»   »  அழகான ஜின்னு, அதுக்கேத்த டின்னு!

அழகான ஜின்னு, அதுக்கேத்த டின்னு!

Subscribe to Oneindia Tamil

நெஞ்சிருக்கும் வரை படத்தைப் பார்க்கப் போகும் ரசிகர்களின் நெஞ்சு இருக்கும்வரை, துடிக்க வைக்கப் போகிறது, அப்படத்தில் இடம் பெறப் போகும் ரேகாவின்கும் கும் டான்ஸ்.

இந்தியில் நிறையப் படங்களை தயாரித்த நிறுவனம் பாபா பிலிம்ஸ். இப்போது முதல்முறையாக தமிழுக்கு வந்துள்ளது. பல படங்களில் சட்டத்தை சகட்டுமேனிக்குகரைத்துக் கொடுத்து பல படம் எடுத்த எஸ்.ஏ.சந்திரசேகர்தான் இந்தப் படத்தையும்எடுக்கிறார். நெஞ்சிருக்கும் வரை என்பதுதான் படத்தின் பெயர்.

சித்திரம் பேசுதடி நரேன்தான் ஹீரோ. கூட ஜோடி போடுவது தீபா. தீயாக இருக்கும்தீபா, ரசிக நெஞ்சங்களை பதற வைப்பதற்காக பஞ்சாபிலிருந்து பறந்து வந்துள்ளார்.படத்தோட கதை எண்ணங்கண்ணான்னு எஸ்.ஏ.சி.யிடம் கேட்டால், ஒரு ஆட்டோடிரைவரின் வாழ்க்கைதான் இப்படத்தின் கதை என சுருக்கிக் கொண்டார்.

படத்தின் நாயகி தீபாவுக்கு கிளாமர் சைடில் ஜொலிக்கக் கூடிய வாய்ப்புகளைநிறையக் கொடுத்துள்ளார். அது போதாதுன்னு நினைத்தாரோ என்னவோ எதுக்கும்டிரிபிள் ஸ்டிராங்காக இருக்கட்டுமே என்று நினைத்து மேலும் இரண்டு குத்தாட்டக்குமரிகளை கூட்டி வந்து கும்மியடிக்க வைத்துள்ளார் எஸ்.ஏ.சி.

அதில் ஒருவர் மும்பை சுந்தரி. இன்னொருவர் புன்னகைப் பூ என்று ஒரு படம்வந்ததே, அந்தப் படத்தின் நாயகிகளில் ஒருவரான ரேகா. சும்மா சொல்லக்கூடாதுங்காணும், ரேகா பின்னி பிசைந்தெடுத்திருக்கிறாாராம் குத்துப் பாட்டில்.

அடடே என்று ரசிகர்கள் தொடை தட்டி தாளம் போட்டு தம் பிடித்து ரசிக்க வைக்கும்வகையில் படு அட்டகாசமாக வந்திருக்கிறதாம் இந்தப் பாட்டு. இந்தக்குத்துப்பாட்டுக்காக எஸ்.ஏ.சி. தேர்வு செய்த பாட்டு, ரொம்பப் பழைய பாட்டானஅழகான பொண்ணுதான், அதுக்கேத்த கண்ணுதான் என்ற அட்டகாசமான பாட்டைஅப்படியே குத்துப் பாட்டாக்கி உல்டா செய்துள்ளார்களாம்.

ஹைதராபாத்தில் இந்தப் பாட்டை படமாக்கவுள்ளனராம். அப்பாட்டுக்காக ரேகா,கும்ஸாக ஆடி ரவ்ஸ் பண்ண காத்திருக்கிறாராம். அவரது ஆட்டத்தைப் பார்ப்பவர்கள்அழகான ஜின்னுதான், அதுக்கேத்த டின்னுதான் என்று கண்டிப்பாக மாற்றிப்பாடுவார்கள். அவ்ளோ ரம்யம் ரேகா!

ரேகா, ஜல்தி ரா ரா!

Read more about: rekha in nenjurkkum varai
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil