மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் அப்டேட்.. ஐதராபாத் ஷூட்டிங்கில் இந்த நடிகரும் இணைஞ்சிருக்காராம்!

By

சென்னை: மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தின், ஐதராபாத்தில் படப்பிடிப்பில் நடிகர் ரியாஸ்கான் இணைந்துள்ளார்.

கல்கியின் புகழ்பெற்ற நாவலான 'பொன்னியின் செல்வனை' சினிமாவாக்கி வருகிறார் இயக்குனர் மணிரத்னம். தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாள மொழிகளில் படம் உருவாகிறது.

விக்ரம், சரத்குமார், ஜெயம் ரவி, கார்த்தி, ஜெயராம், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, லால் உட்பட ஏராளமான நடிகர், நடிகைகள் நடிக்கின்றனர்.

ஏ.ஆர்.ரகுமான் இசை

ஏ.ஆர்.ரகுமான் இசை

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இதன் ஷூட்டிங் தாய்லாந்தில் பிரமாண்ட செட் அமைத்து நடந்து வந்தது. அங்கு நடந்த படப்பிடிப்பில் கார்த்தி, ஜெயம் ரவி, ஜெயராம், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி உட்பட பல நடிகர், நடிகைகள் கலந்துகொண்டனர். இந்நிலையில், படக்குழு ஷூட்டிங்கை முடித்துவிட்டு பொங்கலுக்கு முன் சென்னைத் திரும்பியது.

கேரக்டர்கள்

கேரக்டர்கள்

இந்தப் படத்தில் நந்தினியாக, ஐஸ்வர்யா ராயும், பூங்குழலியாக ஐஸ்வர்யா லட்சுமியும், சுந்தரச் சோழனாக சரத்குமாரும் ஆழ்வார்க்கடியான் நம்பியாக ஜெயராமும் சின்ன பழுவேட்டைரையராக ரகுமானும் ஆதித்த கரிகாலனாக விக்ரமும் வந்தியத் தேவனாக கார்த்தியும் குந்தவையாக, த்ரிஷாவும் அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவியும் நடிப்பதாகக் கூறப்படுகிறது.

ஐதராபாத்

ஐதராபாத்

இதன் அடுத்தக் கட்டப்படப்பிடிப்பு சென்னையில் தொடங்கும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் இதன் படப்பிடிப்பு புதுச்சேரியில் நடந்தது. அங்கு ஜெயம் ரவி, விக்ரம் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டன. இதையடுத்து ஐதராபாத்தில் கடந்த 8 ஆம் தேதி முதல் ஷூட்டிங் தொடங்கி இருக்கிறது.

ரியாஸ் கான்

ரியாஸ் கான்

ஜெயம் ரவி, கார்த்தி உள்ளிட்ட நடிகர்கள் அதில் பங்கேற்கிறார்கள். இதற்காக ராமோஜிராவ் பிலிம்சிட்டியில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டுள்ளது. அதில் படப்பிடிப்பு நடக்கிறது. இங்கு இந்த மாதம் முழுவதும் ஷூட்டிங் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இந்தப் படத்தில் நடிகர் ரியாஸ் கானும் இணைந்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X