சிம்புவின் அழகு அத்தை
சிம்பு நடிக்க உருவாகும் காள படத்தில் அவருக்கு அத்தை வேடத்தில் ரசிகா என்ற சங்கீதா நடிக்கவுள்ளார்.
வல்லவனுக்குப் பிறகு சிம்பு நடிக்கவுள்ள படம் காள. இதில் நிலா ஒரு குத்துப் பாட்டுக்கு குமுக்காட்டம் போட சம்மதித்துள்ளார். இந்த நிலையில் இன்னொரு முக்கிய கேரக்டருக்கான நடிகையையும் சிம்பு அன்ட் கோ செலக்ட் செய்துள்ளது.அந்த நடிகை வேறு யாருமல்ல உயிர் படத்தில் காமக் கண்ணுடன் கொழுந்தனை விரட்டும் விரகதாப கேரக்டரில் வெளுத்துக் கட்டிய சங்கீதாதான்.
காள படத்தில் அத்தை கேரக்டரை வைத்துள்ளனர். அது படத்திலேய ரொம்ப முக்கியமான கேரக்டராம். அதாவது படையப்பா படத்தில் வரும் நீலாம்பரி கேரக்டர் ரேஞ்சுக்கு வித்தியாசமான பாத்திரமாம்.
இந்தக் கேரக்டரில் நடிக்க ரம்யா கிருஷ்ணனை முதலில் அணுகியுள்ளனர். ஆனால் அவர் ஸாரி சொல்லி விட்டாராம். இதையடுத்து விஜயசாந்தியை அணுகியுள்ளனர். அவர் ஒரு முறைப்பு முறைக்க ஓடி வந்து விட்டனர்.
இப்படி பலரையும் அணுகி அனைவரும் ஓடிப் போய் விட கடைசியாக சங்கீதாவை சிம்புவே அணுகியுள்ளார். பாத்திரத்தையும், அதன் முக்கியத்துவத்தையும் சங்கீதாவிடம் சிம்பு விளக்கினாராம்.
வித்தியாசமான பாத்திரத்திற்காகவே காத்துக் கிடக்கும் சங்கீதாவுக்கு அந்த அத்தை கேரக்டர் கவர்ந்து விட உடனே ஓ.கே. சொல்லி விட்டாராம். படத்தில் கிளாமருடன் கூடிய அத்தையாக வருகிறாராம் சங்கீதா.
கிட்டத்தட்ட வில்லி ரேஞ்சுக்கு இருந்தாலும் படத்தைத் தூக்கி நிறுத்துமாம் இந்த அத்தை கேரக்டர்.
அத்தையை குத்தாட்டம் ஆட வச்சுடாதீங்கப்பா!


Click it and Unblock the Notifications











