இடியட் ரெஜினா மறைந்த தேங்காய் சீனிவாசனின் குடும்பத்தில் இருந்து இன்னொரு வாரிசு திரைக்கு வருகிறது.முதலில் அவரது பேத்தி ஸ்ருத்திகா ஸ்ரீ படத்தின் மூலம் சூர்யாவுக்கு ஜோடியாக அறிமுகமானார். நெடுநெடுவென்ற உயரம், தேங்காயின் அதே பூனைக் கண்கள் மற்றும் இன்ன பிற அட்டகாச ஐயிட்டங்ளோடு இருந்தஸ்ருத்திகா ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டார்.ஆனால், அடுத்து ஆல்பம் படத்தில் நடித்தோடு சரி, அத்தோடு ஆளைக் காணோம். அந்தப் படம் தெலுங்குக்கும்போனது.ஜேப்பியார் காலேஜில் விசுவல் கம்யூனிகேசன்ஸ் படித்து வந்த ஸ்ருத்திகா அதை விட்டுவிட்டுத் தான் நடிக்கவந்தார். அது கை கொடுக்காததால் மீண்டும் படிக்கப் போனார்.இடையில் விருமாண்டி படத்தில் ஸ்ருதிகாவை கமல் ஹீரோயினாக்கப் போவதாக சொன்னார்கள். ஆனால், அந்தசான்ஸ் அபிராமிக்குப் போய்விட்டது. ஸ்ருதிகாவும் சான்சுக்காக அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை. வீட்டோடுஇருந்து வருகிறார்.இந் நிலையில் தேங்காயின் குடும்பத்தில் இருந்து ஒரு ஹீரோ தமிழ் சினிமாவுக்கு வருகிறார். இவர் தேங்காய்சீனிவாசனின் மகள் வயிற்றுப் பேரன். பெயர் யோகி.வீட்டில் படிக்கச் சொல்லி எவ்வளவோ வற்புறுத்தியும் கேட்காமல் தாத்தாவைப் போலவே சினிமாவுக்குவந்திருக்கிறார் யோகி.ஆர்.வி. உதயகுமார், தரணி ஆகியோரிடம் அஸிஸ்டெண்டாக இருந்த நாகு என்பவர் இயக்கப் போகும் இடியட்என்ற படத்தில் அறிமுகமாகிறார் யோகி.யோகிக்கு ஜோடியாக ரெஜினா என்ற மலையாளத்து பிகர் ஹீரோயினாக புக் ஆகியிருக்கிறார். இவரும் சின்னப்புள்ளையில் இருந்தே சினிமாவுக்கே தன்னை அர்ப்பணித்தவராம்.கண்டநாள் முதல் படத்தில் லைலாவுக்கு தங்கச்சியாக நடித்திருந்த ரெஜினாவுக்கு இதில் ஹீரோயின் புரமோஷன்கிடைத்திருக்கிறது. ஜகஜகவென இருக்கிறார் ரெஜி. விட்டுக் கொடுத்து நடிக்க ரெடியாக இருக்கிறாராம்.ஒத்துழைப்புகள் மூலம் கோலிவுட்டில் நங்கூரம் பாய்ச்சிவிடலாம் என்ற நம்பிக்கையோடு இருக்கிறார்.படத்துக்கு இடியட் என்று பெயர் வைத்த நாகுவை ஓரங்கட்டினோம். என்னங்க இது தலைப்பு என்று கேட்டால்,படத்துக்கும் தலைப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை சார் என்று போட்டு உடைத்தார்.செல்லமான தோழி, மனதை வென்ற பெண் தனக்குப் பிடித்தவனை ராஸ்கல், லவ்லி பூல் என்றெல்லாம்திட்டுவதில்லையா? அது என்ன திட்டா? அது அன்பு சார்.அது மாதிரி தான் இந்த இடியட்டும். ஹீரோவை காதலிக்கும் பெண், தன் காதலனை செல்லமாய் கூப்பிடும்வார்த்தை தான் இடியட். இது அன்பு சீண்டல் சார்.. அதான் அதையே தலைப்பாக வைத்துவிட்டோம் என்றுவெளக்கம் சொன்னார்.மேலும் நாம் கேட்காமலேயே, ரெஜினாவை பாராட்டோ பாராட்டு என்று பாராட்டினார் நாகு. பொண்ணு ரொம்பநல்லா நடிக்குது. சொல்றபடி கேட்டு செய்யுது. ரெஜினாவுக்கு ரொம்ப நல்ல எதிர்காலம் இருக்கு என்றார்.இடியட் என்ற நல்ல பெயரில் ஏற்கனவே தெலுங்கு, கன்னடத்தில் படங்களை எடுத்துவிட்டார்கள். தமிழில்அந்தக் குறையை நாகு போக்கிவிட்டார்.ஆனால், அந்த இடியட்களுக்கும், இந்த இடியட்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லையாம்.

