twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சத்தாய்த்த சதா! ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி என்று கிராமத்தில் கூறுவார்கள்.அந்தப் பழமொழிக்கு சரியான உதாரணம் ஜென்மம் படக்குழுவினர் தான். சுரேஷ்கோபி, கோபிகா உள்ளிட்டோர் நடிக்கும் ஜென்மம் மலாையளப் படத்தில் ஒருபாட்டுக்கு டான்ஸ் ஆட நயனதாராவைக் கூப்பிட்டார்கள். அவரும் ஒத்துக்கொண்டார்.படப்பிடிப்புக்காக பொள்ளாச்சி வரைக்கும் வந்தவர், திடீரென முரண்டு பிடித்து ஆடமுடியாது என்று கூறி விட்டு ஊரைப் பார்க்கப் போய் விடடார்.கடுப்பாகிப் போன இயக்குநர் ஜோஷி நயனதாரவை கை கழுவி விட்டு சதாவைபிடித்துப் போட்டார். படம் இல்லாமல் ஓஞ்ச வாழைப் பழம் கணக்காக சும்மா கிடந்தசதாவுக்கு இது சந்தோஷத்தைக் கொடுத்தது.ஆனால் இந்த சந்தோஷம் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லையாம் சதாவுக்கு அல்ல,படக்குழுவினருக்கு.3 நாட்களில் உங்களது பாட்டை முடித்து விடுகிறோம் என்று பொள்ளாச்சிக்கு சதாவைவரவழைத்தனர். 2 நாள் படப்பிடிப்பு முடிந்த நிலையில், 3வது நாள் மழைகுறுக்கிட்டதால் படப்பிடிப்பை நடத்த முடியவில்லை.எனவே கூடுதலாக ஒரு நாள் கால்ஷீட் கொடுக்குமாறு சதாவை கேட்டுக் கொண்டனர்படக்குழுவினர்.ஆனால் முடியாது என்று கூறிவிட்டாராம் சதா. கண்டிப்பாக கால்ஷீட் வேண்டும்என்றால் கூடுதலாக ஒன்றரை லட்சம் கொடுத்தால் தான் கால்ஷீட் என்றும் கூறிஜென்மம் பட இயக்குநரை அப்செட் செய்துள்ளார் சதா.என்னடா இது சோதனை என்று குழம்பிப் பான அவர்கள் சதாவையும் விட்டுவிட்டால் பொழப்பு நாறிப்போய் விடும் என்று அவரிடம் தாஜா செய்துபார்த்துள்ளனர்.ஆனால் சதா இறங்கி வருவதாகத் தெரியவில்லை. இதையடுத்து வேறுவழியில்லாமல் கேட்ட தொகையை கொடுக்க ஒப்புக்கொண்டார்களாம்.அப்புறம் தான் மேக்கப்போட்டு ஷூட்டிங்கிற்குக் கிளம்பினாராம் சதா.இருந்தாலும் இப்படியெல்லாம் போட்டு நொங்கெடுக்கக் கூடாதுப்பா!

    By Staff
    |

    ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி என்று கிராமத்தில் கூறுவார்கள்.அந்தப் பழமொழிக்கு சரியான உதாரணம் ஜென்மம் படக்குழுவினர் தான்.

    சுரேஷ்கோபி, கோபிகா உள்ளிட்டோர் நடிக்கும் ஜென்மம் மலாையளப் படத்தில் ஒருபாட்டுக்கு டான்ஸ் ஆட நயனதாராவைக் கூப்பிட்டார்கள். அவரும் ஒத்துக்கொண்டார்.படப்பிடிப்புக்காக பொள்ளாச்சி வரைக்கும் வந்தவர், திடீரென முரண்டு பிடித்து ஆடமுடியாது என்று கூறி விட்டு ஊரைப் பார்க்கப் போய் விடடார்.

    கடுப்பாகிப் போன இயக்குநர் ஜோஷி நயனதாரவை கை கழுவி விட்டு சதாவைபிடித்துப் போட்டார். படம் இல்லாமல் ஓஞ்ச வாழைப் பழம் கணக்காக சும்மா கிடந்தசதாவுக்கு இது சந்தோஷத்தைக் கொடுத்தது.

    ஆனால் இந்த சந்தோஷம் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லையாம் சதாவுக்கு அல்ல,படக்குழுவினருக்கு.

    3 நாட்களில் உங்களது பாட்டை முடித்து விடுகிறோம் என்று பொள்ளாச்சிக்கு சதாவைவரவழைத்தனர். 2 நாள் படப்பிடிப்பு முடிந்த நிலையில், 3வது நாள் மழைகுறுக்கிட்டதால் படப்பிடிப்பை நடத்த முடியவில்லை.எனவே கூடுதலாக ஒரு நாள் கால்ஷீட் கொடுக்குமாறு சதாவை கேட்டுக் கொண்டனர்படக்குழுவினர்.

    ஆனால் முடியாது என்று கூறிவிட்டாராம் சதா. கண்டிப்பாக கால்ஷீட் வேண்டும்என்றால் கூடுதலாக ஒன்றரை லட்சம் கொடுத்தால் தான் கால்ஷீட் என்றும் கூறிஜென்மம் பட இயக்குநரை அப்செட் செய்துள்ளார் சதா.என்னடா இது சோதனை என்று குழம்பிப் பான அவர்கள் சதாவையும் விட்டுவிட்டால் பொழப்பு நாறிப்போய் விடும் என்று அவரிடம் தாஜா செய்துபார்த்துள்ளனர்.

    ஆனால் சதா இறங்கி வருவதாகத் தெரியவில்லை. இதையடுத்து வேறுவழியில்லாமல் கேட்ட தொகையை கொடுக்க ஒப்புக்கொண்டார்களாம்.அப்புறம் தான் மேக்கப்போட்டு ஷூட்டிங்கிற்குக் கிளம்பினாராம் சதா.

    இருந்தாலும் இப்படியெல்லாம் போட்டு நொங்கெடுக்கக் கூடாதுப்பா!

      Read more about: sada stuns jenmam unit
      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X