»   »  சேத்னா..ஆ ஆ.. அவளோட ராவுகள் என்ற பெயரில் அந்தக் காலத்தில் மலையாளத்தில் ஒரு பப்பளக்கா பள பளா படம் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது. மலையாளத்திலிருந்து அப்படியே தமிழுக்கும் ஓடோடி வந்து தமிழ் ரசிகர்களையும் குளிப்பாட்டி விட்டுப் போனது. இப்போது அதே கணக்கில் சேத்னாவின் இரவுகள் என்ற பெயரில் ஒரு கும்தலக்கா கும் கும்மா படம் தயாராகி வருகிறது. வில்லி மூவிஸ் என்ற நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. படத்தை மதுபாலா இயக்கியுள்ளார். சித்திக் படத்தின் கதை, வசனத்தை (ரொம்பத் தேவைதான்!) எழுதியுள்ளார். தோ, கதை: மும்பையைச் சேர்ந்தவள் அஞ்சலி. குடும்பத்தில் கஷ்டமான நிலை. வீட்டை விட்டு வெளியேறுகிறாள் அஞ்சலி. தனது தோழி கவிதாவின் வீட்டில் தஞ்சமடையும் அவள், அங்குதங்கியிருந்து வேலை பார்த்து அம்மா, சகோதர, சகோதரிகளைக் காப்பாற்றுகிறாள். மகள் நன்றாக சம்பாதிக்க ஆரம்பித்தவுடன், அஞ்சலியின் அம்மாவுக்கு புத்தி மாறுகிறது. உனக்கு இளமை இருக்கிறது, வயது இருக்கிறது. இன்னும் சம்பாதித்து, நல்ல வசதியுடன் வாழ விபச்சாரமே பெஸ்ட் என்று மகளுக்கு அறிவுரை கூறும் அம்மா, கட்டாயப்படுத்தி விபச்சாரத்தில் இறக்குகிறாள். பகலில் அஞ்சலியாகவும், இரவில் சேத்னா என்ற பெயரிலும் இரட்டை வாழ்க்கையைத் தொடங்குகிறாள் அஞ்சலி. சேத்னாவின் பிரச்சினைகளை அலசுவதே படத்தின் கதையாம் (இப்படில்லாம் எழுத நம்மாளுங்களுக்கு மட்டுமே முடியும்!

சேத்னா..ஆ ஆ.. அவளோட ராவுகள் என்ற பெயரில் அந்தக் காலத்தில் மலையாளத்தில் ஒரு பப்பளக்கா பள பளா படம் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது. மலையாளத்திலிருந்து அப்படியே தமிழுக்கும் ஓடோடி வந்து தமிழ் ரசிகர்களையும் குளிப்பாட்டி விட்டுப் போனது. இப்போது அதே கணக்கில் சேத்னாவின் இரவுகள் என்ற பெயரில் ஒரு கும்தலக்கா கும் கும்மா படம் தயாராகி வருகிறது. வில்லி மூவிஸ் என்ற நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. படத்தை மதுபாலா இயக்கியுள்ளார். சித்திக் படத்தின் கதை, வசனத்தை (ரொம்பத் தேவைதான்!) எழுதியுள்ளார். தோ, கதை: மும்பையைச் சேர்ந்தவள் அஞ்சலி. குடும்பத்தில் கஷ்டமான நிலை. வீட்டை விட்டு வெளியேறுகிறாள் அஞ்சலி. தனது தோழி கவிதாவின் வீட்டில் தஞ்சமடையும் அவள், அங்குதங்கியிருந்து வேலை பார்த்து அம்மா, சகோதர, சகோதரிகளைக் காப்பாற்றுகிறாள். மகள் நன்றாக சம்பாதிக்க ஆரம்பித்தவுடன், அஞ்சலியின் அம்மாவுக்கு புத்தி மாறுகிறது. உனக்கு இளமை இருக்கிறது, வயது இருக்கிறது. இன்னும் சம்பாதித்து, நல்ல வசதியுடன் வாழ விபச்சாரமே பெஸ்ட் என்று மகளுக்கு அறிவுரை கூறும் அம்மா, கட்டாயப்படுத்தி விபச்சாரத்தில் இறக்குகிறாள். பகலில் அஞ்சலியாகவும், இரவில் சேத்னா என்ற பெயரிலும் இரட்டை வாழ்க்கையைத் தொடங்குகிறாள் அஞ்சலி. சேத்னாவின் பிரச்சினைகளை அலசுவதே படத்தின் கதையாம் (இப்படில்லாம் எழுத நம்மாளுங்களுக்கு மட்டுமே முடியும்!

Subscribe to Oneindia Tamil

அவளோட ராவுகள் என்ற பெயரில் அந்தக் காலத்தில் மலையாளத்தில் ஒரு பப்பளக்கா பள பளா படம் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது. மலையாளத்திலிருந்து அப்படியே தமிழுக்கும் ஓடோடி வந்து தமிழ் ரசிகர்களையும் குளிப்பாட்டி விட்டுப் போனது.

இப்போது அதே கணக்கில் சேத்னாவின் இரவுகள் என்ற பெயரில் ஒரு கும்தலக்கா கும் கும்மா படம் தயாராகி வருகிறது.

வில்லி மூவிஸ் என்ற நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. படத்தை மதுபாலா இயக்கியுள்ளார். சித்திக் படத்தின் கதை, வசனத்தை (ரொம்பத் தேவைதான்!) எழுதியுள்ளார்.

தோ, கதை: மும்பையைச் சேர்ந்தவள் அஞ்சலி. குடும்பத்தில் கஷ்டமான நிலை. வீட்டை விட்டு வெளியேறுகிறாள் அஞ்சலி. தனது தோழி கவிதாவின் வீட்டில் தஞ்சமடையும் அவள், அங்குதங்கியிருந்து வேலை பார்த்து அம்மா, சகோதர, சகோதரிகளைக் காப்பாற்றுகிறாள்.

மகள் நன்றாக சம்பாதிக்க ஆரம்பித்தவுடன், அஞ்சலியின் அம்மாவுக்கு புத்தி மாறுகிறது. உனக்கு இளமை இருக்கிறது, வயது இருக்கிறது. இன்னும் சம்பாதித்து, நல்ல வசதியுடன் வாழ விபச்சாரமே பெஸ்ட் என்று மகளுக்கு அறிவுரை கூறும் அம்மா, கட்டாயப்படுத்தி விபச்சாரத்தில் இறக்குகிறாள்.

பகலில் அஞ்சலியாகவும், இரவில் சேத்னா என்ற பெயரிலும் இரட்டை வாழ்க்கையைத் தொடங்குகிறாள் அஞ்சலி. சேத்னாவின் பிரச்சினைகளை அலசுவதே படத்தின் கதையாம் (இப்படில்லாம் எழுத நம்மாளுங்களுக்கு மட்டுமே முடியும்!)

அஞ்சலி பிளஸ் சேத்னாவாக நடித்துள்ளவர் ரீனா கபூர். படு வாளிப்பாக, கிளுகிளு வாலிபத்துடன் இருக்கிறார் ரீனா கபூர். படம் முழுக்க ரீனா, வாளை மீனாட்டம் கிளாமரில் துள்ளிக் குதிக்கிறாராம்.

அஞ்சலியாக வரும்போது அட்டகாசமான நடிப்பையும், சேத்னாவாக மாறிய பின்னர் கிளாமரிலும் கில்லி போல விளையாடியுள்ளாராம் ரீனா.

ரீனாவின் ஸ்டில்களைப் பார்க்கும்போது அவளோட ராவுகளை இந்த சேத்னாவின் இரவுகள் பீட் செய்யும் என்று அடித்துச் சத்தியம் செய்யலாம் போல, அந்த அளவுக்கு கவர்ச்சி ரசம் பொங்கித் ததும்புகிறது.

விபச்சார விபத்திலிருந்து அஞ்சலி எப்படி மீளுகிறாள் என்று கூறி கதையை முடிக்கிறார்களாம்.


Read more about: reenas hot tamil movie

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil