»   »  மீண்டும் ஹீரோயின்: உற்சாகத்தில் ரம்பா

மீண்டும் ஹீரோயின்: உற்சாகத்தில் ரம்பா

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரொம்ப நாளைக்குப் பின் ரம்பா மீண்டும் பழையபடி உற்சாகமாகி இருக்கிறார். இதனால் முன்பை விட படு சிக் ஆகவும்காணப்படுகிறார்.

சொந்தப் படத் தயாரிப்பினால் வந்த நஷ்டம், கந்து வட்டிக் கும்பலிடம் பட்ட பாடு என ரம்பா ரொம்பவே நொந்துநூலாகியிருந்தார். இந்தக் கவலைகளால் அவரை முன்பு போல படங்களிலும், பட விழாக்களிலும் பார்க்க முடியவில்லை.

தமிழில் பட வாய்ப்புகள் வேறு இல்லாததால், ரம்பாவை மீண்டும் பார்க்க முடியாத என்ற கேள்வியும் எழுந்தது. ஆனால்திடீரென வங்காள மொழிப் படம் ஒன்றில் மிதுன் சக்க்கரவர்த்தியுடன் நடிப்பதாக அவரே செய்தி சொன்னார்.

தமிழில் வெளியான அண்ணாமலை படத்தைத்தான் மிதுன் நடிப்பில் வங்காள மொழியில் எடுக்கிறார்களாம். அதில் தான் ரம்பாநடித்துக் கொண்டுள்ளார்.

இந் நிலையில் தமிழில் மீ"ண்டும் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு வந்துவிட்டது. சில காலமாக தமிழில் சிங்கிள் டான்சுக்குமட்டுமே அவரைக் கூப்பிட்டார்கள். இப்போது ஹீரோயினாக நடிக்க (படத்தின் பெயர்: ஒரு காதலன், ஒரு காதலி)கூப்பிட்டுவிட்டதால், கவலைகளை மனதிலிருந்து தூக்கிப் போட்டு விட்டு மீண்டும் ஒரு கை பார்க்க கோதாவில்இறங்கியுள்ளார்.

உடம்பையும் சிக் என ஆக்கிக் கொண்டுள்ள ரம்பா, ஒரு காதலன், ஒரு காதலி பூஜைக்கு வந்திருந்தார். நம்ம ரம்பாவா இதுஎன்று ஆச்சரியப்படும் அளவுக்கு படு பியூட்டியாக இருந்தார்.

என்ன, ரொம்ப தெம்பா இருக்கீக? என்று கொக்கியைப் போட்டபோது,


ஆமாம்பா, நான் இப்போ தெளிவாய்ட்டேன். பிரச்சினைகளுக்கு தீர்வு வந்து கொண்டிருக்கிறது. எனவே பழையபடி பிசியாகிவிட்டேன். எனக்குத் தமிழிலும், தெலுங்கிலும் தொடர்ந்து வாய்ப்புகள் வந்து கொண்டேதான் இருக்கிறது.

தமிழில் சில படங்களில் ஒரு பாட்டுக்கு ஆடி வருகிறேன். அதேபோல ஹிந்தி வாய்ப்புகளுக்கும் குறைவில்லை(?). எந்தவாய்ப்பையும் விடுவதில்லை. இப்போது பெங்காலியில் ஹீரோயினாக நடித்து வருகிறேன்.

இதோ தமிழிலும் மீண்டும் ஹீரோயின் ஆக வந்துவிட்டேன்.

உடம்பு சற்று பெருத்து விட்டதாக பலரும் கூறியதால், டயட்டைக் கடைப்பிடிக்கிறேன். கடுமையான உடற்பயிற்சியும் கூடவே.அதனால்தான் மீண்டும் அழகாகி விட்டேன் (அடடே!).

மீண்டும் ஒரு ரவுண்டு வருவேன். இந்த ரம்பாவின் இடத்தை நிரப்ப இன்னும் யாரும் வரவில்லை. எனவே எனது இடம்அப்படியேதான் இருக்கிறது என்றார் புன்னகைப் பூவாக. (இப்படித்தான் கார்த்திக் கூட சொல்லிக் கொண்டிருக்கிறார்).

ஒரு காதலி ஒரு காதலன் படத்தில் ரம்பாவுக்கு ஜோடி புதுமுகமாம். படத்தை இயக்குவது ஷங்கரின் அசிஸ்டெண்ட் ஆனசெல்வேந்திரன். சூட்டிங்கும் சென்னையில் ஆரம்பித்து நடந்து வருகிறது.

இதனால் கொல்கத்தாவுக்கும் சென்னைக்குமாக மாறி, மாறிப் பறந்து நடித்துக் கொண்டிருக்கிறார் ரம்ஸ்..


Read more about: ramba is back as heroine

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil