ரம்பா-ரசிகா தமிழ், தெலுங்கு, கன்னடத் திரையுலகில் பெரிய ரவுண்டு அடித்து விட்டு ஓய்ந்து போயுள்ள ரம்பா இப்போது மலையாளத்திரையுலகைக் கலக்கி வருகிறார்.தொடையழகி என்று வர்ணிக்கப்பட்ட ரம்பாவுக்கு இன்று தமிழ் சினிமாவில் சுத்தமாக இடம் இல்லாமல் போய் விட்டது. தாய்மொழியான தெலுங்கிலும் அவருக்கு படம் லேது.கன்னடமும் கைவிட்டு விட்டது. தேவையில்லாமல் அரசியலில் (பாஜக) சேர்ந்து அவதிப்பட்ட ரம்பா, தற்போது வழக்குமழையில் நனைந்து வருகிறார். இடையில் மிதுன் சக்கரவர்த்தி புண்ணியத்தால் பெங்காலி மொழிப் படத்தில் நடித்தார். ஆஸ்தான நண்பர் கோவிந்தாவும் கொஞ்ச நாள் பக்கத்தில் வைத்து ஆதரவு கொடுத்துவிட்டு இப்போது (போர்அடித்துவிட்டதால்) கைவிட்டு விட்டதால் ஆதரவின்றித் தவித்தார் ரம்பா.இப்போது மலையாளத்தில் அவருக்கு புதுவாழ்வு கிடைத்துள்ளது. ரெட் என்ற மலையாளப் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்ரம்பா. இவருக்கு ஜோடியாக நடிப்பவர் காமெடி-வில்லன் கலாபவன் மணி (ரம்பா நிலைமையைப் பாருங்கள்).இளைய தலைமுறை நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பை இழந்து விட்ட ரம்பா, அவர்களுக்கு அக்கா, அண்ணி, சித்திவேடங்களில் நடிப்பதை விட வயது மூத்த நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து விட்டுப் போய் விடலாம் என்ற எண்ணத்தில்இருக்கிறாராம். இதேபோல ரம்பா பயங்கர கவர்ச்சியாக நடித்துள்ள அலெக்ஸ் என்ற தெலுங்குப் படமும் அவருக்கு பெரும் நம்பிக்கையைக்கொடுத்துள்ளதாம். இந்தப் படம் வெளி வந்தால் தெலுங்கில் நிச்சயம் மீண்டும் ஒரு ரவுண்டு அடிக்க முடியும் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கையில் உள்ளார் ரம்பா.அலெக்ஸில் நடித்துள்ள இன்னொரு நடிகை ரசிகா எனப்படும் சங்கீதா. பிதாமகனில் கஞ்சா அழகியாக வந்த சங்கீதாவுக்கு,பிதாமகன் கை கொடுக்கவில்லை. இதனால் ஆந்திராவுக்கு இடம் பெயர்ந்த சங்கீதாவுக்கு அங்கு அலெக்ஸ் படம் புதிய வழியைக்காட்டியுள்ளதாம்.ரம்பாவுக்கு நிகராக கிளாமரில் கலக்கியுள்ளாராம் சங்கீதா. இப்படம் தனக்கும் புதுவாழ்வு தரும் என்று ரசிகாவும் நம்பிக்கொண்டுள்ளார். இந் நிலையில் ரம்பாவை சமீபத்தில் சந்தித்த இயக்குனர்-கம்-நடிகர் எஸ்.ஜே.சூர்யா, அவரை தனது கள்வனின் காதலி படத்தில்ஒரு குத்துப் பாட்டுக்கு ஆடச் சொல்லி அழைத்தாராம். உடனே அவரது கையைக் குலுக்கிவிட்டு அட்வான்ஸை வாங்கிப்போட்டுக் கொண்டாராம் ரம்பா.சூர்யாவும் ரம்பாவும் ஆடப் போகும் ஆட்டம் செமத்தியாக இருக்கப் போகிறதாம்.

By Staff
தமிழ், தெலுங்கு, கன்னடத் திரையுலகில் பெரிய ரவுண்டு அடித்து விட்டு ஓய்ந்து போயுள்ள ரம்பா இப்போது மலையாளத்திரையுலகைக் கலக்கி வருகிறார்.

தொடையழகி என்று வர்ணிக்கப்பட்ட ரம்பாவுக்கு இன்று தமிழ் சினிமாவில் சுத்தமாக இடம் இல்லாமல் போய் விட்டது. தாய்மொழியான தெலுங்கிலும் அவருக்கு படம் லேது.

கன்னடமும் கைவிட்டு விட்டது. தேவையில்லாமல் அரசியலில் (பாஜக) சேர்ந்து அவதிப்பட்ட ரம்பா, தற்போது வழக்குமழையில் நனைந்து வருகிறார். இடையில் மிதுன் சக்கரவர்த்தி புண்ணியத்தால் பெங்காலி மொழிப் படத்தில் நடித்தார்.

ஆஸ்தான நண்பர் கோவிந்தாவும் கொஞ்ச நாள் பக்கத்தில் வைத்து ஆதரவு கொடுத்துவிட்டு இப்போது (போர்அடித்துவிட்டதால்) கைவிட்டு விட்டதால் ஆதரவின்றித் தவித்தார் ரம்பா.

இப்போது மலையாளத்தில் அவருக்கு புதுவாழ்வு கிடைத்துள்ளது. ரெட் என்ற மலையாளப் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்ரம்பா. இவருக்கு ஜோடியாக நடிப்பவர் காமெடி-வில்லன் கலாபவன் மணி (ரம்பா நிலைமையைப் பாருங்கள்).

இளைய தலைமுறை நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பை இழந்து விட்ட ரம்பா, அவர்களுக்கு அக்கா, அண்ணி, சித்திவேடங்களில் நடிப்பதை விட வயது மூத்த நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து விட்டுப் போய் விடலாம் என்ற எண்ணத்தில்இருக்கிறாராம்.

இதேபோல ரம்பா பயங்கர கவர்ச்சியாக நடித்துள்ள அலெக்ஸ் என்ற தெலுங்குப் படமும் அவருக்கு பெரும் நம்பிக்கையைக்கொடுத்துள்ளதாம். இந்தப் படம் வெளி வந்தால் தெலுங்கில் நிச்சயம் மீண்டும் ஒரு ரவுண்டு அடிக்க முடியும் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கையில் உள்ளார் ரம்பா.

அலெக்ஸில் நடித்துள்ள இன்னொரு நடிகை ரசிகா எனப்படும் சங்கீதா. பிதாமகனில் கஞ்சா அழகியாக வந்த சங்கீதாவுக்கு,பிதாமகன் கை கொடுக்கவில்லை. இதனால் ஆந்திராவுக்கு இடம் பெயர்ந்த சங்கீதாவுக்கு அங்கு அலெக்ஸ் படம் புதிய வழியைக்காட்டியுள்ளதாம்.

ரம்பாவுக்கு நிகராக கிளாமரில் கலக்கியுள்ளாராம் சங்கீதா. இப்படம் தனக்கும் புதுவாழ்வு தரும் என்று ரசிகாவும் நம்பிக்கொண்டுள்ளார்.

இந் நிலையில் ரம்பாவை சமீபத்தில் சந்தித்த இயக்குனர்-கம்-நடிகர் எஸ்.ஜே.சூர்யா, அவரை தனது கள்வனின் காதலி படத்தில்ஒரு குத்துப் பாட்டுக்கு ஆடச் சொல்லி அழைத்தாராம். உடனே அவரது கையைக் குலுக்கிவிட்டு அட்வான்ஸை வாங்கிப்போட்டுக் கொண்டாராம் ரம்பா.

சூர்யாவும் ரம்பாவும் ஆடப் போகும் ஆட்டம் செமத்தியாக இருக்கப் போகிறதாம்.

More from Filmibeat

Read more about: ramba and rasikas alex
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X