அஜித் மாதிரியே சொல்பேச்சு கேட்காமல் காயம் அடைந்த சாய் தன்ஷிகா
Recommended Video

கோவை: படப்பிடிப்பில் பீர் பாட்டில் குத்தி நடிகை சாய் தன்ஷிகா காயம் அடைந்துள்ளார்.
கவுதம் கிருஷ்ணா இயக்கத்தில் சாய் தன்ஷிகா நடித்து வரும் படம் யோகி டா. கபாலி படத்தில் ரஜினியின் மகள் யோகியாக நடித்தார் தன்ஷிகா. தற்போது அந்த கதாபாத்திரத்தின் பெயரையே ஒரு படத்திற்கு தலைப்பாக வைத்துள்ளனர்.
இது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படம் என்பது குறிப்பிடத்தக்கது.

சண்டை
யோகி படத்தின் படப்பிடிப்பு கோவையை சுற்றியுள்ள பகுதிகளில் நடந்து வருகிறது. சண்டைக் காட்சியில் டூப் போடாமல் நானே நடிப்பேன் என்று கூறி நடித்துள்ளார் தன்ஷிகா. சண்டை காட்சிகளில் டூப் போட மறுத்து அவர் ரிஸ்க் எடுப்பது இது ஒன்றும் முதல் முறை அல்ல. எவ்வளவு கஷ்டமான காட்சியாக இருந்தாலும் அவரே நடிப்பார்.

மோதல்
நைட் கிளப் ஒன்றில் தன்ஷிகா ரவுடிகளுடன் மோதும் காட்சியை படமாக்கியுள்ளனர். அப்பொழுது பீர் பாட்டில் தன்ஷிகாவின் இடது கண்ணுக்கு கீழ் குத்தி அவர் காயம் அடைந்தார். உடனே அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தார்கள். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். இந்த சம்பவத்தால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.
சண்டை காட்சி
சுனில் குமார் தேசாய் இயக்கியுள்ள உட்கர்ஷா படம் தமிழ் மற்றும் கன்னடத்தில் ரிலீஸாக உள்ளது. அந்த படத்திலும் தன்ஷிகா ரிஸ்க் எடுத்து ஸ்டண்ட் காட்சிகளில் நடித்துள்ளார்.

தைரியம்
தன்ஷிகாவுக்கு நன்றாக தமிழ் பேச வரும், நடிப்புத் திறமை நிறையவே உள்ளது. மேலும் துணிச்சலும் உள்ளது. திறமை இருந்தும் அவரால் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற முடியாமல் உள்ளது.


Click it and Unblock the Notifications











