அட்வைஸ் பண்ணும் ரசிகாஸ்!

ஹைதரபாத்: கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், நடிகை ரகுல் ப்ரீத் சிங் படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது.

கோலிவுட், டோலிவுட் மற்றும் பாலிவுட் படங்களில் பிசியாக நடிகை ரகுல் ப்ரீத் சிங் நடித்து வருகிறார்.

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்திலும் முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.

படப்பிடிப்புகள் ரத்து

படப்பிடிப்புகள் ரத்து

பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என இந்திய திரையுலகமே அனைத்து விதமான ஷூட்டிங்கை ரத்து செய்துள்ளது. ஆனாலும் சிலர், கொரோனா வைரஸ் குறித்த அச்சம் கொஞ்சமும் இன்றி, இந்த நேரத்திலும், மருத்துவர்களின் ஆலோசனைகளை அலட்சியப்படுத்தி, மறைமுகமாக ஷூட்டிங்கை நடத்தி வருகின்றனர்.

ஷூட்டிங்கில் ரகுல் ப்ரீத் சிங்

ஷூட்டிங்கில் ரகுல் ப்ரீத் சிங்

தேவ், என்.ஜி.கே உள்ளிட்ட படங்களில் நடித்த ரகுல் ப்ரீத் சிங், ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். அதேசமயம் டோலிவுட் மற்றும் பாலிவுட்டிலும் ஒரு சில படங்களில் ரகுல் ப்ரீத் சிங் நடித்து வருகிறார். டோலிவுட் படம் ஒன்றின் ஷூட்டிங்கை தவிர்க்க முடியாமல், ரகுல் ப்ரீத் சிங் ஷூட்டிங்கில் கலந்து கொண்டுள்ளார்.

மாஸ்க் போட்டு

மாஸ்க் போட்டு

தேவையில்லாமல் யாரும் வெளியே வர வேண்டாம், பாதுகாப்புடன் இருங்க என ரசிகர்களுக்கு மட்டும் அறிவுரை கூறிவிட்டு, தவிர்க்க முடியாத காரணத்தால், இன்று ஷூட்டிங்கில் பங்கேற்று நடித்து வருகிறேன். நானும், என் டீமும் முழு பாதுகாப்புடன் இருக்கிறோம் என மாஸ்க் அணிந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அலட்சியம் வேண்டாம்

அலட்சியம் வேண்டாம்

ரகுல் ப்ரீத் சிங்கின் இன்ஸ்டா பதிவை பார்த்த ரசிகர்களும், பிரபலங்களும், இந்த நேரத்தில் ஷூட்டிங் தேவையா? என்றும், மாஸ்க் போட்டே எல்லா காட்சிகளிலும் நடிக்கப் போறீங்களா? ஹாலிவுட் நடிகர்களுக்கே கொரோனா பரவி வருகிறது. வீட்டில் பத்திரமாக இருங்க என்று அட்வைஸ் செய்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X