ஒரு பொண்ணு.. ரூபா பரபரப்பாக ஆரம்பிக்கப்பட்ட ஒரு பொண்ணு ஒரு பையன் படம் கேரளாவில் மடமடவென தயாராகிக்கொண்டிருக்கிறது.அன்னை பவானி கிரியேசன்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கும் படம் இது. படத்தை இயக்குவது நரேன்தெய்வநாயகம்.இகில் ஹீரோவாக சந்தீப் அறிமுகமாகிறார். ஹீரோயினுக்காக பல பேரைப் பார்த்து இறுதியில் இறுதிசெய்யப்பட்டவர் ரூபா. இவரது ஒரிஜினல் பெயர் ஸ்வேதா. ஊரு.. வேறு எதுவாக இருக்க முடியும்? கேரளாவேதான். மிகப் பிரபலமான தெலுங்கு இயக்குனர் கே.விஸ்வநாத் இதில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறாராம்.கார்த்திக் ராஜாவின் இசையில் பாடல்கள் மெலடியும் மெட்டல் மியூசிக்குமாகக் கலந்து ரொம்ப வித்தியசமானவிருந்தாக வந்திருக்கிறது.படப்பிடிப்பு பெரும்பாலும் கேரளாவிலேயே நடந்து கொண்டிருக்கிறது. மலையாளத்தில் சின்னச் சின்ன ரோல்களில் நடித்தவர் தானாம் இந்த ஸவேதா என்ற ரூபா. தமிழே கனவாகஇருந்ததால் கிளம்பி கோடம்பாக்கதுக்கு வந்து வாய்ப்புத் தேடி அலைந்து, ஓய்ந்து ஊருக்குப் போகஇருந்தவருக்கு திடீரென அடித்த அதிர்ஷ்டம் தான் ஒரு பொண்ணு ஒரு பையன்.இரு குடும்பங்களின் பின்னணியில் நகரும் கதையாம்.. லவ் ஸ்டோரி தான்.. அதுல ஒன்னும் சேஞ்ச் இல்ல..சின்னப் பொண்ணாக இருந்தாலும் விவரமாக இருக்கிறாராம் இந்த சின்ன சேச்சி ரூபா. நடிப்பு கேட்டா நடிப்பு,கிளாமர் கேட்டா நிறையே கிளாமர் என்று கேட்டதை அள்ளித் தருகிறாராம். ஏனுங்க.. ஒரு பையனும் பொண்ணுமா என்ன செய்றீங்க இந்தப் படத்துல என்று கேட்டால், ஒரு கன்னம் ரோஸ்கலராக மாறும் அளவுக்கு வெட்கப்படுகிறார் ரூபா. அப்படி என்னத்தைத் தான் செய்றீங்க என்று மீண்டும்கேட்டால், ரூபாவின் இன்னொரு கன்னமும் ரோஸ். பேசாமால் ரோசி என்று பெயர் வைத்திருக்கலாம் போல...இதுக்கு மேலே கேள்வி கேட்க ரோசியின்.. ஸாரி ரூபாவின் வெட்கம் நம்மை அனுமதிக்கவில்லை.

By Staff

பரபரப்பாக ஆரம்பிக்கப்பட்ட ஒரு பொண்ணு ஒரு பையன் படம் கேரளாவில் மடமடவென தயாராகிக்கொண்டிருக்கிறது.

அன்னை பவானி கிரியேசன்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கும் படம் இது. படத்தை இயக்குவது நரேன்தெய்வநாயகம்.

இகில் ஹீரோவாக சந்தீப் அறிமுகமாகிறார். ஹீரோயினுக்காக பல பேரைப் பார்த்து இறுதியில் இறுதிசெய்யப்பட்டவர் ரூபா. இவரது ஒரிஜினல் பெயர் ஸ்வேதா. ஊரு.. வேறு எதுவாக இருக்க முடியும்? கேரளாவேதான்.


மிகப் பிரபலமான தெலுங்கு இயக்குனர் கே.விஸ்வநாத் இதில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறாராம்.

கார்த்திக் ராஜாவின் இசையில் பாடல்கள் மெலடியும் மெட்டல் மியூசிக்குமாகக் கலந்து ரொம்ப வித்தியசமானவிருந்தாக வந்திருக்கிறது.

படப்பிடிப்பு பெரும்பாலும் கேரளாவிலேயே நடந்து கொண்டிருக்கிறது.


மலையாளத்தில் சின்னச் சின்ன ரோல்களில் நடித்தவர் தானாம் இந்த ஸவேதா என்ற ரூபா. தமிழே கனவாகஇருந்ததால் கிளம்பி கோடம்பாக்கதுக்கு வந்து வாய்ப்புத் தேடி அலைந்து, ஓய்ந்து ஊருக்குப் போகஇருந்தவருக்கு திடீரென அடித்த அதிர்ஷ்டம் தான் ஒரு பொண்ணு ஒரு பையன்.

இரு குடும்பங்களின் பின்னணியில் நகரும் கதையாம்.. லவ் ஸ்டோரி தான்.. அதுல ஒன்னும் சேஞ்ச் இல்ல..

சின்னப் பொண்ணாக இருந்தாலும் விவரமாக இருக்கிறாராம் இந்த சின்ன சேச்சி ரூபா. நடிப்பு கேட்டா நடிப்பு,கிளாமர் கேட்டா நிறையே கிளாமர் என்று கேட்டதை அள்ளித் தருகிறாராம்.


ஏனுங்க.. ஒரு பையனும் பொண்ணுமா என்ன செய்றீங்க இந்தப் படத்துல என்று கேட்டால், ஒரு கன்னம் ரோஸ்கலராக மாறும் அளவுக்கு வெட்கப்படுகிறார் ரூபா. அப்படி என்னத்தைத் தான் செய்றீங்க என்று மீண்டும்கேட்டால், ரூபாவின் இன்னொரு கன்னமும் ரோஸ். பேசாமால் ரோசி என்று பெயர் வைத்திருக்கலாம் போல...

இதுக்கு மேலே கேள்வி கேட்க ரோசியின்.. ஸாரி ரூபாவின் வெட்கம் நம்மை அனுமதிக்கவில்லை.

More from Filmibeat

Read more about: roopas oru pannu oru payyan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X