twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    10 கோடி ரூபாய் செட்டில் 'லெஜண்ட்' சரவணன் டான்ஸ்...

    By
    |

    சென்னை: லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் அதிபர், சரவணன் அருள் நடிக்கும் படத்துக்காக பிரமாண்ட செட் அமைத்து பாடல் காட்சி படமாக்கப்பட்டுள்ளது.

    லெஜண்ட் சரவணா ஸ்டோர் உரிமையாளர் சரவணன் அருள், விளம்பர படங்களில் நடித்து வந்தார். இப்போது அவர் ஹீரோவாக நடித்து வருகிறார். ஹீரோவாக நடிக்கும் படத்தின் தொடக்க விழா சென்னையில் நடந்தது.

    சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரங்களில் சரவணன் அருளை ஆட வைத்த, இயக்குநர்கள் ஜேடி - ஜெர்ரி இணைந்து இந்தப் படத்தை இயக்குகின்றனர். இவர்கள் உல்லாசம், விசில் படங்களை ஏற்கனவே இயக்கியவர்கள்.

    3 இடியட்ஸ்க்கு அப்புறம் கல்வி குறித்த தரமான படம் ஹீரோ.. இதோ 'ஹீரோ’ ட்விட்டர் விமர்சனம்!3 இடியட்ஸ்க்கு அப்புறம் கல்வி குறித்த தரமான படம் ஹீரோ.. இதோ 'ஹீரோ’ ட்விட்டர் விமர்சனம்!

    புது ஹீரோயின்

    புது ஹீரோயின்

    வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார். வைரமுத்து பாடல்கள் எழுதுகிறார். சரவணன் ஜோடியாக, நயன்தாரா உள்ளிட்ட முன்னணி ஹீரோயின்கள் நடிப்பதாகக் கூறப்பட்டது. ஆனால் கீத்திகா திவாரி எனும் மாடல் ஹீரோயினாக நடிக்கிறார்.

    ரசிகர் மன்ற போஸ்டர்

    ரசிகர் மன்ற போஸ்டர்

    அதற்குள்ளாகவே, சரவணன் அருள் பெயரில் ரசிகர் மன்றம் தொடங்கப்பட்டுள்ளது. உழைப்பின் கதாநாயகன் அருள் சரவணன் மாநில தலைமை ரசிகர் மன்றம் என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள இந்த மன்றத்தின் போஸ்டர்கள் சென்னையில் பரபரப்பாக ஒட்டப் பட்டிருந்தன. இந்த போஸ்டர், சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி வருகிறது.

    விவேக், யோகிபாபு

    விவேக், யோகிபாபு

    இந்தப் படத்தில் சரவணன் அருளுடன் பிரபு, விவேக் உட்பட பலர் நடிக்கின்றனர். இந்நிலையில் காமெடி நடிகர் யோகி பாபுவும் இதில் இணைந்துள்ளார். அவர் சரவணன் அருளின் நண்பராக படத்தில் நடிக்கிறார்.

    கீத்திகா திவாரி

    கீத்திகா திவாரி

    இந்நிலையில் இந்தப் படத்தின் பாடல் காட்சி சமீபத்தில் படமாக்கப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கான நடன கலைஞர்களுடன் லெஜண்ட் சரவணன், கீத்திகா திவாரி பங்கேற்று நடித்தனர். இதற்காக ரூ.10 கோடி செலவில் பிரமாண்டமாக அரண்மனைப்போல் அரங்கம் அமைத்து படப்பிடிப்பு நடந்தது.

    Read more about: arul அருள்
    English summary
    Legend' Saravanan, who owns retail chain New Saravana Stores, is making his Tamil film debut. yet to be titled movie written and directed by JD and Jerry. A huge set created for this movie with the cost of Rs.10 crore.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X