திரும்பி வந்தார் ரீமா வல்லவன் படப்பிடிப்பின்போது ஆபாசமான உடையைக் கொடுத்து ஆட வருமாறுஅழைத்த சிம்புவுடன் பெரும் வாய்த்தகராறில் ஈடுபட்டு கோபத்தில் மும்பைக்குக்கிளம்பிச் சென்ற ரீமா சென் மீண்டும் சென்னை திரும்பியுள்ளார்.ஆனால் விஷாலுடன் நடிக்கும் திமிரு படத்தில் நடிப்பதற்காகவே வந்துள்ளதாக ரீமாதெரிவித்துள்ளார்.நடிகைகளுக்கும், இயக்குநர்களுக்கும், நடிகைகளுக்கும், நடிகர்களுக்கும் இடையேஅவ்வப்போது தகராறு ஏற்படுவதும், பேச்சுவார்த்தையில் அவைசரிக்கப்பட்டப்படுவதும் திரையுலகில் ரொம்ப சகஜம்.சமீப காலமாக இதுபோல பல தகராறுகள் ஏற்பட்டு சரியாகியிருக்கின்றன. ஏய் நீரொம்ப அழகா இருக்கே படப்பிடிப்பின்போது ஷாம், உதட்டில் ஓவராக முத்தமிட்டுவிட்டதால் அவரை கன்னத்தில் அறைந்து சினேகா பரபரப்பை ஏற்படுத்தினார்.ஆனால் அந்தக் காரணத்திற்காக படப்பிடிப்பு பாதிக்கப்படவில்லை. தொடர்ந்துஇருவரும் சேர்ந்தே நடித்து படத்தை டித்தனர். பின்னர் ஏபிசிடி என்ற படத்திலும்இருவரும் மீண்டும் சேர்ந்து நடித்தனர். இதேபோல கள்வனின் காதலி படப்பிடிப்பின்போது எஸ்.ஜே.சூர்யா தன்னிடம்ஓவராக வழிந்ததால் அதிருப்தி அடைந்த நயனதாரா, அவரை பாங்காக்கில் வைத்துகடுப்படித்தார். இருவருக்கும் அங்கே சண்டையும் மூண்டது. ஆனால் அப்பிரச்சினைகமுக்கமாக முடித்துக் கொள்ளப்பட்டு விட்டது.சமீபத்தில் நிலாவுக்கும், ஜாம்பவான் படத் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனருக்கும்இடையே குற்றாலத்தில் வைத்து முட்டிக் கொண்டது. கோபமடைந்த நிலா அங்கிருந்துமதுரைக்கு தப்பி வந்து பின்னர் சென்னைக்கு விமானம் ஏறி ஹைதராபாத்துக்குப்பறந்து விட்டார்.அப்படியே டெல்லிக்கும் போய் விட்டார். சமீபத்தில் கோலிவுட்டில் பெரும்பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் இதுதான். பின்னர் டெல்லி போய் நிலாவைகெஞ்சிக் கூத்தாடி மீண்டும் படப்பிடிப்புக்கு அழைத்து வந்து விட்டனர் ஜாம்பவான்யூனிட்டார்.இப்போது ரீமா சென் இன்னொரு பஞ்சாயத்தைக் கூட்டியுள்ளார். வல்லவன் படத்தின்ஒரு பாடல் காட்சியின்போது ஆபாசமான ஆடையைக் கொடுத்து சிம்பு நடிக்குமாறுகூறியதால் கோபமடைந்த ரீமா, சிம்புவுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.குழாயடிச் சண்டை ரேஞ்சுக்கு இருவருமே கெட்ட வார்த்தைகளால் திட்டிக்கொண்டதால் சூட்டிங் ஸ்பாட் நாறிப் போனது. இதையடுத்து படப்பிடிப்பும்பாதிக்கப்பட்டது. கோபித்துக் கொண்ட ரீமா மும்பைக்கு சென்று விட்டார். இதனால் கோலிவுட்டில்மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது. ரீமா போனால் போகட்டும், வேற ஆளைப்போடுவோம் என்று சிம்பு வேகமாக கூற, பணத்தைப் போட்டு படத்தை எடுக்கும்தேனப்பன் ஆடிப் போய், நீ பாட்டுக்கு சொல்லிட்ட, பணத்தைப் போட்டஎனக்குத்தானே தெரியும் என்று சிம்புவை அமைதிப்படுத்தினாராம்.நான் நடித்த காட்சிகளை வெட்டினால் சும்மா விட மாட்டேன், வழக்கு போடுவேன்என்று பதிலுக்கு ரீமாவும் மிரட்டல் விடுத்துள்ளார்.இந்தப் பிரச்சினை அப்படியே இருக்கும் நிலையில் கோபித்துக் கொண்டு போன ரீமாசென் மீண்டும் சென்னைக்குத் திரும்பியுள்ளார். ஆனால் வல்லவனில் நடிக்கவரவில்லையாம்.தனக்கு வேண்டப்பட்டவரான விஷாலுடன் நடிக்கும் திமிரு படப்பிடிப்பில் கலந்துகொள்ளவே அவர் சென்னை வந்துள்ளார். சென்னை வந்த அவர் நேராக திமிரு ஷூட்டிங்கில் கலந்து கொண்டார். அங்கு அவரைசந்தித்த செய்தியாளர்கள்,வல்லவன் படம் தொடருமா, மீண்டும் நடிப்பீர்களா என்று கேட்டபோது, அதுகுறித்துப் பேச விரும்பவில்லை, படம் வருமா, வராதா என்பது குறித்துதேனப்பனிடம்தான் கேட்க வேண்டும் என்று பட்டும் படாமலும் சொல்லி முடித்தார்.திமிரு படத்தில் நடிக்கவே சென்னைக்கு வந்துள்ளேன். இப்படத்தின் படப்பிடிப்பு 60சதவீதம் முடிந்து விட்டது. நான் சம்பந்தப்பட்ட காட்சிகளை முடித்துக்கொண்டிருக்கிறார்கள். செல்லமே போல இந்தப் படமும் நன்கு பேசப்படும். நல்லநடிகருடன் (அப்ப சிம்பு கெட்ட நடிகறா?)நான் நடித்துக் கொண்டிருக்கிறேன்,சந்தோஷமாக படப்பிடிப்புக்கு வந்துள்ளேன் என்று சொல்லி டித்தார் ரீமா.வம்பு இன்னும் முடியவில்லை...

By Staff

வல்லவன் படப்பிடிப்பின்போது ஆபாசமான உடையைக் கொடுத்து ஆட வருமாறுஅழைத்த சிம்புவுடன் பெரும் வாய்த்தகராறில் ஈடுபட்டு கோபத்தில் மும்பைக்குக்கிளம்பிச் சென்ற ரீமா சென் மீண்டும் சென்னை திரும்பியுள்ளார்.

ஆனால் விஷாலுடன் நடிக்கும் திமிரு படத்தில் நடிப்பதற்காகவே வந்துள்ளதாக ரீமாதெரிவித்துள்ளார்.

நடிகைகளுக்கும், இயக்குநர்களுக்கும், நடிகைகளுக்கும், நடிகர்களுக்கும் இடையேஅவ்வப்போது தகராறு ஏற்படுவதும், பேச்சுவார்த்தையில் அவைசரிக்கப்பட்டப்படுவதும் திரையுலகில் ரொம்ப சகஜம்.

சமீப காலமாக இதுபோல பல தகராறுகள் ஏற்பட்டு சரியாகியிருக்கின்றன. ஏய் நீரொம்ப அழகா இருக்கே படப்பிடிப்பின்போது ஷாம், உதட்டில் ஓவராக முத்தமிட்டுவிட்டதால் அவரை கன்னத்தில் அறைந்து சினேகா பரபரப்பை ஏற்படுத்தினார்.

ஆனால் அந்தக் காரணத்திற்காக படப்பிடிப்பு பாதிக்கப்படவில்லை. தொடர்ந்துஇருவரும் சேர்ந்தே நடித்து படத்தை டித்தனர். பின்னர் ஏபிசிடி என்ற படத்திலும்இருவரும் மீண்டும் சேர்ந்து நடித்தனர்.


இதேபோல கள்வனின் காதலி படப்பிடிப்பின்போது எஸ்.ஜே.சூர்யா தன்னிடம்ஓவராக வழிந்ததால் அதிருப்தி அடைந்த நயனதாரா, அவரை பாங்காக்கில் வைத்துகடுப்படித்தார். இருவருக்கும் அங்கே சண்டையும் மூண்டது. ஆனால் அப்பிரச்சினைகமுக்கமாக முடித்துக் கொள்ளப்பட்டு விட்டது.

