For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  வழக்கு போடுவேன்.. சிம்புவுக்கு ரீமா மிரட்டல் ரீமா சென்னும் சிலம்பரசனுக்கும் இடையிலான மோதல் மோசமாகியுள்ளது.மிக மிக அருவருப்பான உடையைத் தந்து போடச் சொன்ன சிலம்பரசனை கெட்ட வார்த்தைகளால் திட்டிவிட்டுஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து வெளியேறிய ரீமா சென் குறித்து நாம் நேற்று தான் செயதி வெளியிட்டிருந்தோம்.இதையடுத்து ரீமாவை படத்திலிருந்து நீக்க சிலம்பு ரெக்கமண்ட் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து தன்னை நீக்கினாலோ அல்லது தனது காட்சிகளை வெட்டினாலே நீதமன்றத்தில் வழக்குத்தொடருவேன் என ரீமா சென் மிரட்டியுள்ளார்.சிலம்பரசன் கதாநாயகனாக நடித்து இயக்கும் வல்லவன் படத்தில் அவருக்கு ஜோடிகளாக சந்தியா, ரீமாசென்மற்றும் நயன்தாரா ஆகியோர் நடிக்கின்றனர். இதில் நயனத்தக்கும் சிலம்பரசனுக்கும் கனெக்ஷன்ஏற்பட்டுவிட்டதால் படத்தில் அவருக்கே முக்கியத்துவம் தந்து வருகிறார் சிலம்பு. இதை சந்தியா பொறுமையுடன் எதிர்கொண்டாலும், ரீமாவால் கோபத்தை அடக்க முடியவில்லை. ஷூட்டிங்ஸ்பாட்டிலேயே இதை ரீமா பல முறை வெளிப்படுத்திவிட இருவருக்கும் முட்டல் மோதல் ஆரம்பித்தது.இதையடுத்து ரீமாவை பல வகைகளிலும் டென்சனாக்கி வருகிறார் சிம்பு. அந்த வகையில் மிகச் சிறிய பாட்டம்,அதை விடச் சிறிய டாப்ஸ் கொடுத்து அதை அணிந்து கொண்டு வரச் சொன்னார் சிம்பு. டிரஸ்ஸைப் பார்த்துடென்சனான ரீமா, நான் என்ன புளு பிலிமிலா நடிக்கிறேன் என்று ஆரம்பித்து சிலம்பரசனை வாட்டி விட்டார்வாட்டி.டிரஸ் படு ஆபாசமாக இருப்பதாக ரீமா கூற, பதிலுக்கு சிம்பு கத்த ஷூட்டிங் ஸ்பாட்டே நாறிவிட்டது.இதையடுத்து அங்கிருந்து கிளம்பிச் சென்றுவிட்டார் ரீமா. படபிடிப்பும் ரத்தாகிவிட்டது. இதையடுத்து ரீமா சென்னுக்கு பதிலாக வேறு ஒரு கதாநாயகியை போட்டு விடலாம் என்று தயாரிப்பாளர்தேனப்பனிடம் சிம்பு சொல்ல, அவர் ஆடிப் போய்விட்டாராம். ரீமா சென் இதுவரை 30 நாட்கள் நடித்துமுடித்துவிட்டார். இப்போது அவரை நீக்கினால் செலவு மேலும் அதிகமாகுமே.. ஏற்கனவே படம்லேட்டாகிவிட்டதே.. இன்னொரு ஹீரோயினைப் போட்டு படத்தை நாம் எப்போது முடிப்பது என்று தேனப்பன்தலையில் கையை வைத்துக் கொண்டாராம்.அதற்கு சிம்பு, என் சம்பளத்தில் இருந்து ரீமாவின் சம்பளத்தைக் கழித்துக்கொள்ளுங்கள் என்று கூறிவிட்டாராம்.மேலும் ரீமாவின் ரோலில் நடிக்குமாறு திரிஷா, அசின், சோனியா அகர்வால் ஆகியோரிடம் சிம்புபேசியிருக்கிறார். ஆனால், மூன்று பேருமே பெரிய கும்பிடு போட்டுவிட்டார்களாம்.இதையறித்த ரீமா சென் மேலும் கோபமாகி, நான் நடித்த காட்சிகளை நீக்கினால் கோர்ட்டில் வழக்குத்தொடருவேன் என்று தயாரிப்பாளர் தரப்புக்கு மிரட்டல் விட்டுள்ளார். இப்போது தனது சொந்த ஊரான கொல்கத்தாவுக்குப் போய்விட்ட ரீமாவை எப்படியாவது சமாதானப்படுத்தும்முயற்சியில் தொடர்ந்து தேனப்பன் ஈடுபட்டுள்ளார். ஆனால், இதுவரை ரீமா சமாதானம் ஆகவில்லையாம்.இன்னும் 15 நாட்கள் படபிடிப்பு நடந்தால் படம் முடிவடைந்து விடும் நிலையில், ரீமா-சிம்பு லடாய் ஏற்பட்டுசூட்டிங் அப்படியே அந்தரத்தில் தொங்குகிறது.ஆபாச சிம்பு-ஆவேச ரீமா!

  By Staff
  |

  ரீமா சென்னும் சிலம்பரசனுக்கும் இடையிலான மோதல் மோசமாகியுள்ளது.

  மிக மிக அருவருப்பான உடையைத் தந்து போடச் சொன்ன சிலம்பரசனை கெட்ட வார்த்தைகளால் திட்டிவிட்டுஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து வெளியேறிய ரீமா சென் குறித்து நாம் நேற்று தான் செயதி வெளியிட்டிருந்தோம்.

  இதையடுத்து ரீமாவை படத்திலிருந்து நீக்க சிலம்பு ரெக்கமண்ட் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து தன்னை நீக்கினாலோ அல்லது தனது காட்சிகளை வெட்டினாலே நீதமன்றத்தில் வழக்குத்தொடருவேன் என ரீமா சென் மிரட்டியுள்ளார்.

  சிலம்பரசன் கதாநாயகனாக நடித்து இயக்கும் வல்லவன் படத்தில் அவருக்கு ஜோடிகளாக சந்தியா, ரீமாசென்மற்றும் நயன்தாரா ஆகியோர் நடிக்கின்றனர். இதில் நயனத்தக்கும் சிலம்பரசனுக்கும் கனெக்ஷன்ஏற்பட்டுவிட்டதால் படத்தில் அவருக்கே முக்கியத்துவம் தந்து வருகிறார் சிலம்பு.


  இதை சந்தியா பொறுமையுடன் எதிர்கொண்டாலும், ரீமாவால் கோபத்தை அடக்க முடியவில்லை. ஷூட்டிங்ஸ்பாட்டிலேயே இதை ரீமா பல முறை வெளிப்படுத்திவிட இருவருக்கும் முட்டல் மோதல் ஆரம்பித்தது.

  இதையடுத்து ரீமாவை பல வகைகளிலும் டென்சனாக்கி வருகிறார் சிம்பு. அந்த வகையில் மிகச் சிறிய பாட்டம்,அதை விடச் சிறிய டாப்ஸ் கொடுத்து அதை அணிந்து கொண்டு வரச் சொன்னார் சிம்பு. டிரஸ்ஸைப் பார்த்துடென்சனான ரீமா, நான் என்ன புளு பிலிமிலா நடிக்கிறேன் என்று ஆரம்பித்து சிலம்பரசனை வாட்டி விட்டார்வாட்டி.

  டிரஸ் படு ஆபாசமாக இருப்பதாக ரீமா கூற, பதிலுக்கு சிம்பு கத்த ஷூட்டிங் ஸ்பாட்டே நாறிவிட்டது.இதையடுத்து அங்கிருந்து கிளம்பிச் சென்றுவிட்டார் ரீமா. படபிடிப்பும் ரத்தாகிவிட்டது.


  இதையடுத்து ரீமா சென்னுக்கு பதிலாக வேறு ஒரு கதாநாயகியை போட்டு விடலாம் என்று தயாரிப்பாளர்தேனப்பனிடம் சிம்பு சொல்ல, அவர் ஆடிப் போய்விட்டாராம். ரீமா சென் இதுவரை 30 நாட்கள் நடித்துமுடித்துவிட்டார். இப்போது அவரை நீக்கினால் செலவு மேலும் அதிகமாகுமே.. ஏற்கனவே படம்லேட்டாகிவிட்டதே.. இன்னொரு ஹீரோயினைப் போட்டு படத்தை நாம் எப்போது முடிப்பது என்று தேனப்பன்தலையில் கையை வைத்துக் கொண்டாராம்.

  அதற்கு சிம்பு, என் சம்பளத்தில் இருந்து ரீமாவின் சம்பளத்தைக் கழித்துக்கொள்ளுங்கள் என்று கூறிவிட்டாராம்.

  மேலும் ரீமாவின் ரோலில் நடிக்குமாறு திரிஷா, அசின், சோனியா அகர்வால் ஆகியோரிடம் சிம்புபேசியிருக்கிறார். ஆனால், மூன்று பேருமே பெரிய கும்பிடு போட்டுவிட்டார்களாம்.

  இதையறித்த ரீமா சென் மேலும் கோபமாகி, நான் நடித்த காட்சிகளை நீக்கினால் கோர்ட்டில் வழக்குத்தொடருவேன் என்று தயாரிப்பாளர் தரப்புக்கு மிரட்டல் விட்டுள்ளார்.


  இப்போது தனது சொந்த ஊரான கொல்கத்தாவுக்குப் போய்விட்ட ரீமாவை எப்படியாவது சமாதானப்படுத்தும்முயற்சியில் தொடர்ந்து தேனப்பன் ஈடுபட்டுள்ளார். ஆனால், இதுவரை ரீமா சமாதானம் ஆகவில்லையாம்.

  இன்னும் 15 நாட்கள் படபிடிப்பு நடந்தால் படம் முடிவடைந்து விடும் நிலையில், ரீமா-சிம்பு லடாய் ஏற்பட்டுசூட்டிங் அப்படியே அந்தரத்தில் தொங்குகிறது.

  ஆபாச சிம்பு-ஆவேச ரீமா!

   உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
   Enable
   x
   Notification Settings X
   Time Settings
   Done
   Clear Notification X
   Do you want to clear all the notifications from your inbox?
   Settings X
   X