கோபத்தில் ரீமா, நொம்பலத்தில் சந்தியா வல்லவன் பட ஷூட்டிங் மீண்டும் தடைபட்டுள்ளதாம். காரணம் வம்பு நாயகன் சிம்பு என்கிறது கோலிவுட் வட்டாரம்.மன்மதனுக்குப் பிறகு சிம்புவின், கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கத்தில் உருவாகும் படம் வல்லவன். ரொம்பநாட்களாகவே தயாரிப்பில் இருந்து வரும் இந்தப் படம் ஆரம்பத்திலிருந்தே பல குழப்பங்களுடன் வளர்ந்து வருகிறது.படத்தின் வேகம் மற்றும் செவைப் பார்த்து தயாரிப்பாளர் தேனப்பன் மண்டை காய்ந்து போய்விட்டார்.இப்படத்தில் சிம்புவுக்கு 3 ஜோடிகள். ரீமா சென், சந்தியா மற்றும் நயனதாரா என மூன்று பேருடன் கலாய்த்து வரும் சிம்பு,படத்தை ரொம்ப ரொம்ப மெதுவாக இயக்கி வருகிறாராம். ஒரு நாளைக்கு ஒரு சீன் என்ற ஜெட் வேகத்தில் படம் வளர்ந்துவருகிறது. இதனால் ரொம்ப நொந்து போயிருப்பது சந்தியாதான் என்கிறார்கள். காரணம், காதல் படத்திற்குப் பிறகு இவர் நடித்த ஒரு படமும்வெளியாகவில்லை. வல்லவனில் நல்ல கேரக்டர் என்று நம்பி இதில் மட்டும் சந்தியா நடித்து வருகிறார். ஆனால் படம் போகும்போக்கைப் பார்த்து புலம்பிக் கொண்டிருக்கிறாராம்.இந்த நிலையில் ரீமா செனுக்கும், சிம்புவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டிருப்பதால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டுள்ளதாம்.சிம்புவை ஆரம்பத்தில் புகழ்ந்து கொண்டிருந்த ரீமா இப்போது திட்டத் தொடங்கியுள்ளார்.என்ன டைரக்டர் இவர், எனது பொறுமையை ரொம்பவே சோதிக்கிறார். ஸ்கிரிப்டில் ஒன்று இருக்கும், ஆனால் ஸ்பாட்டில் வேறுஒன்றைச் செல்லி நடிக்கக் கூறுகிறார். இப்படி ஒரு குழப்பமான டைரக்டரை நான் பார்த்ததே இல்லை.அதை விட கொடுமை, வசனங்களை ஸ்பாட்டுக்கு வந்த பிறகுதான் எழுதுகிறார். என்னைப் போன்ற தமிழ்த் தெரியாதநடிகைகளுக்கு முன் கூட்டியே வசனங்களை சொல்லி விட்டால் அதைப் பேசிப் பழக அவகாசம் கிடைக்கும். ஸ்பாட்டில் அதிக டேக் வாங்குவதைத் தவிர்க்கலாம். ஆனால் திடீர் திடீரென அவர் வசனம் எழுதி அதை உடனே படமாக்குவதுஎன்பதால் ஏகப்பட்ட தாமதம் ஏற்படுகிறது.இதை பலமுறை சிம்புவிடம் கூறியும் அவர் காதில் போட்டுக் கொள்ளவே இல்லை. அதேபோல ஷூட்டிங் டைம் குண்டக்கமண்டக்க வைக்கிறார். இதனால் வேறு கமிட்மென்ட்டுகளை செய்ய முடியவில்லை. எப்போடா இந்தப் படம் முடியும் என்றுரொம்பவே நொந்து போயுள்ளோம் என்கிறார் ரீமா படு வெறுப்பாக.ரீமாவுக்கும், சிம்புவுக்கும் இடையே லடாய் ஏற்பட்டிருப்பதால் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்குவதில் தாமதம்ஏற்பட்டுள்ளதாம். இருவரையும் சமாதானப்படுத்த தேனப்பன் படாதபாடு பட்டு வருகிறாராம்.ரீமா இப்படிச் சென்னாலும், மறுபக்கம் நயனதாரா சிம்புவை புகழ்ந்து தள்ளிப் பேசுகிறார். இப்படி ஒரு இயக்குனரை பார்த்ததேஇல்லை (இதுக்கு அர்த்தம் வேற..) ரொம்பத் திறமையாக இருக்கிறார் சிம்பு. அவரது ஸ்கிரிப்ட், இயக்கும் வேகம், முடிவெடுக்கும் தன்மை எல்லாமே சூப்பர்ப். அவருடன் சேந்து நடிப்பது ரொம்பப்பெருமையாக இருக்கிறது என்று போகிறது நயனதாராவின் பாராட்டு. நயனதாராவுடன் சிம்பு அடிக்கடி தனியே டிஸ்கஷன் நடத்தி வருவதாக கோலிவுட்டில் பேசப்படும் நிலையில் இந்தப் பாராட்டுமுக்கியத்துவம் பெறுகிறது.நயனதாராவுடனும் ரொம்ப நெருக்கமாக இருக்கும் சிம்பு சரவணாவில் ஒரு குத்துப் பாட்டுக்கு ஆடி விட்டுப் போன மேக்னாரெட்டியுடனும் இப்போது ரொம்ப நட்பாக பழகி வருகிறாராம்.நயனதாராவுடன் டிஸ்கஷனில் ஈடுபடும் அவர் மேக்னாவுடனும் டிஸ்கஸ் செய்து, இருவருடனான தனது நட்பை பேலன்ஸ்டாகவைத்துக் கொள்கிறாராம்.அப்பப்பா அடேங்கப்பா

By Staff
வல்லவன் பட ஷூட்டிங் மீண்டும் தடைபட்டுள்ளதாம். காரணம் வம்பு நாயகன் சிம்பு என்கிறது கோலிவுட் வட்டாரம்.

