»   »  தூண்டில் ரம்யா

தூண்டில் ரம்யா

Subscribe to Oneindia Tamil

குத்து ரம்யா இப்போது மீண்டும் தூண்டில் என்ற தமிழ்ப் படத்தில் மட்டும் நடித்து வருகிறார். மற்றபடி வழக்கம்போல கன்னடத்தில் பிசியாக இருக்கிறார்.

ரம்யா பந்தனா என்ற இயற்பெயர் கொண்ட ரம்யா, குத்து படம் மூலம் கோலிவுட்டில் குதித்தார். முதல்படத்திலேயே கிளாமரில் குத்தியெடுத்ததால் அதுபோன்ற கேரக்டர்களே அதிகம் வந்தன. ஆரம்பத்தில் கிளாமர்வேடங்களை தட்டாமல் நடித்து வந்தார் ரம்யா.

ஆனால் தொடர்ந்து கிளாமர் வேடங்களை வேந்ததால் அலுப்பாகிப் போன ரம்யா, தமிழ் வேண்டாம் என்று தாய்மொழியான கன்னடத்திற்குத் தாவினார். இப்போது அங்கு கை நிறைய படங்களில் நடித்து வரும் ரம்யாவுக்குமறுபடியும் தமிழ் பட வாய்ப்பு வந்துள்ளது. படத்திற்குப் பெயர் தூண்டில்.

இப்படத்தில் நடித்து வரும் ரம்யா, படப்பிடிப்புக்காக சமீபத்தில் லண்டனுக்குப் போனார். ஆனால் அங்கு அவர்தற்கொலைக்கு முயன்றதாக பெங்களூரில் சிலர் வதந்தியை கிளப்பி விட்டு விட்டனராம்.

இதனால் ரம்யாவின் குடும்பத்தினரும், உறவினர்களும் பயந்து போய் போன் மேல் போன் போட்டு ரம்யாவைவிசாரித்து விட்டார்களாம். இதனால் ரம்யா டென்ஷனாகிப் போனாம். தனது திரையுலக எதிரிகள் சிலர்தான் இந்தவதந்தி கிளம்ப காரணம் என கடுப்பாகக் கூறுகிறார் ரம்யா.

எனக்கு மன தைரியம் ஜாஸ்தி. நானாவது தற்கொலைக்கு முயற்சி செய்வதாவது என்று படு தெனாவட்டாககூறுகிறார்.

எனக்கு கை நிறையப் படங்கள் உள்ளன. எனது வாழ்க்கை படு ஜாலியாக போய்க் கொண்டுள்ளது. மனதில்கவலை எதுவும் இல்லை. அப்படி இருக்கம்போது எதற்கு இப்படி ஒரு ட்டாள்தனமான முடிவை நான் எடுக்கவேண்டும்?

தொடர்ந்து தமிழிலும் நிறையப் படங்களில் நடிப்பேன். ஆனால் ஒரே மாதிரி கிளாமர் ரோல்களாக வந்தால் நடிக்கயோசிப்பேன். நல்ல, வித்தியாசமான கேரக்டர்களில் நடிக்கவே ஆசையாக உள்ளேன் என்கிறார் ரம்யா.

தயாரிப்பாளர்களும் அப்படி ஆசைப்படனுமே..

Read more about: ramya in tamil films again

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil