»   »  சதாவுடன் மோதும் தனிஷா!

சதாவுடன் மோதும் தனிஷா!

Subscribe to Oneindia Tamil

உன்னாலே உன்னாலே படத்தின் நாயகிகளான கஜோலின் தங்கச்சி தனிஷாவுக்கும், சதாவுக்கும் இடையிலான போட்டி முற்றி விட்டதாம்.

ஒளிப்பதிவாளர் ஜீவா இயக்கி வரும் படம் உன்னாலே உன்னாலே. இதில் இரண்டு ஹீரோயின்கள். ஒருவர் சதா. இன்னொருவர் கஜோலின்தங்கச்சி தனிஷா.

இருவருக்கும் இப்படத்தில் சமமான பாத்திரங்கள்தான். இருந்தாலும் யார் பெரியவர், யாருக்கு முக்கியத்துவம் என்பதில் இருவருக்கும் இடையேஷூட்டிங் ஆரம்பித்த நாளிலிருந்தே போட்டி முற்றி இப்போது கிளைமாக்ஸுக்கு வந்துள்ளதாம்.

போட்டியில் வெல்ல இருவரும் எடுத்த ஆயுதம் கிளாமர். நான் முந்தி, நீ முந்தி என்று இருவரும் கிளாமர் கோதாவில் குதிக்க ஜீவாவுக்குத்தான்லாபமாகிப் போனது.

திகட்டும் அளவுக்கு கிளாமரில் இருவரும் புகுந்து புறப்பட, யூனிட்டே புளகாங்கிதமடைந்து பூரிப்பாகிக் கிடக்கிறதாம்.

மேலும் தனிஷாவுக்கு பார்ட்டிகளும் பாய் பிரண்ட்சும் மிக அதிகமாகிவிட்டதால், அவரதுபோக்கைப் பார்த்து மிரண்டு போன அவரதுகுடும்பத்தினர் சினிமாவில் நடித்தது போதும் என்று கூறத் தொடங்கியுள்ளனராம். அத்தோடு நில்லாமல், சொந்தக்காரப் பையனுக்கும்,தனிஷாவுக்கும் கல்யாணம் செய்து வைக்க முடிவு செய்து விட்டார்களாம்.

ஓவராக ஊர் சுற்றப் போய் சொந்தக்காரப் பையன் கூட கிடைக்க மாட்டா என்பதால் இந்த முடிவா என்று தெரியாது. ஆனாலும், கல்யாணத்தைமுடிவு செய்து விட்டார்களாம்.

உன்னாலே உன்னாலே படத்தோடு அனேகமாக தனிஷாவுக்கு கால் கட்டு உறுதியாம்.

நிலவின் முகத்தை மட்டும் காட்டி விட்டு படக்கென முக்காடு போடுவது என்ன நியாயமோ?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil