ரயில் டிராக்கில் சேர் போட்டு அமர்ந்த ஷங்கர்.. சூட்டிங் ஸ்பாட்டில் ராம்சரண்.. டிரெண்டாகும் #RC15

சென்னை: இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடித்து வரும் பிரம்மாண்ட படத்தின் ஏகப்பட்ட ஷூட்டிங் ஸ்பாட் காட்சிகள் இணையத்தில் கசிந்து வைரலாகி வருகின்றன.

இந்தியன் 2 திரைப்படம் பிரச்சனை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், அதிரடியாக டோலிவுட் நடிகர் ராம்சரணை வைத்து படத்தை இயக்கி வருகிறார் ஷங்கர்.

பெரும்பாலும் ஷங்கர் படத்தின் சூட்டிங் ஸ்பாட் காட்சிகள் லீக்காகமல் செம செக்யூரிட்டி போட்டு பார்த்துக் கொள்வார். இந்நிலையில், இத்தனை புகைப்படங்கள் லீக்காகி ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

டிரெண்டான #RC15

டிரெண்டான #RC15

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண், கியாரா அத்வானி நடிப்பில் உருவாகி வரும் இன்னமும் தலைப்பை அறிவிக்காத ராம்சரணின் 15வது படத்தின் படப்பிடிப்பு மின்னல் வேகத்தில் நடைபெற்று வருகிறது. அதன் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் கசிந்து #RC15 ஹாஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

பிரம்மாண்ட செட்

பிரம்மாண்ட செட்

ராம்சரண் மற்றும் கியாரா அத்வானி நடனமாடும் பிரம்மாண்ட பாடலுக்காக போடப்பட்டுள்ள மிகப்பெரிய செட் புகைப்படம் ஒன்றும் இணையத்தில் லீக்காகி வைரலாகி வருகின்றன. இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் அதி வேகமாக நடைபெற்று வரும் படப்பிடிப்பில் இருந்து எப்படி இத்தனை புகைப்படங்கள் கசிந்தன என்கிற கேள்வி எழுந்துள்ளது.

007 டிசர்ட்

007 டிசர்ட்

நடிகர் ராம்சரண் படக்குழுவினர் மற்றும் ரசிகர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தில் அவர் 007 என அச்சிடப்பட்டுள்ள டிசர்ட்டை அணிந்திருப்பதை பார்த்த ரசிகர்கள் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் மற்றும் அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

ஜானி மாஸ்டர்

ஜானி மாஸ்டர்

ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடித்து வரும் RC15 பாடல் காட்சிகளை முடித்த நிலையில் நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் நடிகர் ராம்சரண் மற்றும் இயக்குநர் ஷங்கர் உடன் எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து வைரலாக்கி உள்ளார்.

கியாரா அத்வானி லுக்

கியாரா அத்வானி லுக்

நடிகர் ராம்சரண் மற்றும் கியாரா அத்வானி இந்த படத்தில் என்ன லுக்கில் நடித்து வருகின்றனர் என தற்போது லீக்கான புகைப்படங்கள் மூலமாக ரசிகர்கள் அறிந்து கொண்டனர். பாலிவுட் நடிகை கியாரா அத்வானி ஏற்கனவே ராம்சரண் மற்றும் மகேஷ் பாபுவின் தெலுங்கு படத்தில் நடித்துள்ள நிலையில், ஷங்கர் இயக்கத்தில் இருவரும் எப்படி நடித்துள்ளனர் என்பதை காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

வில்லன் கூட்டம்

வில்லன் கூட்டம்

தீரன் அதிகாரம் ஒன்று, கேஜிஎஃப்பில் பார்ப்பது போல மோசமான வில்லன் கூட்டம் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள புகைப்படங்களும் லீக்காகி வைரலாகி வருகின்றன. கோட் சூட் போட்டுக் கொண்டு ஃபர்ஸ்ட் லுக் வெளியான நிலையில், வொர்க்கிங் ஸ்டில் எல்லாம் இப்படி படு ராவாக இருக்கிறதே என ரசிகர்கள் கமெண்ட்டுகளை தெறிக்கவிட்டு வருகின்றனர்.

ரயில் டிராக்கில் ஷங்கர்

ரயில் டிராக்கில் ஷங்கர்

மிகப்பெரிய ரயில் சண்டை காட்சியை இயக்குநர் ஷங்கர் படமாக்கி வருகிறார் என்பது தெளிவாக தெரிகிறது. ரயில் டிராக் மீது இயக்குநர் ஷங்கர் சேர் போட்டு சும்மா கெத்தாக அமர்ந்திருக்கும் புகைப்படங்களும் வெளியாகி ரசிகர்களை அட போட வைத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X