படப்பிடிப்பில் விபத்து- நடிகர் ராம்சரண் காயம்!

பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் தேஜா. தெலுங்கின் முன்னணி இளம் நடிகர்களுள் ஒருவர் இவர். ராம்சரணுக்கும் அப்பல்லோ மருத்துவமனை சேர்மன் பிரதாப் ரெட்டி பேத்தி உபாசனாவுக்கும் சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் முடிந்தது.
ராம்சரண் தற்போது ராச்சா என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டூடியோவில் நடந்து வருகிறது.
பாடல் காட்சியொன்றில் ராம்சரண் நடித்துக் கொண்டிருந்த போது, கால் இடறி கீழே விழுந்தார். இதில் காலில் அவருக்கு பலத்த அடிபட்டு எலும்பு முறிவு ஏற்பட்டது.
வலியால் துடித்த அவரை, உடனடியாக மருத்துவமனைியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. டாக்டர்கள் 4 வாரங்கள் ஒய்வெடுக்கும்படி அறிவுறுத்தியுள்ளனர். இதையடுத்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.


Click it and Unblock the Notifications











