ஷூட்டிங்கை நிறுத்துங்க.. கார்த்தியின் சுல்தான் படத்திற்கு ஆர்எஸ்எஸ் எதிர்ப்பு.. சண்டையால் பரபர
Recommended Video
சென்னை: நடிகர் கார்த்தி நடிக்கும் சுல்தான் படத்திற்கு எதிராக ஆர்எஸ்எஸ் அமைப்பினர் போராட்டம் செய்தது பெரிய வைரலாகி உள்ளது.
நடிகர் கார்த்தி வரிசையாக நிறைய படங்களில் நடித்து வருகிறார். இவர் நடித்த கைதி படம் ஷூட்டிங் முடிந்து வரும் தீபாவளிக்கு வெளியாகும் நிலையில் உள்ளது.
அதேபோல் இவர் நடித்த பெயர் வைக்கப்படாத இயக்குனர் ஜீத்து ஜோசப் படம் நேற்று படப்பிடிப்பு முடிந்து, வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. கார்த்தி இந்த நிலையில் இன்னும் சில புதிய பெரிய பட்ஜெட் படங்களில் நடித்து வருகிறார்.

எப்படி சிக்கல்
அதேபோல் ரெமோ படத்தை இயக்கிய பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்து வருகிறார். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இந்த படத்திற்கு சுல்தான் என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது.

எங்கு நடந்தது
இந்த படத்தின் முக்கியமான காட்சிகள் திண்டுக்கல்லில் படமாக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சுல்தான் படத்தின் படப்பிடிப்பு நேற்று திண்டுக்கல்லில் உள்ள மலைக்கோட்டை பகுதியில் நடந்தது. அங்கு கோவிலுக்கு அருகிலேயே இதன் படப்பிடிப்பு நடந்தது.

என்ன சண்டை
யாரும் எதிர்பார்க்காத வகையில் சுல்தான் படத்தின் படப்பிடிப்பு பகுதிக்கு வந்த ஆர்எஸ்எஸ் அமைப்பினர், இந்த படப்பிடிப்பு அங்கு நடக்க கூடாது என்று கூறி சண்டை செய்தனர். படப்பிடிப்பு கருவிகளை உடைக்கவும் அவர்கள் சென்றனர். அங்கு இருப்பவர்களை தகாத வார்த்தைகளால் திட்டினார்கள். படக்குழு எவ்வளவு கேட்டும், ஆர்எஸ்எஸ் அமைப்பினர் அங்கு படப்பிடிப்பு நடக்க விடவில்லை.

காரணம் என்ன
படத்தின் பெயர் சுல்தான் என்று இருப்பதாகவும், இந்து கோவில் இருக்கும் பகுதியில் படத்தை எடுக்க கூடாது என்றும், இந்த படத்தில் வரலாற்று விஷயங்கள் தவறாக இருக்கிறது என்றும் கூறி ஆர்எஸ்எஸ் அமைப்பினர் அங்கு இருந்தவர்கள் உடன் சண்டை செய்தனர்

என்ன போலீஸ்
இதையடுத்து அங்கு போலீசார் குவிந்தனர். ஆனாலும் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் படத்தின் கதையை முழுமையாக கூற வேண்டும் என்று கூறி சண்டை போட்டனர். இதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு, படப்பிடிப்பு கருவிகள் எல்லாம் பேக் அப் செய்யப்பட்டது.


Click it and Unblock the Notifications











