37 கார்கள், 5 டிரக்குகள்... அடித்து நொறுக்கிய பிரபாஸ்!

நடிகர் பிரபாஸ் பல கார்கள் மற்றும் டிரக்குகளை அடித்து நொறுக்கும் காட்சி சவுதியில் படமாக்கப்பட்டது.

Recommended Video

பாகுபலியை மிஞ்சும் பிரபாஸ் சாஹூ சண்டை காட்சி- வீடியோ

சென்னை: அபு தாபியில் நடைபெற்று வரும் சாஹூ பட ஷூட்டிங்கில், 37 கார்கள் மற்றும் 5 டிரக்குகளை பிரபாஸ் அடித்து நொறுக்கும் காட்சி படமாக்கப்பட்டது.

UV கிரியேஷன்ஸ் சார்பாக வம்சி மற்றும் பிரமோத் இணைந்து தயாரிக்கும் படம் சாஹூ. இந்த படத்தை சுஜீத் இயக்குகிறார். ஹீரோவாக பாகுபலி பிரபாசும், ஹீரோயினாக ஸ்ரத்தா கபூரும் நடிக்கின்றனர். நடிகர் அருண் விஜய் வில்லனாக நடிக்கிறார்.

Saahu shooting going on in Saudhi

"சாஹூ" படத்தில் ரசிகர்கள் இதுவரை காணாத வகையில் வித்தியாசமான மாஸ் வேடத்தில் பிரபாஸ் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது அபு தாபியில் நடந்து வருகிறது. அபு தாபி அரசரின் சிறப்பு அனுமதி பெற்று சாஹூ படத்திற்காக பிரம்மாண்டமான ஆக்ரோஷமும் அதிரடியும் நிறைந்த ஒரு மெகா சண்டைக்காட்சியில் பிரபாஸ் நடித்து வருகிறார்.

ஒரே ஷெட்யுலாக 20 நாட்கள் எடுக்கப்படும் இந்த சண்டைக்காட்சிக்காக பாலைவனத்தில் சுட்டெரிக்கும் வெயிலில், வெப்பத்தையும் பொருட்படுத்தாமல் ஒளிப்பதிவாளர் மதியின் ஆறு கேமரா செட்டப்பில், கிட்டத்தட்ட 37 கார்களையும் 5 ட்ரக்குகளையும் பிரபாஸ் அடித்து நொறுக்கும் சண்டைக்காட்சி படமாக்கப்பட்டுள்ளது.

படத்தின் கலை இயக்குனராக சாபு சிரில் பணியாற்றி வருகிறார். படத்தொகுப்பு ஸ்ரீகர் பிரசாத் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் தயாராகிறது "சாஹூ".

பாகுபலி படத்தை அடுத்து பிரபாஸ் நடிக்கும் படம் என்பதால், சாஹூ படத்திற்கு ரசிகர்களிடையே மிகுந்த எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X