மன்மதனுக்குப் பிறகு சிம்புவின், கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கத்தில் உருவாகும் படம் வல்லவன். ரொம்பநாட்களாகவே தயாரிப்பில் இருந்து வரும் இந்தப் படம் ஆரம்பத்திலிருந்தே பல குழப்பங்களுடன் வளர்ந்து வருகிறது.

படத்தின் வேகம் மற்றும் செவைப் பார்த்து தயாரிப்பாளர் தேனப்பன் மண்டை காய்ந்து போய்விட்டார்.

இப்படத்தில் சிம்புவுக்கு 3 ஜோடிகள். ரீமா சென், சந்தியா மற்றும் நயனதாரா என மூன்று பேருடன் கலாய்த்து வரும் சிம்பு,படத்தை ரொம்ப ரொம்ப மெதுவாக இயக்கி வருகிறாராம். ஒரு நாளைக்கு ஒரு சீன் என்ற ஜெட் வேகத்தில் படம் வளர்ந்துவருகிறது.

இதனால் ரொம்ப நொந்து போயிருப்பது சந்தியாதான் என்கிறார்கள். காரணம், காதல் படத்திற்குப் பிறகு இவர் நடித்த ஒரு படமும்வெளியாகவில்லை. வல்லவனில் நல்ல கேரக்டர் என்று நம்பி இதில் மட்டும் சந்தியா நடித்து வருகிறார். ஆனால் படம் போகும்போக்கைப் பார்த்து புலம்பிக் கொண்டிருக்கிறாராம்.

இந்த நிலையில் ரீமா செனுக்கும், சிம்புவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டிருப்பதால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டுள்ளதாம்.சிம்புவை ஆரம்பத்தில் புகழ்ந்து கொண்டிருந்த ரீமா இப்போது திட்டத் தொடங்கியுள்ளார்.

என்ன டைரக்டர் இவர், எனது பொறுமையை ரொம்பவே சோதிக்கிறார். ஸ்கிரிப்டில் ஒன்று இருக்கும், ஆனால் ஸ்பாட்டில் வேறுஒன்றைச் செல்லி நடிக்கக் கூறுகிறார். இப்படி ஒரு குழப்பமான டைரக்டரை நான் பார்த்ததே இல்லை.

அதை விட கொடுமை, வசனங்களை ஸ்பாட்டுக்கு வந்த பிறகுதான் எழுதுகிறார். என்னைப் போன்ற தமிழ்த் தெரியாதநடிகைகளுக்கு முன் கூட்டியே வசனங்களை சொல்லி விட்டால் அதைப் பேசிப் பழக அவகாசம் கிடைக்கும்.

ஸ்பாட்டில் அதிக டேக் வாங்குவதைத் தவிர்க்கலாம். ஆனால் திடீர் திடீரென அவர் வசனம் எழுதி அதை உடனே படமாக்குவதுஎன்பதால் ஏகப்பட்ட தாமதம் ஏற்படுகிறது.

இதை பலமுறை சிம்புவிடம் கூறியும் அவர் காதில் போட்டுக் கொள்ளவே இல்லை. அதேபோல ஷூட்டிங் டைம் குண்டக்கமண்டக்க வைக்கிறார். இதனால் வேறு கமிட்மென்ட்டுகளை செய்ய முடியவில்லை. எப்போடா இந்தப் படம் முடியும் என்றுரொம்பவே நொந்து போயுள்ளோம் என்கிறார் ரீமா படு வெறுப்பாக.

ரீமாவுக்கும், சிம்புவுக்கும் இடையே லடாய் ஏற்பட்டிருப்பதால் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்குவதில் தாமதம்ஏற்பட்டுள்ளதாம். இருவரையும் சமாதானப்படுத்த தேனப்பன் படாதபாடு பட்டு வருகிறாராம்.

ரீமா இப்படிச் சென்னாலும், மறுபக்கம் நயனதாரா சிம்புவை புகழ்ந்து தள்ளிப் பேசுகிறார். இப்படி ஒரு இயக்குனரை பார்த்ததேஇல்லை (இதுக்கு அர்த்தம் வேற..) ரொம்பத் திறமையாக இருக்கிறார் சிம்பு.

அவரது ஸ்கிரிப்ட், இயக்கும் வேகம், முடிவெடுக்கும் தன்மை எல்லாமே சூப்பர்ப். அவருடன் சேந்து நடிப்பது ரொம்பப்பெருமையாக இருக்கிறது என்று போகிறது நயனதாராவின் பாராட்டு.

நயனதாராவுடன் சிம்பு அடிக்கடி தனியே டிஸ்கஷன் நடத்தி வருவதாக கோலிவுட்டில் பேசப்படும் நிலையில் இந்தப் பாராட்டுமுக்கியத்துவம் பெறுகிறது.

நயனதாராவுடனும் ரொம்ப நெருக்கமாக இருக்கும் சிம்பு சரவணாவில் ஒரு குத்துப் பாட்டுக்கு ஆடி விட்டுப் போன மேக்னாரெட்டியுடனும் இப்போது ரொம்ப நட்பாக பழகி வருகிறாராம்.

நயனதாராவுடன் டிஸ்கஷனில் ஈடுபடும் அவர் மேக்னாவுடனும் டிஸ்கஸ் செய்து, இருவருடனான தனது நட்பை பேலன்ஸ்டாகவைத்துக் கொள்கிறாராம்.

அப்பப்பா அடேங்கப்பா

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X