இறுதிக் கட்டப் படப்பிடிப்பில் ஜெயம் ரவி - ஹன்சிகாவின் ரோமியோ ஜூலியட்!
மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் பட நிறுவனம் சார்பாக எஸ்.நந்தகோபால் மிக பிரமாண்டமான முறையில் தயாரிக்கும் படம் "ரோமியோ ஜூலியட்" படத்தின் பெருமளவு ஷூட்டிங் முடிந்தது.
ஜெயம் ரவி - ஹன்சிகா நடிக்கும் இந்தப் படத்தில், பூனம் பாஜ்வா இன்னொரு நாயகியாக நடிக்கிறார்.
மதன் கார்க்கி, தாமரை பாடல்களை எழுத டி இமான் இசையமைக்கிறார். கதை, திரைக்கதை எழுதி இயகுகிறார் லக்ஷ்மன்.

படம் பற்றி இயக்குனர் லஷ்மன் கூறுகையில், "படத்தின் பெரும் பகுதி படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. இறுதிகட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்றுகிறது. ஜெயம்ரவி - ஹன்சிகா பங்கேற்கும் காட்சிகள் அங்கே அதிக பொருட் செலவில் படமாக்கப்படுகிறது.
படு ஜாலியான இளமை துள்ளல் படமாக ரோமியோ ஜூலியட் உருவாகிறது.
பாஸ் என்கிற பாஸ்கரன் மாதிரியான காமெடி இதில் இருக்கும். இமான் இசை இப்போது எல்லா படங்களிலும் பக்கபலமா இருக்கிறது. இந்த படத்தின் பாடல்கள் அவ்வளவு இனிமையாக இருக்கிறது.
இந்த பாடல்கள் மூலம் இமானுக்கு ஹிந்தி படத்தின் கதவு திறக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. விரைவில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது," என்றார்.


Click it and Unblock the Notifications