சமீபத்தில் நிலாவுக்கும், ஜாம்பவான் படத் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனருக்கும்இடையே குற்றாலத்தில் வைத்து முட்டிக் கொண்டது. கோபமடைந்த நிலா அங்கிருந்துமதுரைக்கு தப்பி வந்து பின்னர் சென்னைக்கு விமானம் ஏறி ஹைதராபாத்துக்குப்பறந்து விட்டார்.

அப்படியே டெல்லிக்கும் போய் விட்டார். சமீபத்தில் கோலிவுட்டில் பெரும்பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் இதுதான். பின்னர் டெல்லி போய் நிலாவைகெஞ்சிக் கூத்தாடி மீண்டும் படப்பிடிப்புக்கு அழைத்து வந்து விட்டனர் ஜாம்பவான்யூனிட்டார்.

இப்போது ரீமா சென் இன்னொரு பஞ்சாயத்தைக் கூட்டியுள்ளார். வல்லவன் படத்தின்ஒரு பாடல் காட்சியின்போது ஆபாசமான ஆடையைக் கொடுத்து சிம்பு நடிக்குமாறுகூறியதால் கோபமடைந்த ரீமா, சிம்புவுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

குழாயடிச் சண்டை ரேஞ்சுக்கு இருவருமே கெட்ட வார்த்தைகளால் திட்டிக்கொண்டதால் சூட்டிங் ஸ்பாட் நாறிப் போனது. இதையடுத்து படப்பிடிப்பும்பாதிக்கப்பட்டது.


கோபித்துக் கொண்ட ரீமா மும்பைக்கு சென்று விட்டார். இதனால் கோலிவுட்டில்மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது. ரீமா போனால் போகட்டும், வேற ஆளைப்போடுவோம் என்று சிம்பு வேகமாக கூற, பணத்தைப் போட்டு படத்தை எடுக்கும்தேனப்பன் ஆடிப் போய், நீ பாட்டுக்கு சொல்லிட்ட, பணத்தைப் போட்டஎனக்குத்தானே தெரியும் என்று சிம்புவை அமைதிப்படுத்தினாராம்.

நான் நடித்த காட்சிகளை வெட்டினால் சும்மா விட மாட்டேன், வழக்கு போடுவேன்என்று பதிலுக்கு ரீமாவும் மிரட்டல் விடுத்துள்ளார்.

இந்தப் பிரச்சினை அப்படியே இருக்கும் நிலையில் கோபித்துக் கொண்டு போன ரீமாசென் மீண்டும் சென்னைக்குத் திரும்பியுள்ளார். ஆனால் வல்லவனில் நடிக்கவரவில்லையாம்.

தனக்கு வேண்டப்பட்டவரான விஷாலுடன் நடிக்கும் திமிரு படப்பிடிப்பில் கலந்துகொள்ளவே அவர் சென்னை வந்துள்ளார்.

சென்னை வந்த அவர் நேராக திமிரு ஷூட்டிங்கில் கலந்து கொண்டார். அங்கு அவரைசந்தித்த செய்தியாளர்கள்,

வல்லவன் படம் தொடருமா, மீண்டும் நடிப்பீர்களா என்று கேட்டபோது,


அதுகுறித்துப் பேச விரும்பவில்லை, படம் வருமா, வராதா என்பது குறித்துதேனப்பனிடம்தான் கேட்க வேண்டும் என்று பட்டும் படாமலும் சொல்லி முடித்தார்.

திமிரு படத்தில் நடிக்கவே சென்னைக்கு வந்துள்ளேன். இப்படத்தின் படப்பிடிப்பு 60சதவீதம் முடிந்து விட்டது. நான் சம்பந்தப்பட்ட காட்சிகளை முடித்துக்கொண்டிருக்கிறார்கள். செல்லமே போல இந்தப் படமும் நன்கு பேசப்படும். நல்லநடிகருடன் (அப்ப சிம்பு கெட்ட நடிகறா?)நான் நடித்துக் கொண்டிருக்கிறேன்,சந்தோஷமாக படப்பிடிப்புக்கு வந்துள்ளேன் என்று சொல்லி டித்தார் ரீமா.

வம்பு இன்னும் முடியவில்லை...

More from Filmibeat

Read more about: reema is back in kollywood
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X