By Staff

மறைந்த தேங்காய் சீனிவாசனின் குடும்பத்தில் இருந்து இன்னொரு வாரிசு திரைக்கு வருகிறது.

முதலில் அவரது பேத்தி ஸ்ருத்திகா ஸ்ரீ படத்தின் மூலம் சூர்யாவுக்கு ஜோடியாக அறிமுகமானார். நெடுநெடுவென்ற உயரம், தேங்காயின் அதே பூனைக் கண்கள் மற்றும் இன்ன பிற அட்டகாச ஐயிட்டங்ளோடு இருந்தஸ்ருத்திகா ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டார்.

ஆனால், அடுத்து ஆல்பம் படத்தில் நடித்தோடு சரி, அத்தோடு ஆளைக் காணோம். அந்தப் படம் தெலுங்குக்கும்போனது.

ஜேப்பியார் காலேஜில் விசுவல் கம்யூனிகேசன்ஸ் படித்து வந்த ஸ்ருத்திகா அதை விட்டுவிட்டுத் தான் நடிக்கவந்தார். அது கை கொடுக்காததால் மீண்டும் படிக்கப் போனார்.

இடையில் விருமாண்டி படத்தில் ஸ்ருதிகாவை கமல் ஹீரோயினாக்கப் போவதாக சொன்னார்கள். ஆனால், அந்தசான்ஸ் அபிராமிக்குப் போய்விட்டது. ஸ்ருதிகாவும் சான்சுக்காக அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை. வீட்டோடுஇருந்து வருகிறார்.

இந் நிலையில் தேங்காயின் குடும்பத்தில் இருந்து ஒரு ஹீரோ தமிழ் சினிமாவுக்கு வருகிறார். இவர் தேங்காய்சீனிவாசனின் மகள் வயிற்றுப் பேரன். பெயர் யோகி.

வீட்டில் படிக்கச் சொல்லி எவ்வளவோ வற்புறுத்தியும் கேட்காமல் தாத்தாவைப் போலவே சினிமாவுக்குவந்திருக்கிறார் யோகி.

ஆர்.வி. உதயகுமார், தரணி ஆகியோரிடம் அஸிஸ்டெண்டாக இருந்த நாகு என்பவர் இயக்கப் போகும் இடியட்என்ற படத்தில் அறிமுகமாகிறார் யோகி.

யோகிக்கு ஜோடியாக ரெஜினா என்ற மலையாளத்து பிகர் ஹீரோயினாக புக் ஆகியிருக்கிறார். இவரும் சின்னப்புள்ளையில் இருந்தே சினிமாவுக்கே தன்னை அர்ப்பணித்தவராம்.

கண்டநாள் முதல் படத்தில் லைலாவுக்கு தங்கச்சியாக நடித்திருந்த ரெஜினாவுக்கு இதில் ஹீரோயின் புரமோஷன்கிடைத்திருக்கிறது. ஜகஜகவென இருக்கிறார் ரெஜி. விட்டுக் கொடுத்து நடிக்க ரெடியாக இருக்கிறாராம்.ஒத்துழைப்புகள் மூலம் கோலிவுட்டில் நங்கூரம் பாய்ச்சிவிடலாம் என்ற நம்பிக்கையோடு இருக்கிறார்.

படத்துக்கு இடியட் என்று பெயர் வைத்த நாகுவை ஓரங்கட்டினோம். என்னங்க இது தலைப்பு என்று கேட்டால்,படத்துக்கும் தலைப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை சார் என்று போட்டு உடைத்தார்.

செல்லமான தோழி, மனதை வென்ற பெண் தனக்குப் பிடித்தவனை ராஸ்கல், லவ்லி பூல் என்றெல்லாம்திட்டுவதில்லையா? அது என்ன திட்டா? அது அன்பு சார்.

அது மாதிரி தான் இந்த இடியட்டும். ஹீரோவை காதலிக்கும் பெண், தன் காதலனை செல்லமாய் கூப்பிடும்வார்த்தை தான் இடியட். இது அன்பு சீண்டல் சார்.. அதான் அதையே தலைப்பாக வைத்துவிட்டோம் என்றுவெளக்கம் சொன்னார்.

மேலும் நாம் கேட்காமலேயே, ரெஜினாவை பாராட்டோ பாராட்டு என்று பாராட்டினார் நாகு. பொண்ணு ரொம்பநல்லா நடிக்குது. சொல்றபடி கேட்டு செய்யுது. ரெஜினாவுக்கு ரொம்ப நல்ல எதிர்காலம் இருக்கு என்றார்.

இடியட் என்ற நல்ல பெயரில் ஏற்கனவே தெலுங்கு, கன்னடத்தில் படங்களை எடுத்துவிட்டார்கள். தமிழில்அந்தக் குறையை நாகு போக்கிவிட்டார்.

ஆனால், அந்த இடியட்களுக்கும், இந்த இடியட்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லையாம்.

More from Filmibeat

Read more about: regina and yogis idiot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X