தொடங்கியது ராஷ்மிகா நடிக்கும் பாலிவுட் படத்தின் படப்பிடிப்பு..வேகமாகப் பரவும் ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்

By

சென்னை: நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கும் இந்தி படத்தின் ஷூட்டிங் தொடங்கியுள்ளது.

தமிழில் கார்த்தி ஜோடியாக சுல்தான் படத்தில் ஹீரோயினாக நடித்திருப்பவர், தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா.

பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ள இந்தப் படம், ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

டியர் காம்ரேட்

டியர் காம்ரேட்

கன்னடத்தில் வெளியான கிரிக் பார்ட்டி என்ற படம் மூலம் அறிமுகமானவர் ராஷ்மிகா. சலோ படம் மூலம் தெலுங்குக்கு சென்றார். அடுத்து, விஜய் தேவரகொண்டாவுடன் நடித்த கீதகோவிந்தம் கவனிக்கப்பட, வாய்ப்புகள் குவிந்தன. தேவதாஸ், விஜய் தேவரகொண்டாவுடன் டியர் காம்ரேட் படங்களில் நடித்தார்.

அல்லு அர்ஜுன்

அல்லு அர்ஜுன்

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான மகேஷ்பாபு ஜோடியாக நடித்த சரிலேரு நீக்கெவ்வரு, சூப்பர் ஹிட்டானது. இதையடுத்து பெரிய ஹீரோ படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தன. இப்போது அல்லு அர்ஜுன் ஜோடியாக புஷ்பா படத்தில் நடிக்க இருக்கிறார். இதை சுகுமார் இயக்குகிறார்.

நேஷனல் க்ரஷ்

நேஷனல் க்ரஷ்

இதில் சித்தூர் பகுதி பெண்ணாக, நடிக்கிறார், ராஷ்மிகா. அடுத்து சர்வானந்த் நடிக்கும் ஆடலூ மீக்கு ஜோகார்லு என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இதற்கிடையே, 2020 ஆம் வருடத்தின் நேஷனல் க்ரஷ் ஆப் இந்தியா என்ற பெருமையை அவர் பெற்றிருந்தார். இதற்காக அவரை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பாராட்டினர்.

மிஷன் மஞ்சு

மிஷன் மஞ்சு

அவர் இப்போது இரண்டு இந்தி படங்களில் ஒப்பந்தமாகி இருக்கிறார். ஒன்று, மிஷன் மஞ்சு. இதில் சித்தார்த் மல்ஹோத்ரா ஜோடியாக நடிக்கிறார். ஷாந்தனு பாஹி இயக்கும் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சில நாட்களுக்கு முன் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது.

பைக்கில் காட்சி

பைக்கில் காட்சி

இந்நிலையில், இதன் ஷூட்டிங் இப்போது தொடங்கி நடந்து வருகிறது. நடிகை ராஷ்மிகாவும் சித்தார்த் மல்ஹோத்ராவும் பைக்கில் செல்லும் காட்சிகளின் புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகியுள்ளன. இந்த ஷெட்யூல், இந்த மாதம் வரை நடக்கிறது என்றும் இதையடுத்து ராஷ்மிகா, புஷ்பா படத்தில் நடிப்பார் என்றும் கூறப்படுகிறது.

அமிதாப் பச்சன்

அமிதாப் பச்சன்

ராஷ்மிகா, அடுத்து அமிதாப் பச்சன் நடிக்கும் டெட்லி என்ற இந்தி படத்தில் நடிக்க இருக்கிறார். விகாஷ் பால், இதை இயக்க இருக்கிறார். இதற்கிடையே, தமிழிலும் ஒரு படத்தில் அவர் நடிக்க இருக்கிறார். அந்தப் படம் பற்றி சுல்தான் பட ரிலீஸுக்கு பிறகு தெரிவிப்பேன் என கூறியுள்ளார் ராஷ்மிகா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X