ஒட்டகங்களுடன் விளையாட்டு... சாட்டையடி சந்தோஷம் - சல்மானின் தபாங் 3 சூட்டிங் ஸ்பாட்
மும்பை: தபாங் 3 படத்தின் படப்பிடிப்புக்கு இடையில், நடிகர் சல்மான் கான் படக்குழுவினரோடு இணைந்து ஒட்டகங்களுடன் ஓடிப்பிடித்து விளையாடி வருகிறாராம். ராஜஸ்தானில் உள்ள நாடோடி மக்களிடம் சாட்டையால் அடிப்பதை கற்றுக்கொண்டு அதை போட்டோவாகவும் வீடியோவாகவும் எடுத்து அதை தனது இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டரில் போஸ்ட் செய்து வருகிறார்.
பல சர்ச்சைகளில் சிக்கி மீண்டு வந்துள்ள பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் தனது சுல்தான் படத்தின் வெற்றியை தொடர்ந்து பிரபு தேவா இயக்கத்தில் தபாங் படத்தின் 3ஆம் பாகத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை அவரது சகோதரர் அர்ஃபாஸ் கான் தயாரிக்கிறார்.
இப்படத்தில் சுதீப், சோனாக்ஷி சின்ஹா, அர்ஃபாஸ் கான், மஹி கில் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சாய் மஞ்ச்ரேக்கர் இப்படத்தின் மூலம் அறிமுகமாகிறார்.

பிரபுதேவா
2009ஆம் ஆண்டு வெளியான வான்டெட் படத்தில் தான் பிரபு தேவாவும் சல்மான் கானும் இணைந்தனர். அதன் பிறகு இருவரும் இணைவதற்கு வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பிரபு தேவாவின் இயக்கத்தில் சல்மான் கான் நடிக்கும் இரண்டாவது திரைப்படம் தபாங் 3. அதோடு பிரபு தேவா நான்கு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்திப் படத்தை இயக்க களமிறங்கியுள்ளார்.

உற்சாக சல்மான்கான்
இப்படத்தின் படப்பிடிப்பு ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. ஷூட்டிங் இடையில் அவர் படக்குழுவினரோடு இணைந்து அவர்களது கலாச்சாரம், மக்கள் என பலதரப்பட்ட புகைப்படங்கள் எடுத்து அதை தனது இன்ஸ்டாகிராம் மற்றும் சமூக வலைதளங்களில் போஸ்ட் செய்து வருகிறார்.
ஒட்டகங்களுடன் விளையாட்டு
உள்ளூர் மக்களிடமும் அவ்வப்போது பேசுவதோடு அவர்களோடு சேர்த்து புகைப்படங்கள் எடுப்பதோடு, விடியோக்களும் எடுத்து கொண்டு அவர்களை சந்தோசப்படுத்துகிறார். ஒட்டகங்களுடனும் ஓடிப்பிடித்து மகிழ்ச்சியோடு விளையாடியுள்ளார்.
நாடோடிகள்
அங்கு பசிக்காக தங்களை சாட்டையால் அடித்து கொள்ளும் நாடோடிகளிடம் இருந்து அவர்களது நுட்பங்களை கற்றுக்கொண்டு தந்திரத்துடன் தன்னை தானே சாட்டையால் அடித்துக்கொண்டார். அதை விடியோவாகவும் பதிவு செய்துகொண்டு அதை சமூக வலைதளங்களில் பகிர்ந்தும் கொண்டார்.

தபாங் 3
இதை யாரும் தனக்கு தானே அல்லது யாரிடமும் முயற்சி செய்யக்கூடாது என்றும் பதிவிட்டுள்ளார். இப்படி குதூகலத்துடன் நடைபெறும் தபாங் 3 திரைப்படம் டிசம்பர் 20ல் ரிலீஸ் ஆகும் என்று கூறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











