நிஜமாகவே கத்தியால் குத்திய இருவர்... பிரபுதேவா படத்தில் பரபரப்பு!

பிரபுதேவா, கேத்ரின் தெரசா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பை வேடிக்கைப் பார்த்தவர்கள், படக்குழுவினரை கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை: பிரபுதேவா, கேத்ரின் தெரசா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பில் நிஜ கத்திக்குத்து சம்பவம் நடைபெற்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

'தேவி' பட வெற்றியை தொடர்ந்து, நடிகர் பிரவுதேவா தமிழ் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். சார்லி சாப்லின் 2, பொன்மாணிக்கவேல் உள்ளிட்ட படங்களில் அவர் நடித்து வருகிறார்.

Real stabbing in Prabhudeva movie shooting

புதுமுக இயக்குனர் அர்ஜுன் இயக்கி வரும் பெயரிடப்படாத படத்திலும் பிரபுதேவா நடித்து வருகிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக கேத்ரின் தெரசா நடிக்கிறார். இப்படத்திற்கு 'யங் மங் சங்' என்று வித்தியாசமான தலைப்பு வைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதன் படப்பிடிப்பு புதுச்சேரியை அடுத்த வில்லியனூரில் நடைபெற்றது. மதிய உணவு இடைவேளையின் போது, படப்பிடிப்பு நடைபெற்ற இடத்துக்கு அருகில் இருந்த கோயில் மண்டபத்தில் வைத்து படத்தில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு உணவு பரிமாறப்பட்டது.

அப்போது படப்பிடிப்பை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த இரண்டு பேர் தங்களுக்கும் உணவு அளிக்கும் படி கேட்டனர். இதற்கு ஊழியர்கள் மறுப்பு தெரிவிக்கவே, இருவருக்கும் இடையே கைக்கலப்பு ஏற்பட்டது.

ஒரு கட்டத்தில் சமையல் மேடையில் இருந்த கத்தியை எடுத்து, உணவு பரிமாறி கொண்டிருந்த சினிமா ஊழியரை அந்த இரண்டு பேரும் குத்தினர். இதில் காயமடைந்த ஊழியர் சிகிச்சைக்காக புதுவை அரசு மருத்துவமனையில் கொண்டு செல்லப்பட்டார்.

தப்பியோட முயன்ற இரண்டு பேரையும் படக்குழுவைச் சேர்ந்தவர்கள் மடக்கிப் பிடித்துப் போலீசில் ஒப்படைத்திருக்கிறார்கள். இந்த சம்பவம் ஒரு பக்கம் இருந்தாலும் பிரபுதேவா, கேதரின் தெரசா சம்பந்தப்பட்ட காட்சிகள் தொடர்ந்து படமாக்கப்பட்டு வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X